இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் இருசக்கர வாகனத்தில் கோனாபட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காரில் பழனியப்பன் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் பழனியப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் […]
Tag: #puthukkottai
கோவிலில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பிற பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலின் உள்ளே புகுந்து […]
டிப்பர் லாரியில் மணல் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்றை அவர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் அதில் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி உரிமையாளரான சதீஷ் மற்றும் டிரைவர் மலைராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் […]
சங்கிலி பறிப்பு வழக்கில் தப்பிச் சென்றவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவியான சத்யா கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது சத்யா கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினரால் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொருவர் தப்பிச் சென்றுவிட்டார். அதன்பின் பிடிபட்டவரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]
மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் வடமாநிலத்தில் இருந்து வந்த டேனிஷ் படேல் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து சிறுவனை கொலை செய்த டேனிஷ் படேல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் […]
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பெரிய கனவாக இருப்பது காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்தான். இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள். இந்த திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. அதில் முதற்கட்டமாக காவிரியில் ஆரம்பித்து தெற்கு வெள்ளாறு பகுதிவரை சுமார் 118.45 கிமீ தூரம், இரண்டாவது கட்டமாக தெற்கு வெள்ளாறு ஆரம்பித்து வைகை […]
வயதான தாய் மற்றும் மாற்றுத் திறனாளியான மகளின் அவலத்தை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலங்கொண்டான்விடுதி பகுதியில் வசித்து வருபவர் காளியம்மாள். இவருடைய மகளான பாக்கியம் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஊர்ந்து கொண்டே செல்வார். இந்நிலையில் காளியம்மாளின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் தன் மகளை தினமும் இயற்கை உபாதை காரணங்களுக்காக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அருகிலுள்ள […]
கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிறை கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட புதுக்குளம், மயான கொட்டகை மற்றும் அரசுத் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான இடம் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே […]
வேப்பமரத்தில் வாலிபர் பிணமாக தொங்கியதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டியை சார்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகன் ஆனந்த் என்பவர் கடந்த 1 ஆம் தேதி வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை. பின்னர் மறுநாள் காலை நந்தகுமார் என்பவர் சின்னதுரையிடம் வந்து ஆனந்த் பண்ணை குட்டையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்குவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து ஆனந்தின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ஆனந்த் […]
போன் பயன்படுத்தியதற்கு தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் பகுதியை சார்ந்தவர் கருப்பையா. இவருடைய மகள் கோமதி தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். கோமதி வீட்டில் இருக்கும்போது வேலை செய்யாமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவருடைய தாயான மாரிக்கண்ணு கோமதியை அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் கோமதி எலி பேஸ்டை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை சிகிச்சைகாக குடும்பத்தினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]
அவித்த முட்டையில் இருந்து இறந்த கோழிக்குஞ்சு வெளி வந்ததை கண்ட மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் கூடிய அவித்த முட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது. அங்கன்வாடி குழந்தைகளுக்கும் இதே போல் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒருமுறை அறந்தாங்கியில் முட்டையைக் கொண்டு வந்து ஒப்படைப்பார். அந்த முட்டை மதிய உணவு திட்ட சத்துணவு மையங்களுக்கு […]
பாசஞ்சர் ரயிலானது எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றமடைந்ததால், பொதுமக்களுக்கு இதில் பயணிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயிலான, திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அதோடு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் அடைந்த இந்த ரயிலில் தற்போதுள்ள நடைமுறையின்படி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு […]
புதுக்கோட்டை அருகே 9 மாத ஆண் குழந்தையை ரூ 5 லட்சத்திற்கு விற்பனை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயல் என்ற கிராமத்தில் காடப்பன் மற்றும் செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம்பதியினருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஆண் குழந்தையை பிறந்து 4 நாட்கள் கழித்து 5,00,000 ரூபாய்க்கு […]
கீரமங்கலம் பகுதியில் தன உயிரை கொடுத்து 10 தொழிலாளர்களை வேண் டிரைவர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் குளமங்கலம் போன்ற கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வயல்வெளிகளுக்கு சென்று பணிபுரிந்து வருவது வழக்கம் இந்நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அப்பகுதிகளில் வரக்கூடிய சரக்கு வேனில் ஏறி சென்று பணியை முடித்துவிட்டு திரும்பி வருவர் இந்நிலையில் நேற்றைய […]