முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராச்சிலை கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்டநேரமாகியும் வெள்ளைச்சாமி வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு வெள்ளைச்சாமி சடலமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
Tag: Pudukkottai
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் தொழிலாளியான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை தொட்டுள்ளார். அப்போது திடீரென வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தீபக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் பாண்டி-சுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவிஸ் பாண்டி, வித்திஸ் பாண்டி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் 2 குழந்தைகளும் பாண்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் பாண்டி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை பார்த்த சகோதரர்கள் தந்தையை பின் […]
உடைந்த நிலையில் இருந்த ஆயிரம் ஆண்டு கால பழமையான அய்யனார் சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லட்சுமணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்டிதர் குடிவயல் கிராமத்தின் கண்மாயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீரனூர் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கூறும் போது இரண்டாக உடைந்த நிலையில் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலமும் உடையதாகும். பொதுவாக அய்யனார் சிலைகள் இடது காலை […]
புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் லஞ்சம் பெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியில் சாந்தநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் புரோகிதர்களிடமும் தலா ஆயிரத்து 600 ரூபாய் வாங்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து […]
புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெறும் 875 கிராம் எடையில் பிறந்த குழந்தையை அரசு மருத்துவர்கள் காப்பாற்றி நல்ல உடல்நலத்துடன் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மறவன்பட்டியை சேர்ந்த முத்துவீரன் என்பவரின் மனைவி இந்திராணிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் குறைமாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. வெறும் 175 கிராம் எடையுடன் பிறந்த அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படது. ஒரு வார காலத்தில் தீவிர சிகிச்சைக்கு […]
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவத்திற்கு, காதல் தோல்வி தான் காரணமா? என போலீசார் பெண்ணின் உறவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலுப்பூரைச் சேர்ந்த அந்த 17 வயதுடைய இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டு உத்திரத்தில் […]
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனாவில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 46 பேரும் சொந்த ஊர் திரும்பினர். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
புதுக்கோட்டை அருகே சாப்பாடு கொடுக்காமல் 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கும் கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணன்-செல்லாயி தம்பதியரின் மகளின் பெயர் தனலட்சுமி. 20 வயதான இவர் கடந்த 24-ஆம் தேதி இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்கு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பாமல் திடீரென மாயமாகி விட்டார். இதையடுத்து காணாமல் போன […]
நாளை தமிழ்நாடு முழுவதும் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக” சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகின்றது. போலியோவை முழுமையாக ஒழித்ததால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க, மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்து, அதன்படி 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு […]
சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது . புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நெடுஞ்சாலை ஓரம் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர் அருகே ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கால் முதல் இடுப்பு வரை எரிந்து நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் […]
குடி போதையில் குழந்தையை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து ஒப்படைத்தனர் . புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவமணையில் பிரசவவார்டுக்குள் நேற்று இரவு புகுந்த இளைஞர் அங்கிருந்த குழந்தை ஒன்றை தூக்கி ஓட முயற்சித்தார் .இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர் .இதை அடுத்து மருத்துவமனையில் இருந்த காவல் மையத்தை சேர்ந்த போலீசார் இளைஞரை மீட்டு கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . பிடிபட்ட நபர் வடசேரிபட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் […]
திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன் வெங்காயத்திற்கு […]
புதுக்கோட்டையில் பேத்தியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட சென்ற தம்பதியினரின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் – காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால், […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, […]
குற்றங்களைக் களைய பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றுவோம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண்சக்தி குமார் பதவியேற்றார். இவர் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்றாலும், ஐபிஎஸ் ஆவதுதான் இவரது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. முன்னதாக திருநெல்வேலியில் பணியாற்றிய இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இவர், “அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு புதுக்கோட்டையில் […]
50 வருடங்களாக புதுக்கோட்டை மக்களின் ஃபேவைரட்டாக முட்டை மாஸ் திகழ்ந்து வருகிறது. அவ்வாறு பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறவைக்கும் முட்டை மாஸ் பற்றி தான் இந்த சிறப்புத் தொகுப்பு! தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதாவது திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லிப்பூ, திண்டுக்கல் பூட்டு, சேலம் மாம்பழம், திருப்பதி லட்டு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு ருசியான சிறப்பு சேர்ந்துள்ளது. அப்படி ஒரு சுவையான உணவு […]
தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]
மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]
தேசிய அளவில் 19 மாநிலங்களுக்கு நேரடியாக சென்று குழந்தைகள் தொடர்பாக 5,000 குறைகள் கேட்டறியப்பட்டு, அவற்றில் 4,500 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்தவதை தடுக்க பயன்படும் வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பெற்றோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், […]
தமிழகத்தில் நேற்று இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடி , மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இடி , மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரும் செப்.3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ், ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 35 கடல் மைல் தூரத்தில் இரவு 11: 30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த […]
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்து செல்கின்றனர். இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற […]