பொதுமக்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு சுப்ரமணியபுரம், தாயில்பட்டி, சல்வார்பட்டி, வெற்றிலையூரணி, மீனாட்சிபுரம், கனஞ்சம்பட்டி, வெம்பக்கோட்டை, போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தினமும் சிகிச்சைக்காக தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக […]
Tag: Request
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது விழுப்புரம் மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. அதோடு ஒன்றிய தலைவர் கிறிஸ்டினா மேரி, மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தம்மாள், ஒன்றிய செயலாளர் சரளா மற்றும் ஒன்றிய பொருளாளர் குமாரி போன்றோர் இந்த […]
வள்ளி திருமண நாடகத்தில் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்திய எம்.எல்.ஏ சக்திவேல் அவர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாடக பேராசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம் என்ற புராண நாடகம் நடத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க பொருளாளர், சேலம் தெற்கு எம்.எல்.ஏவு.மான ஏ.பி.சக்திவேல் அவர்கள் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நாடகத்தில் நாடக நடிகர் சங்க […]
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் கொரோனா அச்சத்தால் தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஸ்டீபன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அச்சிறுமியிடம் 2 முறை தவறாக நடந்துள்ளார். அதேபோன்று 2019ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான தனி விமானம் ஒன்றில் சிறுமியை அழைத்துக் கொண்டு பயணித்த ஸ்டீபன் மீண்டும் அவரிடம் தவறாக நடந்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியை […]
ஊரடங்கு தளரத்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணிக்கு வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலம் மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டு நிலையில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபடி தமிழகத்தில் அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைக்கு வர […]
ஆந்திராவைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கு தகுந்த உதவிகள் செய்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க […]
ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர தொழிலாளர்கள் […]
சென்னையில் சிக்கித்தவிக்கும் ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர […]
சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ உதவி கோரி மனு அளித்தார். கரூர் மாவட்டம் மேட்டு திருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் பிரசன்னா (10). தாயை இழந்து, மன நிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வரும் பிரசன்னா சிறுவயதிலிருந்து சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். வறுமையில் வாழ்ந்து வரும் சிறுவனுக்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், சிறுநீரகக் […]
பெரிய கோயிலில் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளால், புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகள், […]
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந் முகமது அபூபக்கர்: “என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமை குறித்த தெளிவான சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை […]
இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசியபோது, புதிய மசோதாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிவித்தார். ஒன்பது மணிநேரதிற்கும் மேல் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 311 உறுப்பினர்கள் […]
மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.அப்போது அந்தப் பகுதியில் பெய்த […]
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெற்கு தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “கிருஷ்ணன் கோயிலுக்கு 20 மீட்டர் தொலைவில் மதுக்கடை அமைந்துள்ளது. மேலும் இந்த மதுக்கடை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையில் அமைந்துள்ளது. அங்கு மது அருந்துபவர்கள் […]
கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்குங்கள் என்ற கேரள முதல்வரின் வேண்டுகோளை தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்கள் நிறைவேற்றியுள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் கனமழை பெய்தது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் […]
நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 600 ரூபாய் மானியம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகள் காவிரி நீரை ஆதாரமாக கொண்டு ஆண்டுதோறும் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 13-ம் தேதி நீர் திறக்கப்பட்ட நிலையில்அந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.அதில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் விவசாயிகள் […]
அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். உங்கள் அணியை வெறுக்காதீர்கள் என்று இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுக்களை சிட்டுக்கட்டாய் சரிந்த போதும் தோனி , ஜடேஜா அணியின் வெற்றிக்காக போராடினார்கள். இருந்தும் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியின் தோல்வி ஒட்டு மொத்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. […]
மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் தவறாக வெளியான சமூக வலைத்தள பதிவால் அங்குள்ள இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதனால் அங்கு ஏற்பட்ட தொடர் பதற்றம் காரணமாக இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு , இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கபட்டது. மேலும் புட்டாளம், குருநெங்களா […]
கீழ்வேளூர் அருகில் கஜா புயலால் பழுதான சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் அடுத்துள்ள நாகை-தேவூர் சாலையோரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பாக சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு அமைந்ததன் மூலம் அந்த ஊராட்சி பகுதி மக்கள், லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சோலார் மின்கோபுரம் பழுதடைந்தில் சோலார் மின்விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக மாறி விட்டது. […]
ஜாகீர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச போலீஸ் கையில் எடுத்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாத செயலுக்கு தூண்டியதும், மற்ற மதத்தினர் மீது பகைமையை ஏற்படுத்தியதும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2016_ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜாகிர் நாயக்கிற்கு முக்கிய தொடர்பு இருக்கின்றது என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி இந்திய அரசிடம் நடவடிக்கை […]