Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் புகழ் நடிகர் மரணம்… சோகத்தில் திரையுலகம்!

இயக்குனர்  பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவர்  கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைசியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் 36 வயதான சேதுராமன். அதை தொடர்ந்து வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை 4 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் […]

Categories
உலக செய்திகள்

“CUT, COPY,PASTE “… தந்தை லாரி டெஸ்லர் காலமானார்.!!

கணினி உலகின் வரப்பிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் (cut, copy, paste) செயல்பாடுகளை உருவாக்கிய விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் லாரி டெஸ்லர் (Larry Tesler). 74 வயதான இவர் ஜெராக்ஸ் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்து அசத்தியவர். மேலும் கணினி உலகின் வரபிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளையும் இவர்தான் உருவாக்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் மறைவு: மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். மோகனின் உடலுக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் எஸ். மோகன் (90). இவர், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். உடல்நலக்குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் அஜித் பட இயக்குனர் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி..!!

பழம்பெரும் தெலுங்கு நடிகரும், எழுத்தாளருமான கொல்லபுடி மாருதி ராவ் உடல்நலக் -குறைவால் சென்னையில் காலமானார்.  சுவாதி, முத்தியம், பிரேமா, லீடர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் கொல்லபுடி மாருதி ராவ் (வயது 80). 1939ஆம் ஆண்டு ஆந்திரமாநிலம் விஜயநகரம் என்ற இடத்தில் பிறந்த இவர், தெலுங்கு திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மாருதி ராவ் ஆந்திர அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் பாலாசிங் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

திரைப்பட நடிகர் பாலாசிங் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பிரபல குணச்சித்திர நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவ மனையில் இன்று அதிகாலை காலமானார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினமே உடல்நிலை மிக மோசமானதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். நடிகர் பாலாசிங் தமிழில், நடிகர் நாசர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்.!!

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். 39 வயதான வேணு மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேணு மாதவ்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம் உட்பட 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு […]

Categories

Tech |