ஈரோட்டில் வாலிபருக்கு கொரோனா இருப்பதாக பெண் ஒருவர் பொய் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது செல்போன் மூலம் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இங்கே அம்மாபேட்டையில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகவும் அவர் கட்டுப்பாடின்றி வெளியே சுற்றுவதால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
Tag: #rumours
கொரோனா குறித்து பேசும் முன் நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சுகாதார அமைப்புகள் நட்சத்திரங்களுக்கு வலியுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருவோர் மீது சுகாதார அமைப்புகளும், அரசு அதிகாரிகளும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபல நட்சத்திரங்களும் கொரோனா குறித்து அவ்வப்போது தவறான செய்திகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்கூட ரஜினி, அமிதாப் ஆகியோர் கொரோனா குறித்து பேசியது தவறான செய்தி என்பதால் அதனை […]
ரஷ்யா அதிபர் சிங்கங்களை திறந்துவிட்டாரா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ரஷ்யா அதிபர் கொரோனா பாதிப்பை தடுக்க யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக சுமார் 800 சிங்கங்களை ரோட்டில் நடமாட விட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இது பரவலாக அனைத்து வாட்ஸ்அப்களிலும் வந்திருக்கும், நாம் கண்டிருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஏப்ரல் 2014 நடந்த ஒரு ஷூட்டிங் அந்த ஷூட்டிங்கில் இந்த கிளிப் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு திரைப்படத்திற்காக […]
ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டை நாட்டை ஆண்ட மாமன்னர் இராஜராஜ சோழனை குறித்து அவதூறு பேசியதன் காரணமாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு தரப்பினர் இயக்குனர் ரஞ்சித் அவர்களை […]