வேதியியல் தனிம அட்டவணையை 1 நிமிடம் 33 வினாடிகளில் கூறி 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகவும், புற்றுநோய் சிறப்பு நிபுணருமாக பிரபுராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பல் மருத்துவரான ஆர்த்தி ஹரிபிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதுர்கிரிஷ் ஆத்விக்(6) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு சிறுவயதில் இருந்து தமிழ் மீது மிகுந்த ஆர்வம். இதனால் 3 வயதில் 53 […]
Tag: Record
12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விஜய் ரங்காபுரம் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஆர்கிடெக்சர் 3-வது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் 12 மணி நேரம் ஓவியம் வரையும் போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். […]
5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு ஊழியர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதியில் இருந்து சரக்கு விமான போக்குவரத்திற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விமான நிலையத்தில் சரக்கு விமானங்களின் வருகையும், சரக்குகளை கையாளுவதும் பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துணை நிறுவன ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் […]
திருச்சியை சேர்ந்த மாணவி தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் உள்ள காமன்வெல்த் ஸ்டேடியத்தில் பல்வேறு வகையான மூன்றாவது தேசிய சீக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகிதா என்ற சிறுமி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த சிறுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமி கூறும்போது, துப்பாக்கி சுடும் […]
நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி 48 நினைவு சின்னங்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகளுக்கு தயாநிதிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நான்காம் வகுப்பு படித்து வந்த தயாநிதிதா வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை வெறும் ஒரு நிமிடத்தில் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியன் ரெக்கார்டு […]
3 வயது சிறுவன் 53 உலக நாடுகளின் தலைநகரங்களில் பெயர்களை சரளமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் தர்மபாலா-முத்துலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றன. ஹோட்டல் உரிமையாளரான தர்மபாலாக்கு அகரன், ஆதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் தர்மபாலாவின் இளைய மகனான ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், […]
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன (British Airways) விமானம் ஓன்று அதிவேகமாக வீசிய காற்றுக்கு நடுவே அட்லாண்டிக் பெருங்கடலை 5 மணி நேரத்துக்குள் கடந்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு நார்வேகியன் நிறுவன விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரம் 13 நிமிடங்களில் சென்றது. இதுவே யாரும் முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. இந்தநிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங்க் 747 ரக விமானம், அதிவேகமாக வீசிய காற்றுக்கு நடுவில் மணிக்கு 800 மைல்கள் வேகத்தில் […]
இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 119 ரன்களைக் குவித்தது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இதற்காக ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் 4 ரன்கள் எடுத்திருந்தபோது […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதனால் இப்போட்டியில் […]
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை அதிவேகமாகக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி 82 ரன்களைக் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் […]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை, இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் ரன்களைக் குவித்து தனிப்பட்ட வீரராக பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார். இது ஒருபுறமிருக்க கேப்டனாகவும் கோலி பல புதிய சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை […]
மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டு இதுவரை 22ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சத்திய நாகேஷ் என்ற நபர் இதுவரைக்கும் எத்தணை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார் .ரிசர்வ் வங்கி மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட தகவலில் சுமார் 22ஆயிரம் கோடிக்கும் அதிகமான நோட்டுகளில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் இது நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் என தெரிவித்த […]
பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் களநடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பெர்த்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு களநடுவராகப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலீம் தார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் அவர் பங்கேற்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது 129ஆவது டெஸ்ட் […]
தியோதர் டிராபியில் இந்தியா சி கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், உள்நாட்டுத் தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் 10 வருட சாதனையை முறியடித்துள்ளார். இந்தியாவில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பர்தீவ் பட்டேல் தலைமையிலான இந்தியா பி ஆணி, சுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியை எதிர்கொண்டது.இதன் மூலம் சுப்மன் கில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் […]
உள்நாட்டு டெஸ்ட் போட்டி சராசரியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை பின்னுக்குத் தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தினார். ரோஹித் 249 பந்துகளை எதிர்கொண்டு தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு […]
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். ரபாடா பந்துவீச்சில் மயாங்க் அகர்வால் 10, புஜாரா 0 என அடுத்தடுத்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் […]
தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என்று தன்னை விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு மித்தாலிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய […]
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை இந்தியாவின் ’லேடி சச்சின்’ மித்தாலி ராஜ் படைத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. இவர் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தென் […]
50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று இந்தியா தென் மற்றும் தென் ஆப்பிரிக்க […]
இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் மோடியை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல் இடம் பிடித்துள்ளார். ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவின் கூகிளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் . குறிப்பாக , சன்னி லியோனின் பயோபிக் வீடியோக்கள் கூகிளில் அதிகமாக […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 120 ரன்கள் விளாசி தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டியில் விளையாடி 16,363 […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி பல சாதனைகளை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 19 ரன்கள் கடந்த நிலையில், ஒருநாள் […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று மதியம் நடக்கவிருக்கும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அமித் தலைவர் விராட் கோஹ்லி சாதனை படைக்கவுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரைக் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடக்கவிருக்கிறது. இந்தப் […]
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார். உலக கோப்பை இரண்டாவது அரை இறுதியில் நேற்று ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 46 ரன்களும் எடுத்தனர். […]
உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து நடப்பு தொடரில் மட்டும் 5 சதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் […]
7 வயது சிறுமி தனது தலைமுடியால் 700 கிலோ எடையுடைய காரை இழுத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே நெடுங்குளம் என்னும் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்துக்கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அக்சயா தன் தலைமுடியால், 700 கிலோ எடையுள்ள காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார். இதனையடுத்து மாணவி அக்சயாவுக்கு பலர் வாழ்த்துகள் […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி முன்னணி வீரர்கள் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 232 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய […]
தோனி எங்களுக்கு பயம் காட்டிவிட்டார் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 […]
ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தல தோனி நிகழ்த்தியுள்ளார். ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் […]