Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கணவர் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!!

பால் வேன் மோதி நடந்து சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம்பட்டி பகுதியில் சூர்யா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சினேகா தனது தாயார் வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பால் வேன் சினேகா மீது பயங்கரமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுமி…. அத்துமீறி நுழைந்த வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமடல் பகுதியில் தனபால்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனபால் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தனபாலை கைது செய்தனர். இந்த வழக்கினை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து…. கல்லூரி மாணவிகள் உள்பட 22 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 22 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் கல்லூரி மாணவிகள் உள்பட 22 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடிக்கொண்டிருந்த போதே பற்றி எரிந்த கார்….. பரபரப்பு சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

ஓடிக்கொண்டிருந்த போதே கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் அன்னை நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உத்தமசோழபுரம் அருகே சென்ற போது திடீரென கார் இஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாகரன் உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பாரதிபுரம் பகுதியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழிலரசி(19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் எழிலரசி அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த எழிலரசின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எழிலரசி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. தாய்- மகள் உள்பட 6 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை லீ பஜார் பகுதியில் ஆட்டோ மெக்கானிக்கான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் உடல் நல குறைவால் இறந்த ஆறுமுகத்திற்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு துக்க வீட்டிற்கு வந்த 11 பேர் நள்ளிரவு நேரத்தில் ஒரு வேனில் டீ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்…. ஓடும் பேருந்திலிருந்து விழுந்து பலியான கண்டக்டர்…. கோர விபத்து…!!

பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து ஏற்காடு அடிவாரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் பசுவக்கல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ராஜேந்திரன் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். இதனை அடுத்து நாய் குறுக்கே வந்ததால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற 4 மாணவிகள்…. என்ன காரணம்….?? சேலத்தில் பரபரப்பு சம்பவம்….!!

4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணவிகள் விடுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த புஷ்பா, ஜோதிகா, ரமணியம்மாள், சௌந்தர்யா ஆகிய நான்கு பேர் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் 4 மாணவிகளும் சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி நிர்வாகியிடம் கூறியுள்ளனர். ஆனால் நான்கு மாணவிகளும் கொட்டைபுத்தூரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தலைக்கவசம் விற்பனை செய்த வாலிபர்…. அதிவேகமாக வந்து மோதிய கார்…. சேலத்தில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குப்பூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணா(21) என்பவர் சாலையோரம் கடை அமைத்து தலைக்கவசம் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல ரமணா தலைக்கவசம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரமணா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பாளையம் பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த சுப்பிரமணி(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனது மருமகளிடம் ஏன் பேசுகிறாய்….? மாமனாரை கத்தியால் குத்திய தபால்காரர்…. போலீஸ் வலைவீச்சு…!!

தபால்காரர் முதியவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சராயனூர் காட்டுவளவு பகுதியில் கிருஷ்ணன்(70) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் தபால்காரரான செந்தில்குமார்(40) என்பவர் கிருஷ்ணனின் மருமகளுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த கிருஷ்ணன் தனது மருமகளை கண்டித்ததோடு, செந்தில் குமாரிடம் ஏன் எனது மருமகளிடம் அடிக்கடி பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தில் குமார் கிருஷ்ணனை கத்தியால் சரமாரியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாமியார் வீட்டிற்கு சென்று வருகிறேன்” குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(11), கௌசிகா(9) என்ற மகள்களும், ஹரிஹரன்(7) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நந்தினி தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் அவர்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் முருகேசனும், உறவினர்களும் நந்தினி மற்றும் குழந்தைகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரிக்குள் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. சேலத்தில் பரபரப்பு…!!

லாரி ஏரிக்குள் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் இருந்து ஒரு லாரி செங்கல்பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை சுப்பிரமணியன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தொழிலாளர்களான மணி(60), ஜானகி(40) ஆகியோரும் உடன் இருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் ஏரி அருகே இருக்கும் வளைவில் லாரி திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண் கொலை வழக்கு…. மாமனார்- மாமியார் கைது…. போலீஸ் அதிரடி…!!

இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் தியாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனுஸ்ரீ(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனுஸ்ரீக்கு கீர்த்தி ராஜா(31) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கீர்த்தி ராஜா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அம்மி கல்லை போட்டு கொன்ற தொழிலாளி…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு…!!

பெண்ணின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பழனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் இறந்து விட்டதால் பழனியம்மாள் காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாளுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான மாது(37) என்பவருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியில் செந்தில்வேல்(31) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செந்தில்வேல் இரும்பாலை அருகே இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் சென்றபோது செந்திலின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் கிராமத்தில் இளங்கோவன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் இளங்கோவனின் மனைவி தனது மகளுடன் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவருடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளங்கோவன் தனது மனைவி மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-டிப்பர் லாரி மோதல்…. படுகாயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியூர்கல்மேடு பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பெருந்தை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குரால்நத்தம் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் துரைமுருகன், தனியார் பேருந்தின் ஓட்டுநர் மணிகண்டன், கண்டக்டர் செங்கோட்டையன், பயணிகள் செல்லம்மாள், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிதைந்த நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. சேலத்தில் பரபரப்பு…!!

மர்மமான முறையில் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ்(34) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் சாம்ராஜின் சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாமியாரை கொன்று மருமகள் தற்கொலை…. கதறிய குடும்பத்தினர்…. சேலத்தில் பரபரப்பு சம்பவம்…!!

மருமகள் மாமியாரை அடித்து கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் எல்லப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தைலம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அதே பகுதியில் மூதாட்டியின் கடைசி மகனான மெய்வேல் என்பவர் அவரது மனைவி செல்வியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டிக்கும், செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. சோகத்தில் கிராம மக்கள்…!!

மின்னல் தாக்கிய 4 ஆடுகள் உயிரிழந்த நிலையில், வாலிபர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பருத்திக்காடு வேட்டை பாறை பகுதியில் சுந்தர் ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று பொம்மையன் கரடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது சுந்தர்ராஜ் ஆடுகளுடன் அங்கிருந்த குடிசை ஓரம் ஒதுங்கி நின்றுள்ளார். இதனையடுத்து திடீரென மின்னல் தாக்கியதால் 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திமிரிகோட்டை பகுதியில் மோகனப்பிரியா(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக மோகனப்பிரியாவும் திண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோகுல்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோகனபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மோகனப்பிரியாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல்லில் இருக்கும் முருகன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாற்றிவிட்டான்” காதலன் வீட்டிற்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட திருமணமான பெண்….. போலீஸ் விசாரணை…!!

திருமணமான பெண் காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழரசன்(28) என்ற மகன் உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி ஹேமாபிரியா(29) புகழரசனின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் ஏதாவது சொல்வார்கள்” மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஜேந்திரன்(3), பூமிகா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதி மீண்டும் கர்ப்பமானார். இது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து கணவன் மனைவி இருவரும் கர்ப்பமாக இருப்பதை மறைத்தனர். நேற்று முன்தினம் நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றில் இறந்து கிடந்த புள்ளிமான்…. உரிமையாளர் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் செயல்…!!

புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் துர்க்கை அம்மன் கோவில் அருகே சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஆண் புள்ளிமான் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மான் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டது. நேற்று காலை புள்ளிமான் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரிதா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தூங்காமல் செல்போன் பயன்படுத்திய மகன்…. கண்டித்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தும்பல்பட்டி கிராமத்தில் சின்னபையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரம் தூங்காமல் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த பிரகாஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்மொட்டரை இயக்க முயன்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்….. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சொக்கநாதபுரம் எரிக்காடு பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ராஜ்குமார் விவசாய கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பாலிகடை காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான அஜித்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
Uncategorized

மரத்தின் மீது மோதிய லாரி….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரிலிருந்து சாம்பல் மரம் ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கருப்பணன்(47) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தார் வரதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோழியை சுத்தம் செய்யும் எந்திரம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காபட்டி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் இளைய மகனான லட்சுமணன்(23) என்பவர் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை லட்சுமணன் கோழியை அறுத்து சுத்தம் செய்வதற்காக அதை இயந்திரத்தில் போட்டு சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தங்க நகையை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்தில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பாலையில் இருக்கும் தேசிய வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பரமசிவம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருச்செங்கோட்டில் இருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடு போனதை கண்டு பரமசிவம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வேதநாயகபுரம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மணி மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து மும்முடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மணியின் மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளியே நடந்து சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அம்மையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்திர மதியழகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தூக்கத்திலிருந்து காலை நேரத்தில் கண் விழித்த சந்திர மதியழகன் வீட்டிற்கு வெளியே நடந்து சென்றுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆட்டை பிடித்து வந்த பெண்…. திடீரென் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மோட்டூர் காட்டுவளவு பகுதியில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை தேவூர் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் வளர்மதி மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஆட்டை வீட்டிற்கு பிடித்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வளர்மதி மீது மின்னல் தாக்கியது. இதனால் படுகாயமடைந்த வளர்மதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரத்தில் புகைப்பட கலைஞரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரகினா மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரகினா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய கள்ளக்காதலன்…. தாயின் பரபரப்பு புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூரில் மூட்டை தூக்கும் தொழிலாளியான குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கின்றனர். இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் குமரவேலின் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் வீராணம் பகுதியில் கணவரை இழந்து மகன், மகளுடன் வசிக்கும் ஒரு பெண்ணுடன் குமரவேலுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன ஆட்டோ…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டையில் ஆட்டோ ஓட்டுநரான பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது ஆட்டோ காணாமல் போனதை கண்டு பாலு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சிலிண்டரை திறந்து தீ வைத்து விடுவேன்” மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டரால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீ வைத்து விடுவதாக சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு பகுதியில் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடிபோதையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு சென்று குடியிருப்பு வளாகத்தில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை அங்கு வசிக்கும் போலீஸ் குடும்பத்தினர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கியாஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்….? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட நபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டை செல்லும் சாலையில் வசிஷ்ட நதி பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்கூட வர மாட்டேன்” மாமனார் வீட்டிற்கு தீ வைத்த மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் மாமனார் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் கூலித் தொழிலாளியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரின் மகளான திலகம் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் இளவரசனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் திலகம் இளவரசனை விட்டு பிரிந்து கடந்த 5 மாதங்களாக தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த வாகனங்கள்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. சேலத்தில் பரபரப்பு…!!

நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை குலாலர் தெருவில் இருக்கும் குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பிற வாகனங்களிலும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மூலப்புதூர் பகுதியில் கூலித் தொழிலாளியான வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாட்டாமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவகுமார் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அலுச்சிபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அலுச்சிபாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கொத்தனார்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் கொத்தனாரான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தீபக்கின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தீபக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள லோக்கூர் பகுதியில் 17 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி இந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த ரதன் என்பவர் கல்லூரி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய போலீஸ் ஜீப்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சேலத்தில் பரபரப்பு…!!

மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளான போலீஸ் வாகனத்தை ஜே.சி.பி எந்திரம் மூலம் மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி இரவு வேலையை முடித்துவிட்டு கன்னங்குறிச்சியில் இருக்கும் தனது வீட்டிற்கு போலீஸ் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். இந்த ஜீப்பை சண்முகம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப் பெருமாள் கோவில் அருகே இருக்கும் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து ஜீப் மீது விழுந்ததால் இன்ஸ்பெக்டர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி ரயில் நிலையம் யார்டு பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ரிக் வண்டி ஓட்டுநரான முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |