சீனாவில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வைரஸை குணப்படுத்த மருந்து தயாரிக்கும் பணியில் உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்தமருத்துவ கண்டுபிடிப்புக்கு ஆராய்ச்சியாளர்களின் குழுவை இந்தியாவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் வழிநடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சீனாவிலிருந்து மெல்ல, மெல்ல இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கொஞ்சம், கொஞ்சமாக கொரோனா வைரஸ் தன் பயணத்தை தொடங்கியது. நோய் […]
Tag: #Researchers
உலகின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் ஒரு புதிய வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் நீர்மூழ்கி வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் போது, ஒரு புதியவகை ஜெல்லிமீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல், பூச்சாடி போன்று தோற்றத்தை கொண்டிருந்தது. அந்த ஜெல்லி மீன் தோற்றம் கூம்பு […]
சுமார் 3 அடி உயரமுள்ள ராட்சத கிளியின் புதைபடிவம் நியூசிலாந்தில் புதைபடிவ நிபுணர் ட்ரெவர் வொர்த்தி கண்டெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகப் போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தில் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் பகுதியில் புதைபடிவ ஆய்வில் ஈடுபட்டிருந்த போது 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளியானது சுமார் 3 அடி உயரத்தில் 7 கிலோ எடையிலும், ஒரு சராசரி மனிதன் உயரத்தின் பாதிக்கும் மேலாக இருந்திருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த கிளியின் வலிமையையும், அசாதாரண உயரத்தையும் வைத்து கிளி எப்படி இருந்துள்ளது என்று […]