பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. சுற்றியுள்ள வனப் பகுதியிலிருந்து பல்வேறு வழிகளில் ஓடிவரும் தண்ணீர் இந்த பஞ்சலிங்க அருவியில் ஒன்றுசேர்ந்து விழுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்துள்ளனர். ஆனால் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மதியம் […]
Tag: Restrictions
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். எனவே இங்கு இருக்கும் , கடற்கரை, நீர்வீழ்ச்சி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் […]
கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக சிங்கப்பூரில் இந்திய பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகதா மகேஷ் என்ற பெண் வசித்து வருகிறார். இவரை இங்கிலாந்தில் வசிக்கும் நைகல் ஸ்கீயா என்பவர் காதலித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதாவை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது சிங்கப்பூரில் தீவிரமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கபட்டதால், நைகல் அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அந்த […]
கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் மட்டுமே நீலகிரிக்குள் நுழைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது 15-க்கும் கீழ் குறைந்து விட்டது. இந்நிலையில் கேரளாவில் வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் அந்த மாநில எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர். இது பற்றி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து […]
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்ற தடையை எதிர்த்து குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்மணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் லூஜின் அல் ஹத்லால் என்ற பெண் வசித்து வருகிறார். அந்த நாட்டில் பெண்களுக்கு என பல்வேறு தடைகள் உள்ளன. அவைகள் பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை, விளையாட்டுப் போட்டிகளையும், சினிமாவையும் நேரடியாக பார்ப்பதற்குத் தடை, முகம் தெரியாத அளவுக்கு ஆடைகளை அணிதல் போன்ற பல கட்டுப்பாடுகளை சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் […]
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த மக்கள் சவுதிக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுதி அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சவூதி அரசு வெளியிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, பாகிஸ்தான், அயர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், எகிப்து, போர்ச்சுக்கல், லெபனான் […]
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கட்டுப்பாடுகளுடன் தை அமாவாசையையொட்டி திறக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷம் போன்ற தினங்களில் மட்டுமே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையடுத்து வருகிற 11-ஆம் தேதி தை அமாவாசை நாளாக இருப்பதால் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. மேலும் […]
அதிகாரிகள் மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரசனூர் பகுதியில் நாராயணசாமி என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மைனர் பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்த போது, மைனர் பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக விழுப்புரம் சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு புகார் அளிக்கப்பட்டது. […]
பசுவதை தடை அவசர சட்டமானது கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டால் பசுக்களைக் கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டசபையில் பசுவதை தடை சட்டம் மசோதாவானது நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு மேல்-சபையில் இன்னும் ஒப்புதல் அளிக்காத சமயத்தில், பசுவதை தடைக்கு மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த அவசர சட்டமானது கர்நாடகத்தில் 18ஆம் […]
ஆந்திராவில் மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி மாடு விடும் விழா மற்றும் சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது ஆந்திர பிரதேச மாநிலத்தில் மகா சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேவல் சண்டை மற்றும் ஜல்லிக்கட்டு நடப்பது போல, அங்கும் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா போன்ற போட்டிகளுக்கு அம்மாநில […]
பார்களில் மது பிரியர்கள் கூட்டம் இல்லாததால் பார் உரிமையாளர்கள் சிரமத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதங்கள் டாஸ்மாக் மது பார்கள் மூடப்பட்டு இருந்தன. எனவே அனைத்து பார்களை திறக்க வேண்டும் என உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து பார்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 3,2௦௦ பார்கள் செயல்பட்டாலும், விற்பனையானது மந்தமாகவே உள்ளது. மேலும் புத்தாண்டன்று விற்பனையானது பல […]
அனைத்துக் கல்லூரிகளும் நாளை முதல் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததால் புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதோடு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஆராய்ச்சி படிப்புகள், தனியார் கல்லூரிகளில் […]
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர். இதனையடுத்து மெயினருவியில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி […]
கன்னியாகுமரியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனையடுத்து கடல் பகுதியில் காற்றின் வேகமும், கடல் அலைகளும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்ட போதிலும், விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல […]
புத்தாண்டு நாளான இன்று திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்து செல்வார்கள். தமிழ் மாதம் மார்கழி முதல் நாளிலிருந்து தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டான […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக, 82 கிராமங்களுக்கு மட்டும் எருதுவிடும் விழா நடத்த கலெக்டர் அனுமதித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு எருதுவிடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். எருது விடும் விழா தொடர்பாக காளை உரிமையாளர்கள் மற்றும் எருதுவிடும் விழா சங்கத்தினருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டமானது கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் போன்றோர் […]
புத்தாண்டு வருவதையொட்டி நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களில் ஈடுபட மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. ஆங்கில புத்தாண்டு இன்னும் மூன்று நாட்களில் வருவதை முன்னிட்டு சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை மாநகரம் முழுவதும் அந்தந்தப பகுதிகளில் உள்ள துணை ஆணையர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புத்தாண்டு தொடர்பாக நட்சத்திர விடுதிகளுக்கு […]
ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் இணையதளசேவை மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வாழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு இரத்து செய்து அதன் மசோதாவை மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றியது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறியது. இதனால் அங்கு நடக்கும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்ட்து. 144 தடை உத்தரவு […]