திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடலுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் இறப்புக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , அன்பழகன் உடலுக்கு […]
Tag: #RIPPerasiriyar
அன்பழகன் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அதிமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக அதிகாலை காலமானார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் , திராவிட இயக்கத்தின் கொள்கைகள் ஆழமான […]
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார் இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் , பேராசிரியர் அன்பழகன் இறப்பு தமிழ் நாட்டிற்கே பேரிழப்பு […]