ஊராட்சி மன்ற தலைவரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை கைது செய்யக் கோரி ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொட்டாரக்குடி ஊராட்சி மன்ற தலைவரான ராஜீவ்காந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜீவ்காந்தி வீட்டுக்கு அந்த நபர் தனது மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது ராஜீவ்காந்தி மற்றும் அவருடைய மனைவி சுமித்ராவை அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஊராட்சி […]
Tag: road block
தரமான அரிசி வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள ரேஷன் கடைகளில் அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது என்பது பொதுமக்களின் தொடர் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்நிலையில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியிலுள்ள ஒரு ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பழுப்பு நிறத்திலும், தரமற்றதாகவும் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்தின் போது, ரேஷன் கடைகள் மூலம் […]
தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவாலி எனும் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் அரிசி வாங்க சென்றவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதில் சிலர் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சில பகுதிகள் குறுகலாக காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் குழிதோண்டி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நந்தகுமார் பாலம் பகுதியில் சாலை […]
கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் தொழிற்சாலையை மூடகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அங்கு பணிபுரியும் 69 பணியாளர்களுக்கு சோதனையின் முடிவில் கொரானா தொற்று இருப்பது உறுதியானது. இதன்காரணமாக வருவாய்த்துறையினர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் தொழிற்சாலைகள் இயங்கிவந்ததால் பொதுமக்கள் ஈரோடு – முத்தூர் சாலையில் மறியலில் […]
காட்டு யானைகள் சாலையை வழிமறித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு உணவு தேடி வரும் இந்த காட்டு யானைகள் சில சமயம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஐயன் கொள்கையிலிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையை காட்டு யானைகள் வழி மறித்ததால் அங்கு போக்குவரத்து […]