விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதை விட்டு விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் இரும்பு ஆணிகளை அடித்திருப்பது சாலை தடுப்புகளை அமைத்து உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவோடு விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க எண்ணாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சுவரை எழுப்பாமல் பாளத்தை கட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Tag: RahulGandhi
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரில் பார்வையிட்ட காங்கிரஸ் திரு ராகுல்காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதுணையாக இருப்பேன் என கூறினார். பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சமாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். விழாவில் இடையே பேசிய அவர் தமிழ் கலாச்சாரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்காகவே நேரில் வருகை தந்தாக தெரிவித்தார். ராகுல் காந்தி தமிழ் […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு கோடி பேரின் கையெழுத்துடன் திரு ராகுல் காந்தி குடியரசுத் தலைவரை சந்தித்தார். இந்த நிகழ்வுகளின் போது திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 29ம் நாளாக தலைநகரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயகளுக்கு ஆதாராகவும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ் அதனை இன்று குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் சந்தித்து கொடுக்க உள்ளதாக […]
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் பெண்ணின் உடலை போலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அவர்களாகவே அடக்கம் செய்தது மிகவும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தாரை சந்திக்க சென்றனர். ஆனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் என […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 1500 ஏக்கர் பரப்பளவில், 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த திட்டம் தான் ஆசியாவிலேயே பெரிய திட்டம் என்று ட்விட்டரில் வெளியிட்டது. இதற்க்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தில் 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது. ஆசியாவிலேயே […]
இந்திய நலனுக்கு தான் முன்னுரிமை தரவேண்டும், இந்தியர்களே முதலில் முக்கியம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று […]
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்க்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் ராகுல் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கான இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகின்ற நிலையில், கட்சியின் […]
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகப் போராடியவர்கள், தற்போது என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த போது, சமையல் கியாஸ் விலை உயர்வுக்காக பாஜக மகளிரணி நடத்திய போராட்ட புகைப்படம் அது. அதில் ஸ்மிருதி இரானியும் உள்ளார். அந்தப் புகைப்படத்தைப் […]
வருகின்ற ஏப்ரல் 15-ஆம்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சிக்குள் பேசப்படுகிறது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தானாக முன் வந்து ராஜினாமா செய்தார். ராகுலை அக்கட்சியினர் சமாதானப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனாலும் முடிவில் பின் வாங்காமல் மீண்டும் பதவியை ஏற்க மாட்டேன் என மறுத்து விட்டார். இதையடுத்து சோனியாகாந்தி, கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் […]
பிரதமர் டியூப்லைட் என பேசியது அழகல்ல என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் நேற்று பிரதமர் மோடி டியூப்லைட் என பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலத்த ராகுல் , மக்களவையில் டியூப்லைட் என விமர்சனம் செய்வது அழகல்ல. பிரதமராக இருப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வரைமுறைகள் உள்ளன. வயநாட்டில் மருத்துவ கல்லூரி […]
முக்கிய பிரச்னைகளிலிருந்து பிரதமர் மோடி மக்களை திசை திருப்புகிறார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மக்களவையில் இன்று நடப்பு கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை ட்யூப் லைட் என பிரதமர் கூறிய கருத்து மக்களவையில் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைய முக்கிய பிரச்னை வேலைவாய்பின்மை, […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நன்றி தெரிவித்து பதிலுரைத்தார். நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல்செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, கடந்த மாதம் 31ஆம் தேதி இரு அவையினர் முன்னிலையிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் தனது உரையில், “சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் ஒரே மாதிரியான வளர்ச்சி சாத்தியமாக உள்ளது. இனி […]
மக்களவையில் விவாதத்தின் போது குறுக்கிட்ட ராகுலை டியூப்லைட் என மறைமுகமாக விமர்சித்தார் பிரதமர் மோடி. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து இன்று உரையாற்றினார். அப்போது அவர் நிதிப் பற்றாக்குறையை நாங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும், நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும், இதற்காக நாங்கள் பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்றார். மேலும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் […]
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டப் பேரணி நடைபெறவிருக்கிறது. கொண்லி, ஹாஸ் ஹாஸ் பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ரஜோரி கார்டனில் நடக்கும் இப்பேரணியில் முன்னாள் பிரதமர் […]
இளைஞர்களுக்கு வேவைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், வேலைவாய்ப்புகள் குறித்த பெரிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்கள் சார்பாக நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சக் கூடாது. இளைஞர்களுக்கு நீங்கள் பதிலளித்தே ஆக வேண்டும். […]
மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பட்ஜெட் குறித்து கருத்து கூறியதாவது, […]
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி (ஜே.எம்.எம்.) தலைவர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஜார்க்கண்ட் சட்டபேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன், டிச.29ஆம் தேதி பதவியேற்கிறார். இந்நிலையில் இன்று அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு […]
மோடியை விமர்சித்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியை எச்சரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது. மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது. தற்போது இந்த […]
டாக்டர் மன்மோகன் சிங்குக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் […]
பிரதமர் மோடி எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். […]
பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. […]
ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார் எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கண்டித்துள்ளார். ஜம்முக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல் கொடூரமான அரசு நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சியும், இந்திய ஊடகங்களும் சிக்கியுள்ளது. அரசின் அடக்குமுறையால் மக்கள் ஒடுக்கப்பட்டு காஷ்மீர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்தி கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் […]
காஷ்மீர் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. இதில் பாகிஸ்தானோ அல்லது வேறுநாடுகளோ உடன்பட இடமில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஜம்முவுக்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி […]
ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதை தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு எதிரான […]
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின் வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு 73-ஆவது சுதந்திர தின விழாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ […]
பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் […]
ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என்று ஸ்டாலின் புகழ்ந்துள்ளார் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) பாஜகவை சேர்ந்தவர். 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். இவர் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த […]
சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார் பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர […]
இந்திய நாடு அதன் மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இது குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]
காங்கிரஸ் கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என அடுத்த வாரம் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இதற்காக அவர் கடந்த மே 25-ஆம் தேதி ராஜினாமா கடிதத்தை அளித்து விட்ட நிலையில் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற குழப்பம் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்ற […]
3 முறை முதல்வராக தன்னலமின்றி ஷீலா தீட்சித் பணியாற்றியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் 81- வயதான ஷீலா தீட்சித் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் காங்கிரஸ் கட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். டிசம்பர் 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஷீலா தீட்சித் ஆம் ஆத்மி […]
இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. […]
டெல்லியில் உள்ள தியேட்டரில் ராகுல் காந்தி படம் பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 3_ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி , நான் காங்கிரஸின் தலைவர் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். காங்கிரஸ் தலைவராக இல்லை, காங்கிரஸ் காரிய கமிட்டி தாமதிக்காமல் புதிய தலைவரை உடனே தேர்வு செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.இது காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கான […]
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஹரீஷ் ராவத் ராஜினாமா செய்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து வந்தனர். அதே போல ராகுல் காந்தியும் கடந்த மே 25_ஆம்தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். ஆனால் ராகுலின் […]
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமித்ததாக எந்த தகவலும் வரவில்லை என்று மோதிலால் வோரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பெறுபேற்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் தான் காங்கிரஸ் தலைவர் கிடையாது புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90 வயதான மூத்த மோதிலால் வோரா செயல்படுவார் என தகவல் வெளியாகியது. இது குறித்து பேசிய மோதிலால் வோரா , […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்வார் என்று உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே தலைவராக […]
ராஜினாமாவை செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல் காந்தி நீக்கியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படு தோல்விக்கு பொறுபேற்ற அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் கொடுத்தார்.ஆனால் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை ராகுலே கட்சியின் தலைவராக தொடர வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ராஜினாமா செய்வதற்கான காரணங்களை […]
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்தார்கள். ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நிராகரித்ததோடு அவரின் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தினர்.மேலும் காங்கிரஸ் கட்சியின் முதலமைசர்கள் ராகுல் காந்தி _யிடம் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தினர். […]
காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் கிடையாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை ஏற்க மறுத்து வருகின்றது. […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ராகுல் காந்திக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் ராகுல் காந்திக்கு […]
ராகுல் காந்தி பிறந்த போது மருத்துவமனையில் தன்னுடனிருந்த பெண் செவிலியரை சந்தித்து பேசிய போட்டோ வைரலாகி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடுக்கு வருகை தந்துள்ளார். மேலும் முதல் நாள் நடைபெற்ற ராகுல் பயணத்தில் அக்கட்சியின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் வயநாட்டின் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்த ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கேரள மாநில […]
தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]
பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் […]
மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில்காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள 52 மக்களவை எம்.பி.க்களுடன் சேர்த்து மாநிலங்களவை எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சியின் MP_க்கள் தேர்வு செய்கின்றனர். இதில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தில், வரும் பாராளுமன்ற கூட்டத் […]
வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தின் பனமரம் என்ற பகுதியில் தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். கேரளாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இத்தனைக்கும் கேரள அரசு விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைத்து இருக்கின்றது. விவசாயி தினேஷ்குமார் தற்கொலை […]
வயநாடு மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 7, 8 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ராகுல் காந்தி அமேதியில் மக்களவை தொகுதியில் தோல்வி அடைந்தார். அதே நேரம் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார். வயநாடு மக்களவை தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4 […]
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதற்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்தது. சட்ட மன்ற தேர்தலில் வென்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து […]