அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக வேண்டும், மேலும் முறையான கால ஊதியம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து […]
Tag: # Puthukottai
கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக அங்கு வேலை இல்லாததால் அவர் தனது சொந்த ஊருக்கே வந்துள்ளார். அவர் குடும்ப செலவுக்கு பணம் இல்லாததால் கடந்த 11 மாதங்களாக அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து மாசி திருவிழாவும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றுள்ளது. இந்த பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் பூ தண்டுகளை ஏந்தி நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு சாத்தி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் மாவிளக்கு எடுத்து […]
தங்கையின் காதலனை அடித்துக்கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லையா. இவர் கோவையில் இருக்கும் ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதேபகுதியில் வசித்து வருபவர் ஜான்சி. இவரும் நல்லையாவும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ஜான்சியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் ஜான்சியை அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இருவரும் தன் காதலை […]
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் சுமார் 3 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியை சார்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீனாட்சி சுந்தரம். இவர் தற்போது சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது 6௦ ஆம் கல்யாண தினத்தை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு இவர் கல்யாண தினத்தை கொண்டாடிவிட்டு குலதெய்வ […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியைச் சார்ந்தவர் செங்கதிர்வேல். இவர் நேற்று தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் நண்பர்களான வசந்த் மற்றும் ராகுலை அழைத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அதே சாலையில் நாகப்பட்டினத்தை நோக்கி ராஜேந்திரன் என்பவர் காரில் வந்துள்ளார். பின்னர் திடீரென்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ராஜேந்திரனின் […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வி.ஏ.ஓ அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மடவாளம் கிராமத்தைச் சார்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். தற்போது இவருடைய மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஞானபிரகாசம் நேற்று அவரது வீட்டின் அருகே நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வழி மறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த அவர் […]
தனியார் பேருந்து மோதி அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்குடிபட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன். இவருடைய மகன் சிவசங்கர் என்பவர் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தன்னுடைய சொந்த வேலைக்காக நேற்று மதியம் இழும்பூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று சிவசங்கரின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரை அருகில் உள்ளவர்கள் தனியார் […]
புதுக்கோட்டை விளையாட்டு அரங்கத்தில் உடற்தகுதி தேர்வுக்காக இளைஞர்களும் இளம்பெண்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றுள்ளது. இந்த எழுத்து தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 12,345 பேர் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து உடல்தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு எழுதிய இளைஞர்கள், இளம் பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சியில் […]
இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பட்டியை சேர்ந்தவர் திருமாறன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று பட்டுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமாறனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை […]
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு தலைமை வகித்தார். மேலும் புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். […]
புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை பகுதி அருகே வசித்து வருபவர் செல்லையா. இவருக்கு வயது 70. இவரது மகள் சாந்தி. இவருக்கு வயது 40. நீண்ட வருடங்களாக தனது மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார் செல்லையா. ஆனால் மகள் சாந்தி மாற்றுத்திறனாளி என்பதாலும், மீறி அவரை பெண் கேட்பவர்கள் அதிக வரதட்சணை கேட்டு […]
புதுக்கோட்டையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையின் காய்கறி சந்தையில் காய்கறி வாங்க வந்த மூன்று நபர்கள் 2000 கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றி சென்றதால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி கணேஷ் நகர் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தார். புகாரை ஏற்ற அதிகாரிகள் உடனடியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், ஜெயராஜ் , […]
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடைபெறும் விழாவாகும். இந்த தேரோட்ட நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து விழாவை சிறப்பித்து விட்டு சாமியை தரிசனம் செய்து செல்வர். அந்த வகையில் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவிற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், அன்றைய தினம் […]
புதுக்கோட்டையில் 13 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜூஸ் கடை ஒன்று உள்ளது. அதில் ஒருவர் மதியம் ஜூஸ் சாப்பிட்டு இரண்டு நூறு ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டுகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. இதையடுத்து அந்த நோட்டுகளை பற்றி கேட்கும்போது அவர் முரண்பாடாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த ஜூஸ் கடை உரிமையாளர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் […]
புதுக்கோட்டையில் மனைவியை நண்பனுடன் சேர்ந்து கொன்று 3 வருடம் கணவன் நாடகமாடி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரண்யா. இவரும் அதே பகுதியை அடுத்த பள்ளத்திவிடுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் கடந்த 2005 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் ஆகும். இவ்வாறு இருக்கையில் […]
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் நாயொன்று வெறிபிடித்து திடீரென அப்பகுதியில் உள்ள பலரைக் கடித்து துரத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஓடியுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருமயம் நெடுஞ்சாலை வழியாக சுமார் ஏழு மீட்டர் தூரம் வரை பார்க்கும் எல்லோரையும் அந்த நாய் துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் ராயபுரம் […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடக்கு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க தடை விதிக்க கோரி கடந்த 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் தொடர்பாக எந்த பணியும் தொடங்கவில்லை என்றும், உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் […]
புதுக்கோட்டையில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய இளைஞர் வரும் வழியில் பைக் நிலை தடுமாறி மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் விராலிமலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அன்னவாசல் சித்தன்ன மலை பகுதியில் சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். வரும் வழியில் சித்தூர்பட்டி அருகே வேகமாக […]
மாவட்ட நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புறங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் 38 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓரளவிற்கு அனைவரும் பாதாளச் சாக்கடை இணைப்பை செய்து முடித்துவிட்டனர். தற்போது பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியிருக்கிறது. மழைக்காலங்களில் மட்டுமல்லாமல், வெயில் காலங்களிலும் இந்தக் கழிவு நீர் வெளியேற்றம் இருந்துவருகிறது.தற்போது டெங்கு காய்ச்சல் பரவ […]
புதுக்கோட்டை கடைமடை பகுதி வரை காவேரி நீரை கொண்டுவர தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை பூமி பூஜை நடத்தி பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,காவிரி கடைமடை பகுதிகளில் ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனால் கடைமடை பகுதி வரை காவிரி நீர் வந்து […]
அறந்தாங்கியில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை முழுதும் தீயானது பரவியது . மேலும் , அருகில் இருந்த கண்ணாடி கடை மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் தீ பரவியது. இதனால் மூன்று கடைகளிலும் தீ […]
நோயாளிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக பேட்டரி பொருத்தப்பட்ட கார் வசதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவ கல்லூரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1கிமீ வரை நடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது வெயில் காலம் என்பதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிற நிலையில், பஸ் நிலையத்தில் இருந்து நடந்து […]