அடுத்தடுத்த வீடுகளில் பணம் மற்றும் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட த்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் ஊட்டியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து தனது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது 8 பவுன் தங்க நகை மட்டும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் ஊட்டி மத்திய போலீஸ் […]
Tag: # Puthukottai
மின் இணைப்பு பெட்டிக்குள் புகுந்த பாம்பை அடிக்கும் போது வீட்டில் உள்ள வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தக்குடிபட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இவருடைய வீட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் பாம்பை அடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு மின் இணைப்பு பெட்டிக்குள் […]
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கம்பன் நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், பூங்கா நகர், லட்சுமி நகர், கூடல் நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், கவிநாடு, தேக்காட்டூர், ஆட்டங்குடி, அம்மையார்பட்டி, லேனா விலக்கு, கடையக்குடி, செல்லுக்குடி, பெருஞ்சுனை, எல்லைப்பட்டி ஆகிய இடங்களில் எல்லாம் காலை 9 மணி முதல் மதியம் […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா, மகன்கள் தர்ஷன், அட்சயன் என அனைவரும் வல்லத்திரா கோட்டையில் நடைபெற இருந்த தனது உறவினர் வீடு திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் சித்தூர் பாலம் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த […]
ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்ராம்பட்டி பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாம்பரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நீலாம்பரி நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருந்துள்ளார். அதன்பின் நீலாம்பரி தன் தாய் வீட்டிற்கு வந்த போது திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடைய உறவினர் ஒருவர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் போது திடீரென […]
கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் மாணவ-மாணவிகளின் நடத்திய கலை நிகழ்ச்சிகளை அதிகாரிகள் கண்டு களித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவியாளர் தமிழ்வேந்தன், வருவாய் அலுவலர் ரம்யா தேவி, வேளாண்மை இணை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்குகளை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்துள்ளனர். இதில் மாணவர் மன்ற ஆலோசகர் விஜயகுமார் வரவேற்றுள்ளார். அதன்பின் […]
சரக்கு ஆடோவிற்கு தீ வைத்துவிட்டு சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குலப்பெண்பட்டி கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் தனது சரக்கு ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்குவதற்காக சென்றுவிட்டார். அப்போது நள்ளிரவில் தேவேந்திரனின் சரக்கு ஆட்டோவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றனர். இதனைபார்த்த அப்பகுதி மக்கள் தேவேந்திரனுக்கு தகவலளித்துள்ளனர். ஆனால் அவர் […]
கடையில் குட்காவை பதுக்கி வைத்த குற்றத்திற்காக அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் காந்தி தெருவில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல்லா என்ற தம்பி இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எதிரே பெட்டி கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த […]
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து தமிழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகு, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு 1,028 நியாயவிலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 187 பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு […]
ஓடும் பேருந்திலிருந்து வாலிபர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று சடையம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை அடைக்கலம் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் கீழப்பழுவூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார்த்திகேயன் என்பவர் ஓடும் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திகேயன் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்த சக பயணிகள் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீவிர […]
வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டியில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரூரில் வசித்து வரும் மோகன்பாபு என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பிரசாத் மோகன்பாபுவிடமிருந்து ரூ. 30 லட்சத்தை வாங்கிவிட்டு போலி விசாவை கொடுத்து ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து போலியான விசாவை கொடுத்ததையரிந்த மோகன்பாபு பிரசாத்திடம் சண்டை போட்டுள்ளார். அதன்பின் பிரசாத்திடம் பேச்சுவார்த்தை […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளவாய்பட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்காக காவல்துறையினர் கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்ணன் மீது […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்களூர் கிராமத்தில் பிச்சைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உறுமையா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் உறுமையா கந்தர்வகோட்டைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியாருக்குச் சொந்தமான பார்சல் சர்வீஸ் சரக்கு லாரி உறுமையாவின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் உறுமையா […]
பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை கிடைக்காததால் விவாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த வருடத்திற்கான பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி பல்வேறு கட்டமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மணமேல்குடியிலுள்ள வேளாண் அலுவலகத்தில் சென்னை இன்சூரன்ஸ் அதிகாரிகள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் வேளாண் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் […]
கணவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக மேலத்தானியம் பகுதியில் வசித்து வரும் இளஞ்சியம் மற்றும் அவரது உறவினர்கள் சென்றுள்ளனர். இளஞ்சியத்தின் கணவர் ஆனந்தன் என்பவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட விபத்தில் ஆனந்தன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ஆனந்தன் இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் அவரது […]
குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி சாலைகள் குண்டும் குழியுமான இருப்பதால் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்கராசு என்பவர் 1 வயது குழந்தையுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையிலிருந்த பள்ளத்தை பார்க்காமல் அவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் குழந்தை நீரில் மூழ்கியது. இதனை கண்ட அக்கம் […]
சாலையை கடக்க முயன்ற சிறுவன் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசர்குளத்தில் சேக் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு முஹம்மது அஸ்மர் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவனும் அவரது தாத்தாவும் சேர்ந்து சாலையோரத்தில் சரக்கு வாகனத்தில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுப்ரமணியபுரத்திலிருந்து அறந்தாங்கிக்கு அரசு பேருந்து வந்துள்ளது. அச்சமயம் […]
தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் கணேஷ் நகரில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் போதுமான சி.சி.டி.வி. கேமராக்களும், பாதுகாப்புக்கு காவல்துறையினரும் இருப்பதில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]
சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வட மதுரையிலுள்ள தனியார் பஞ்சு மில்லில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி வீட்டிற்கு வந்த சிறுமி மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக 3 நபர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எல்.என்.புரத்தில் ஆட்டோ டிரைவரான பால நிகேதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடிக்கு பழங்கள் ஏற்றுவதற்காக சவாரி சென்றுள்ளார். அச்சமயம் கீழாநிலைக்கோட்டை அருகில் அவர் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் பாலநிகேதனை வழிமறித்து முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பால நிகேதன் மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது […]
சிறுமியை சரமாரியாக தாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் தம்பதியினரை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் கிராமத்தில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை மர்ம கும்பல் ஒன்று கைபேசியை திருடியதாக கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து குலமங்கலம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்த குற்றத்திற்காக சுப்பிரமணியன், பால்ராஜ், ஞானமணி மற்றும் […]
பட்டப்பகலில் வீடுபுகுந்து திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டையில் ஹக்கீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் மாலை 5 மணி அளவில் அங்கிருந்து கிளம்பி தங்களது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த […]
ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு சாலை அமைத்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த காலனியில் வசித்து வந்த சின்னையா என்பவர் உடல்நலக் குறைவினால் திடீரென மரணமடைந்தார். இவரது சடலத்தை எடுத்துச் செல்ல சரியான சாலை வசதி இல்லை. எனவே ஆதிதிராவிடர் குடியிருப்பிலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ள மயானத்திற்கு இடையிலுள்ள குளம் மற்றும் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அங்கு நெல் விவசாயம் நடத்தி வரும் நெற்பயிர்களை […]
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றதை தொடர்ந்து அந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் […]
வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டையில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். அவரிடம் தஞ்சாவூரில் வசித்து வரும் ஜெயகுமார் மற்றும் அவரது மனைவியான சுஜாதா ஆகியோர் தங்களது மகனுக்கு மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். அந்த தம்பதியினர் செல்லப்பனிடமிருந்து பணத்தை வாங்கி பல நாட்களாகியும் வேலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் அவர் […]
வங்கி அதிகாரி போல பேசி பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி போலவே மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அதன்பின் அந்த நபர் பழனிசாமியிடம் அவரது கிரெடிட் கார்டு பற்றிய விவரம் குறித்து கேட்டுள்ளார். இதனால் கைப்பேசியில் பேசிய நபர் உண்மையாகவே வங்கியில் […]
மின்சாரம் தாக்கி 8 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புனல்குளம் கிராமத்தில் விவசாயி முத்தரசன் என்பவர் தனது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சில ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது மனைவியான மஞ்சுளா அங்குள்ள வயல்வெளிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மின்சார கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. அந்த வழியில் மேய்ந்து கொண்டிருந்த […]
17 வயதுடைய மாணவியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருகோகர்ணம் பகுதியில் சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ்-2 படித்து வரும் மாணவியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதன்பின் இது பற்றி குடும்பத்தாரிடம் கூறி தகராறில் ஈடுபட்டதோடு, மாணவியை தாக்கியுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் […]
தமிழ் வழியில் பயின்ற கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் நிர்வாகம் மாணவிகளை அலைக்கழிப்பு செய்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்களுக்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமென கல்லூரிக்கு விண்ணப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழ் வழியில் […]
தக்காளி விலை உயர்வால் விவசாயி அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விறுவிறுப்பாக விற்பனை செய்து வருகின்றனர். மக்கள் அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்ற அத்தியாவசியப் பொருட்களில் தக்காளி ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையில் தக்காளியின் விலை கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அதன்பின் விலை கட்டுப்படி ஆகாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து சாகுபடிப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் காணப்படுகிறது. அதன்பின் தற்போது […]
காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் ரஞ்சித்குமார், ரேவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரேவதியின் தந்தையான நல்லதம்பி என்பவர் தனது மகளையும், இரண்டு பேரக் குழந்தைகளையும் தன்னுடன் பளுவான்குடியிருப்பு பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து ரேவதி கடந்த 14-ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து நல்லதம்பி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் முன்பு அஞ்சல் ஊழியர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய அஞ்சல்,தேசிய தபால் ஊழியர் மற்றும் கிராமிய தபால் ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். இதனையடுத்து அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரான குமார் என்பவர் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் அஞ்சல் ஊழியர்கள், அஞ்சல் ஊழியர் சங்க […]
தீடிரென தெருவிளக்குகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல்-சித்தன்னவாசல் செல்லும் சாலையில் வரிசையாக பத்துக்கும் மேலான தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் திடீரென ஒவ்வொன்றாக வெடித்து சிதறியுள்ளது. இதனையடுத்து அச்சத்தில் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் ஆய்வு செய்ததில் உயர் அழுத்த மின்கம்பியோடு தெருவிளக்கிற்க்கான மின்கம்பி உரசியதால் தான் விளக்குகள் வெடித்தது […]
10 கோடி ஆண்டு பழமையான கல்மரம் ஆய்வில் கண்டுபிடிக்கபட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நகரிமேட்டிலுள்ள ஒரு பகுதியில் கூழாங்கல் சுண்ணாம்புக் கற்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்த பகுதியினை தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் தொல்லியல் ஆய்வாளரான பாண்டியன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் 15 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் உடைய கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்மரம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இனியனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கல்மரமானது 10 கோடி ஆண்டுகள் பழமையான […]
கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேல புதுவயல் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மதுமிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் தனது கணவர் வீட்டில் போதிய வசதி இல்லாததால் மதுமிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் பூச்சிமருந்தை […]
2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்த குற்றத்திற்காக 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டங்காடு கடற்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மணமேல்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அலையாத்தி காடுகளில் 2 கிலோ கஞ்சாவை மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அதனை பதுக்கி வைத்திருந்த […]
மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து மின்சார வாரிய ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மின்வாரியத்தில் சிறப்பு நிலை ஆக்க முகவராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன். இவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர் பணி ஓய்வு பெற இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் அவரை கீரனூர் கோட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர். இந்த உத்தரவை பிறப்பித்த புதுக்கோட்டை மின்சார மேற்பார்வை பொறியாளர், […]
சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுமாவடி முறுக்குவயல் கடற்கரைப் பகுதியில் புதுக்கோட்டை தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் முறுக்குவயல் கடற்கரைப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 8 பேரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக தனிப்பிரிவு போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து மணமேல்குடி காவல்துறையினர் 8 பேரையும் கைது […]
கூலித்தொழிலாளியின் குடிசை வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் குபேந்திரன் என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள், பணம், துணிகள், ஆதார் அட்டை, […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் பிச்சை என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும் இவருடைய மனைவியும் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளனர். மேலும் அவருடைய இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். பின்னர் பள்ளி முடிந்ததும் பிச்சையின் மகள்கள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 500 ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் […]
வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டனூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் அபாயகரமான வளைவு ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒக்கூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வளைவின் கீழ் உள்ள ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது […]
ஓடும் பேருந்தில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மனைவி அகிலாண்டம் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து வீடு திரும்பும்போது தனியார் பேருந்து ஒன்றில் ஏறி பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவர்தான் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அகிலாண்டம் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]
மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி. இவர் தனது சொந்த வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பின் அவர் திரும்பி வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் டிராக்டர் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் கிருஷ்ணசாமி படுகாயமடைந்து […]
வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குணபதிமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அஞ்சம்மாள். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் அஞ்சம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று அஞ்சம்மாள் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்பு மறுநாள் காலை அஞ்சம்மாள் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்திருப்பதை கண்டு […]
கால் தவறி குளத்தில் விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் வசித்து வந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையில் வாராப்பூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் […]
தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று கம்பி கட்டி கொண்டிருக்கும் போது தவறுதலாக அவருடைய கை விரல் மின் கம்பியின் மீது பட்டுள்ளது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் அவர் […]
குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வசதி வேண்டி ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம், அய்யனார்புரம், காந்திநகர் போன்ற பகுதிகளில் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படுவது இல்லை. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் ஆலங்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கழிவுநீர் கலந்த […]
மதுபழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் இவர் அடிக்கடி நோய்வாய்ப் பட்டுள்ளார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை தொடர்ந்து விடாமல் இருப்பதால் அவருடைய மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பழனிச்சாமி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து அதை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். […]
மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி காவல் நிலையத்திற்கு முள்ளங்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் முள்ளங்குறிச்சி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பாண்டியன் மற்றும் சரவணன்ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 மது […]