புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் பொதுமக்கள் கூடும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. இதனால் ஜனவரி 4ஆம் தேதி புதுச்சேரியில் அனைத்து தனியார் மற்றும் அரசு […]
Tag: #Puduchery
மாவட்ட ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீர் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியிலுள்ள வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் குடிநீர்பாட்டில், காபி போன்றவைகளை அலுவலக ஊழியர்கள் கொடுத்தனர். அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு பூர்வா கார்க் தனக்கு கொடுக்கப்பட்ட […]
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த கலைமாமணி எஸ்.எம். உமர் (95) திங்கள்கிழமை காரைக்கால் அவரது இல்லத்தில் காலமானார். காரைக்காலை பூர்வீகமாகக் கொண்ட இப்ராஹிம் மரைக்காயர் மகன் எஸ்.எம். உமர். முதலில் நியூட்டோன் ஸ்டூடியோவின் பங்குதாரரான,பின்னர் எஃப். நாகூரிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, தனது விடாமுயற்சியால் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற உயர்த்த நிலையை எட்டினார். அதுமட்டும் அல்ல வியத்நாம் சென்ற அவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏறத்தாழ 600 இந்திய மொழிப் படங்களை வியத்நாம் […]
எல்லா மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வாழ்த்து மடலாக ஒன்றை பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 16 மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸ்_ஸூம் , குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ்_ஸூம் பதிவாகியுள்ளது.வெப்ப சலனம் காரணமாகவும் காரைக்கால் அருகே வளிமண்டல கீழ்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகின்ற போதிலும் அடிக்கடி பல மட்டங்களில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]
புதுச்சேரி மாநில அரசின் 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி மாநில அரசின் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சட்ட பேரவையில் தொடங்கி, கவர்னர் கிரண்பேடி உரையாற்றி வருகிறார். வருகின்ற 28-ந் தேதி முதல்வர் நாராயணசாமி ரூ. 8,425 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு ஒன்றிணைந்து முடிவு செய்ய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் […]
புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் தென்னிந்தியாவில் முதன்முதலாக நமது மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச wifi வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதுச்சேரி இந்திரா காலனியை அடுத்த இந்திரா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் திறந்தவெளி வாகனத்தில் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தென் இந்தியாவிலேயே முதல்முறையாக […]
அடுத்த 3 நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல கர்நாடகாவிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் கர்நாடகாவில் இதுவரை 09 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரியின் 4 தாலுகாகளில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகம் […]
தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கிரண்பேடி பதிவிட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் […]
ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வறட்சிக்கு காரணம் […]
தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்கத்தின் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் கிரண் பேடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் […]