ரோடு ரோலர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ளமணக்கரை பகுதியில் உபதேசியார் தெருவில் டேனியல் வசித்து வருகிறார். இவரின் மகன் ஸ்டீபன் ஸ்டாலின் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்இந்நிலையில் ஸ்டீபன் ஸ்டாலின் புதுச்சாவடி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து எதிரே வந்த வாகனத்தின் வெளிச்சம் காரணமாக ரோட்டோரம் இருந்த ரோடு ரோலர் மீது ஸ்டாலின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. […]
Tag: #Roadaccident
தூத்துக்குடி சில்லாநத்தம் பிரதான சாலையில் வேன் – தண்ணீர் லாரி மோதி கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையெல்லாம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வேன்கள் மூலம் அழைத்து வருவது வழக்கம். அதன்படி, இன்று காலை, பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் அருகில் வேன் வந்து கொண்டிருந்த போது, சில்லாநத்தம் பிரதான […]
அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்தில் சிக்கியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதியம் 12 :50 அளவில் பாரத பிரதமர் பொதுக் கூட்டங்களில் பேசயிருக்கிறார். இந்நிலையில் இந்த பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக அமைச்சர்கள் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் அருகே குப்பணங்கோவில் டோல்கேட் அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் மோதிக்கொண்டன. அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற கார்கள் மோதிக்கொண்டதில் இரண்டு […]
அசாம் மாநிலத்தில் புது மணப்பெண்ணை புகுந்த வீட்டில் விட்டு விட்டு திரும்பும் போது வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகம் முழுவதும் ஏதாவது ஒரு பகுதிகளில் சாலை விபத்து தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பலரும் உயிரிழக்கத்தான் செய்கின்றனர். சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த சோக சம்பவம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் (Udalguri) நசான்சலி பகுதியில், திருமண கோஷ்டியினருடன் […]
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோரத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது இதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குசென்று விட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டது. இன்று காலை திருஈங்கோய்மலை என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு மாவட்டம் கொளம்பலூரை சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன் (27) மயில்சாமி (35) என்ற இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த பயணிகள் […]
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேகமாக வந்த மாநில போக்குவரத்து (எஸ்.டி) பஸ் ஒரு ஆட்டோரிக்ஷா மீது மோதியதில் இரு வாகனங்களும் சாலையோர கிணற்றில் விழுந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு மகாராஷ்டிரா மாவட்டத்தில் மாலேகான் தியோலா சாலையில் உள்ள மேஷி பாட்டாவில் மாலை நடந்த விபத்தில் 18 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேகமான எஸ்.டி பஸ், பயணிகளால் நிரம்பியிருந்தது, ஆட்டோ ரிக்ஷாவில் மோதியது, காயமடைந்தவர்கள் பெரும்பாலும் பஸ் பயணிகள் என்று போலீஸ் அதிகாரி கூறினார். மோதலின் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மில்டன் ஜெயக்குமார் என்பவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரும் இவரது மகளான ரெனி லாரோசும் காரில் சேலத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த நிலையில் கேரளாவிலிருந்து வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் […]
விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பது சாலை விபத்துகளைக் குறைக்கும் என்று அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை செய்து வருகின்றது. ஆனாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. பெரும்பாலான விபத்துக்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் நிகழ்கின்றது. தமிழக அரசு ஹெல்மெட் அணியாமல் மற்றும் விதியை மீறி செல்பவர்களுக்கு அதிக அபராதம் விதித்துள்ளது. இதனால் சாலை விபத்து குறையும் என நம்புகிறது. இந்நிலையில் அகில இந்திய போக்குவரத்து துறை தொழிற்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓன்று சரக்கு ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]
2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. ஆனாலும் சாலை விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு சமயங்களில் நிகழும் சாலை விபத்துக்களில் அதிக பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஒரு நாளுக்கு 405 பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக 4,64,000 சாலை விபத்து […]
அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். […]
ராமநாதபுரம் பரமக்குடி அருகே கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர் தனது 2 மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக் ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு […]
திருவண்ணாமலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து ஒரு குடும்பத்தினர் மேல்மருவத்தூருக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். கார் திருவண்ணாமலை அருகில் உள்ள ஓட்டக்குடிசல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது கார் நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற 2 […]
தெலுங்கானாவில் கார் ஓன்று சாலை தடுப்பு மீது மோதி, அடுத்த சாலைக்குள் புகுந்து மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் – மல்கஜ்கிரி மாவட்டத்தின், கரீம் நகர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் பக்கத்து சாலைக்குள் புகுந்த கார் அந்த சாலையில் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பஞ்சாலை பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரோடு – திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் இருக்கும் பஞ்சாலையின் உதவி மேலாளராக ஜெய்கணேசும், மேற்பார்வையாளர்களாக கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு பணிமுடிந்த பின் 1:30 மணியளவில் புஞ்சைபுளியம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்தராஜ் ஒட்டி சென்றபோது சத்தியமங்கலம் பொன் மேடு என்ற இடத்தில் […]
தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வதற்காக திருப்பூரிலிருந்து சிவகிரிக்கு காரில் 8 பேர் சென்றுகொண்டிருந்தனர் .அப்போது கார் கிருஷ்ணன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேரை அக்கம் பக்கத்தினர் […]
திண்டிவன சாலையில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவரது மகன் கேரள மாநிலதில் வேலை பார்த்து வருகிறார். மாலதி அவரது மகனை பார்க்க செல்வதற்காக பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இதற்காக இரவு புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்த மாலதி திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாலதி மீது மோதியது. […]
ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பிய தம்பதியினர் விபத்தில் சிக்கினார். திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வசித்து வருபவர் பேபி ராஜ். இவருடைய மனைவி கமலம்மாள் இவர்கள் இத்தம்பதியினர் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த தாம்பதியினர் தங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு ஓட்டுப் போட சென்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நல்லூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்த போது பின்னால் வந்த லாரி, அவர்களது மோட்டார் […]
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் 11’ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் பிரதீப்குமார் பதினேழு வயதான இவர் ஒத்தஅள்ளி அரசு பள்ளியில் 11’ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் பிரதீப்குமார் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் டவுணில் இருந்து சர்வீஸ்ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்ற போது எதிரெ வந்த கனரக வாகனம் ஓட்டுனரின் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளி […]