அரை மணி நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்த விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் அப்பாதையில் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் ரயில்வே ஸ்டேஷனானது திருப்பூர்-சோமனூர் இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் லேசான விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தண்டவாள விரிசல் குறித்து திருப்பூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அங்கு விரைந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் விரிசலை சரி செய்யும் […]
Tag: #railway
ரயில்வே துறையில் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : அப்ரண்டீஸ், காலிப்பணியிடங்கள் : 68, பணியிடம் : நாடு முழுவதும், கல்வித்தகுதி : டிகிரி, டிப்ளமோ வயது : 18 முதல் 27 வரை. விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 11, மேலும் விரிவான விவரங்களுக்குwww. Railtelindia. com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ரயில் பயணம் குறித்த முக்கியத் தகவலை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பல தளர்வுகளை ஏற்படுத்தி பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்துள்ளனர். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30 வரை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. […]
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் தேதிக்கு பின்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு […]
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை 5,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் […]
ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்., 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை […]
சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்.1 மற்றும் 8ம் தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் […]
இந்திய ரயில்வேயின் ஆர்ஆர்பி என்டிபிசி நாட்டின் மிகப்பெரிய ஆட்சேர்ப்புகளில் ஒன்றாகும். இந்த வேலை 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, 1.3 கோடி வேட்பாளர்கள் ஆட்சேர்ப்புக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய ரயில்வேயின் ஆர்ஆர்பி என்டிபிசி, கணினி அடிப்படையிலான முதல் கட்ட ஆட்சேர்ப்பின் ஆரம்பம், ஒரு பரீட்சை நடத்தும் நிறுவனம் அல்லது ஈ.சி.ஏ இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் அல்லது ஆர்ஆர்பிக்கள் இந்திய ரயில்வேக்கு ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்துகின்றன. இருப்பினும், செப்டம்பர் 2019 இல், ஆர்ஆர்பிக்கள் தங்கள் வலைத்தளங்களில் […]
கோயமுத்தூரில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் முன்பதிவு கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி கோயம்புத்தூரில் நாளொன்றுக்கு 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதால் கோயம்புத்தூர் நகருக்குள் வருவதற்கும், போவதற்கும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நேரத்தில் முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன அவர்களுக்கு கட்டணம் […]
ரயில் முன்பதிவில் தட்கல் டிக்கெட்டுகளை தடைசெய்யப்பட்ட மென்பொருள் மூலம் முறைகேடு செய்த ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிடாமல் அவசரமாக ரயில்களில் பயணம் செய்யும் நிலை ஏற்படும்போது உடனடியாக டிக்கெட் பெறுவதற்காக தட்கலில் விண்ணப்பிக்கும் முறை இருந்து வருகிறது. அவசரமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் இந்த தட்கல் டிக்கெட் பதிவை நம்பிதான் இருக்கிறார்கள். ஆனால் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் ரயில் நிலையங்களில் தட்கல் பதிவுக்காக காத்திருப்போர் பெரும் அவதிக்கு […]
கிழக்கு ரயில்வே துறையின் கீழ் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு துறைகளில் 2020ம் ஆண்டுக்கான அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. காலியிடங்கள் : வெல்டர், வயர்மேன், ஸ்டீல் மெட்டல் வொர்க்கர், லைன்மேன், பெயின்டர், கார்ப்பென்டர், ஃபிட்டர் என பல்வேறு தொழிற்பிரிவுகளில் அரசு விதிகளின்படி மொத்தம் 2792 பேருக்கு உதவித்தொகையுடன் கூடிய அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. கல்வித் தகுதி : பல்வேறு தொழிற்பிரிவுகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதால் பணிகளுக்கு ஏற்றாற்போல் கல்வித்தகுதி மாறுபடுகிறது. விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் […]
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ரயில் வாசல் படியில் பயணம் மேற்கொண்ட வாலிபர் தவறி விழுந்து தலை துண்டாகி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் ஆரம்பிக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றின் தலை துண்டாக கிடந்துள்ளது. இதனை நெல்லை to ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயில் ஓட்டுனர் பார்த்து ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி தலைமை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட […]
அகமதாபாத் to மும்பை இடையிலான தேஜஸ் விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் பயணிகளுக்கு IRCTC இழப்பீடு வழங்கி இருக்கிறது. புதன்கிழமை நண்பகல் மும்பை வந்த தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. மும்பை அகமதாபாத் இடியே புறநகர் பகுதிகளுக்கிடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதில் பயணித்தவர்களுக்கு சுமார் 63 ஆயிரம் ரூபாய் அளவுக்கு ஐஆர்சிடிசி ஐயா சிபிசி இழப்பீடு வழங்க இருக்கிறது அகமதாபாத் […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற போது தவறிவிழுந்த பயணியை ரயில்வே காவலர் ரயிலுக்குள் பிடித்து தள்ளி காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இதையடுத்து அதே இரயிலில் புனே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த பெட்டியிலேயே சரியாக ஏற வேண்டும் என்பதற்காக […]
இந்தியாவிலுள்ள 100 வழித்தடங்களில் ஓடும் 150 ரயில்களை தனியாருக்கு அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு விற்கவுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு அனைத்துச் சங்கங்களும் இன்று போராட்டம் நடத்திவரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை ஈவு […]
சென்னை-ஹவுரா சென்னை-ஹூக்கிலா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விவாதம் நடத்தப்பட உள்ளது. அந்த அறிக்கையின்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 100 வழித்தடங்கள் தனியார் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]
ரயிலில் பயணி ஒருவர் விட்டுச் சென்ற பையை நேர்மையாக ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளர் தமிழக ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமையன்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வந்த நிலையில், சிவசுப்பிரமணியம் என்ற பயணி ரயிலில் தனது பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார். யாரும் கண்டு கொள்ளாத நிலையில் கிடந்த பையை ரயிலில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த ராஜலட்சுமி என்பவர் ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் பத்திரமாக […]
ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு தூத்துக்குடி சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து அந்த ரயில் நிலைய பகுதிகளில் நடத்தப்பட்ட தீவீர சோதனைக்கு பின்பு அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனிடையே செல்போனில் மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் […]
திருச்சி மணப்பாறையில் கனமழையால் ரயில் தண்டவாளத்தில் ஜல்லி அகன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இந்நிலையில் பாலக்காடு ரயில்வே பாலத்தில் ரயில் இருப்புபாதை சுற்றி போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தின் கட்டைகள் அந்தரத்தில் தொங்குவது போல காட்சி அளித்தன. இதனை பராமரிப்பு பணியின் போது கண்டுபிடித்த ஒரு ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். […]
பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் வழக்கம் போல் மதுரை- செங்கோட்டைக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது .. மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பயணிகளின் இரயில் ( வண்டி எண் : 56734,56735 ) இரு மார்க்கங்களில் கடந்த 13 -ந் தேதியில் இருந்து தண்டவாள பராமரிப்பு பணிக்காக விருதுநகருடன் ரத்துசெய்யப்பட்டது .மேலும் இம்மாற்றம் 31- ந் தேதி வரை அமுலில் இருக்கும் […]
ரயில் நிலையத்தில் யாரும் குப்பையை கொட்டினால் 5000 அபராதம் விதிக்கப்படுமென்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் பராமரிப்பின்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து நாடுமுழுவதும் உள்ள ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு , ரெயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர், தூய்மை மற்றும் எரிபொருள் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு அமைத்ததோடு இந்தியா முழுவதும் உள்ள சுமார் 720 ரெயில் நிலைய […]