காதலால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எமி ஜாக்சன் மனதை காயப்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன் அறிமுகமானார். தாண்டவம், தங்க மகன், தேவி, தெறி என பல படங்களில் அவரது நடிப்பை வெளிக் காட்டி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட எமி ஜாக்சன் தனது கர்ப்ப காலத்தில் புகைப்படங்கள் பலதை பதிவிட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை ஒன்று […]
Tag: Sadness
ஆந்திராவில் ஒரு வயது குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டம் காஷிபுக்கா பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு, ஒரு வயதில் மோஹ்ரினி என்ற குழந்தை இருந்துள்ளது. இக்குழந்தை இன்று (நவ.7) காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, தொலைக்காட்சிப் பெட்டியின் கம்பியை (TV wire) இழுத்து விளையாடியுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், […]
வேலைக்குச் செல்லாமல் கணவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசித்துவந்தவர் பாண்டியராஜன்(42). இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிழைப்பிற்காக பாண்டியராஜன் டிராக்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார். பாண்டியராஜன் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறுது. இதனால் பாண்டியராஜனுக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாண்டியராஜனின் தாயார் […]
பண்டிகைகள் மற்றும் தொடர் மழையின் காரணமாக முட்டை விலை சரிந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைமுன்னிட்டு நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், பண்டிகைகள் மற்றும் தொடர் கன மழையின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்திருப்பதாகவும், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அங்கு அனுப்ப […]
பாகிஸ்தான் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஹரிப்பூர் மாவட்டத்தின் தர்பேலா பகுதி ஆற்றில் அங்குள்ள தோர்கார் மாவட்ட நல அமேஜை கிராமத்தை சேர்ந்த 80 பேர் சவாரி செய்தனர். படகு சவாரி மூலமாக அவர்கள் ஹரிப்பூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார்க்காத விதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 30 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். […]