சீரம் இன்ஸ்டியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு விநியோகமானது இன்று முதல் துவங்குகிறது. கொரோனா தடுப்பூசியான, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசியையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியையும் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டீட் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய […]
Tag: Ready
வருகின்ற 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோவில்கள் போன்ற இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு […]
புத்தகம் இல்லாமல் பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாரா என இந்திய தொழில் கூட்டமைப்பு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் 125ஆவது ஆண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், ‘நவீனகால கற்பித்தலில் பரிமாணம், சவால்கள், வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அப்போது, கல்வித்துறைச் செயலர் அன்பரசு தலைமையேற்று பேசுகையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் தரம் ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு […]
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், சீனாவில் இருந்து வருகை தந்த பெண்ணொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் உள்ளார் என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை […]