தெலங்கானா என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேர் காவலர்களால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். விசாரணையின் போது காவலர்களை தாக்கி தப்பியோட முயற்சித்த அவர்களை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவிற்கு தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு ரச்சகோண்டா காவல் […]
Tag: #RIPPriyankaReddy
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மன அமைதி கெட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாள்தோறும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சம்பவங்களால் வன்முறையை கைவிடும் எண்ணத்திற்கு நம் மண ஓட்டம் வந்துள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு […]
பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த பிரியங்கா தன் தங்கை பவ்யாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். […]
ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அரசு கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு மிருகத்தனமான கொடும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் […]
ஹைதராபாத்தில் அரசு கால்நடை பெண் மருத்துவரைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபத் அருகே ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டியின் மகள் பிரியங்கா ரெட்டி (26). மெஹபூப் நகர் மாவட்டம், கொல்லூர் என்ற பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. இதனிடையே […]