Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் புதிய இரண்டடுக்கு மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்!

புதிய இரண்டடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இன்னும் சில வாரங்களில் அம்மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்துவரும் மாநகரமான சேலத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டு வரும், தமிழ்நாட்டுப் மிக நீளமான இரண்டடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. சேலம் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இந்நிலையில், சேலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 2016ஆம் ஆண்டு 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான மேம்பாலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

‘உறுப்புகள் தானம் மூலம் 4 பேர்களின் உயிரில் எங்கள் மகனும் வாழ்கிறான்’ – சேலம் பெற்றோர் உருக்கம்..!!

சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் – ராணி தம்பதி. இவர்களுக்கு ரவீந்திரன், சுரேந்தர் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் இளையமகன் சுரேந்தர் தனது பெற்றோர்களை சமயபுரம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக, சேலம் பேருந்து நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்துவிட்டு, நேற்று இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிய சுரேந்தரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் பணம் பெற்று சிகிச்சை… வீடியோவால் சிக்கிய ஊழியர்கள்..!!

சேலத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பத்மாவதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வாங்கி கொண்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனையில் டீன் அலுவலகம் அமைந்துள்ள வார்டுகளில் செவிலியர்கள் சரியாக பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து  அங்கு புதிதாக துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் பத்மாவதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1000 கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா

சேலத்தில் ஆயிரம் கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலக தரமிக்க ஆசியாவிலேயே மிகச் சிறந்த நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள கால்நடை பூங்காக்களை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் அமைக்க இருக்கும் பூங்காவிற்கு பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார். […]

Categories
கிரிக்கெட் சேலம் மாவட்ட செய்திகள் விளையாட்டு

சேலம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் தோனி…

சேலம் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோனி பங்குபெறுவார். சேலத்தில் 8 கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் காலை ஒன்பது மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார் புதிய மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் கூறியிருப்பதாவது “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதுமட்டுமின்றி நடக்கும்  போட்டிகள் அனைத்திலும் தோனி நிச்சயம் பங்கேற்பார்” என தெரிவித்துள்ளார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 குழந்தைகள் உயிரிழப்பு… தாய் தற்கொலை முயற்சி

சேலம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். திவ்யா எனும் பெண் தனது மூன்று வயது மகள் வர்ணிகாவையும் ஒன்றரை வயது மகள் தன்சிகா வையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது திவ்யா கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாலிதீன் பைக்கு துணி பை – மாணவர்கள் அசத்தல்

சேலம் மாவட்டம் மாவட்டம் வாழப்பாடி துணிப்பை வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளனர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வைகை இயற்கை பாதுகாவலன் இயக்கம் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பாலித்தின் தீமைகளை பற்றி எடுத்துக்கூறி துணிப்பைகளை வழங்கி வருகின்றனர் தகவலறிந்த மாணவர்களை சந்தித்த வாழப்பாடி தாசில்தார் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து மாணவன் கபிலன் கூறுகையில் “இது பிளாஸ்டிக் ஒழிப்பு மட்டும் அல்ல […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்..!!

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு மருத்துவர் கூட்டமைப்பின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன் சேலத்தில் இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
சேலம் மாநில செய்திகள்

அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் காலமானார்..!

மாநில அரசுமருத்துவர் கூட்டமையின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன்சேலத்தில் மாரடைப்பால் காலமானார். தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதியவர்களை குறிவைத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி அட்டகாசத்தால்… சேலத்தில் பரபரப்பு..!

பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் முதியவர் அங்கமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கும் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள காசகாரனூரில் உள்ள கடை முன்பு உறங்கிய வடமாநில முதியவர், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் (பிப். 04) வெளியானது. இதேபோல, […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘அதிமுககாரங்களான எங்களையே இப்டி பண்றாங்கன்னா…’ – கதறி அழுததில் மயக்கமடைந்த பெண்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் வணிக வளாகத்தில் முதியவர் மீது கல்லைப் போட்டுக் கொலை: காவல் துறை வலைவீச்சு

நள்ளிரவில் முதியவர் தலையில் கல்லை போட்டுக் கொலைசெய்த கொலையாளிகளை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் மாநகராட்சிக்கு வாடகைப் பணம் செலுத்தாமல் செயல்பட்டுவந்ததால் கடைகள் அனைத்துக்கும் கடந்த மாதம் மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே இருப்பதால் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி இந்த வணிக வளாகத்தைப் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களை சேதப்படுத்திய வனத்துறையினர், தரையில் விழுந்து கதறிய மக்கள்!

சேலம் அருகே வனத்துறையையொட்டி உள்ள பகுதியில் வசித்து வந்த மக்களை வனத்துறையினர் கட்டாயமாக வெளியேற்றி, அவர்களது வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட சார்பு நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தரையில் விழுந்து கதறி அழுததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் ஊராட்சியில், ஜல்லுத்துமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையையொட்டி உள்ள பகுதியான சூரியூர் என்ற இடத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்திற்கு டிஜிட்டல் கட்அவுட் வைத்த ரசிகர்கள்!

சந்தானத்தின் ‘டகால்டி’ பட ரிலீஸையொட்டி அவரது ரசிகர்கள் டிஜிட்டல் கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர். காமெடியனாக இருந்து தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சந்தானத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘தில்லுக்கு துட்டு 2’, ‘ஏ1’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வசூல் வேட்டையாடியது. இதற்கிடையே விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டகால்டி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. முழுநீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன. இந்த நிலையில், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் அருகிலேயே மூதாட்டியிடம் நகையைப் பறித்த பலே திருடர்கள்..!

காவல் நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த, 12 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் சூரமங்கலம் கென்னடி நகர் பகுதியில் வசித்துவரும் சந்திரா (72) என்ற மூதாட்டி, தனது வீட்டிலிருந்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள உழவர் சந்தையில் காய், கனிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த இரண்டு நபர்கள், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

30-ஆம் தேதி திருமணம்… சேலத்தில் மணமகன் கைது… சாட்சியாக அத்தான்மார்கள்.. பரபரப்பை கிளப்பிய பேனர்..!!

மேட்டூரில் திருமண விழாவிற்காக யாரும் யோசிக்காத வகையில் வித்தியசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பொதுவாக திருமண விழா மற்றும் பல விசேஷங்களுக்கு பேனர் வைப்பது வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேனர் வைத்து விழாவுக்கு வருபவர்களை ஈர்க்க நினைப்பார்கள்.    அதன்படி சேலம் மாவட்டத்தில் திருமணத்திற்காக வைத்த பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேலம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்தவர் ஸ்டீபன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறக்க வேண்டிய விவகாரம்… ரஜினி ஏன் நினைவூட்டினார் – வைகோ கேள்வி

 மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் வெடித்துள்ளன. ஃபரூக் அப்துல்லா 5ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸில் இருந்தபோது இந்தியை எதிர்த்து பெரியார் போராடினார். இந்தி படிக்க வேண்டும் என்று கூறியபோது அண்ணா போராட்டம் நடத்தினார். தற்போது இந்தி எல்லா […]

Categories
மாநில செய்திகள்

”முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்” கி. வீரமணி காட்டம்…!!

ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டினார். சேலத்திலுள்ள தனியார் விடுதியில் திராவிடர் கழகத் தலைவர் கீ வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வினால் 8 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாகவும், இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். சமஸ்கிருதத்தினை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வி கொள்கை உள்ளதாக குற்றஞ்சாட்டினார். ஹைட்ரோகார்பன் திட்ட […]

Categories
கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சேலத்தில் ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினர் கைது.!!

சேலத்தில் ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு …!!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 21ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக, சேலம் வரவுள்ளார். இதனால், அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள், காவல் கண்காணிப்பு மண்டல காவல் துறை ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”சொத்து வேணும் எனக்கு கொடுங்க” அப்பாவை கொலை செய்த மகன் ….!!

சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் சிவதாபுரம் அருகே ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு வசந்தா என்கின்ற மகளும், பூபதி என்கின்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் பூபதிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று(ஜன.19) அதிகாலை இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எருதாட்டப் போட்டியில் மாடுமுட்டி ஒருவர் உயிரிழப்பு

எடப்பாடி அருகே நடைபெற்ற எருதாட்டப் போட்டியில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வேம்பனேரி ஐய்யனாரப்பன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருதாட்டத்தைக் காண சென்ற கோவிந்தராஜ் மகன் உத்தரகுமார் (22) காளை முட்டி படுகாயமடைந்தார். இந்நிலையில், உடனடியாக அவர் எடப்பாடி அரசு […]

Categories
கோயம்புத்தூர் சென்னை சேலம் திண்டுக்கல் திருவண்ணாமலை நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

பொங்கல் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ….!!

பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு: குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒருவார காலத்திற்குள் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்படும் – சேலம் ஆணையர்

 பருவமழையால் சேதமடைந்துள்ள தார்ச்சாலைகள் ஒருவார காலத்திற்குள் புனரமைக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார். சேலம் மாநகரட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோட்டைப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 5 கோடியே 85லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாயக் கூடக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை இன்று மாநகராட்சி ஆணையார் சதீஷ் பார்வையிட்டார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” குளிர்சாதன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பெறும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுயேச்சை வேட்பாளர்கள் கடத்தல்: திமுக தொடங்கிவைத்த ‘கூவத்தூர் கும்மாளம்’.!

அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு சுயேச்சை கவுன்சிலர்கள் மூன்று பேரை திமுகவினர் காரில் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆறு இடங்களும் திமுக கூட்டணிக்கு ஏழு இடங்களும் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் செந்தில், பாரதி ஜெயக்குமார், மோனிஷா, சரிதா, சாந்தி, சிந்தாமணி ஆகிய ஆறு சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர். மொத்தம் ஒன்றியத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆகும். […]

Categories
சேலம் தர்மபுரி திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு” பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் …!!

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி கமலா திரையரங்கின் அருகே நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசியக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறவிட்ட நகை… சார் இந்தாங்க என் ஆட்டோல கிடந்திச்சு… ஓட்டுநருக்கு காவல்துறை பாராட்டு..!!

ஷேர் ஆட்டோவில், பயணி தவறவிட்ட நகைப் பையை காவல் துறையில் ஒப்படைத்த, நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் பாராட்டி பரிசு வழங்கினர். சேலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன் பிவி. இவர் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த 25ஆம் தேதி அன்று மாலை சேலம் செல்வதற்காக தனது அம்மா வீட்டின் அருகே ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கையிலிருந்த மூன்று பைகளில் ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சேலம்  மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தலைமை தகவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தலைக்கவசம் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்…!!

சேலத்தில் தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது மற்றும் முக்கிய சாலை வழியாக பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பகுதியில் தலைக்கவசம் வியாபாரம் செய்து வரும் முகமது காசிம் என்பவர் வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகையை அறிவித்து உள்ளார். அதன்படி, தலைக்கவசம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாப்பிளை ஆக ஆசைபட்ட இளைஞர்…. கம்பி என்ன வைத்த காவல்துறை ….!!

17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் பெங்களூர் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு…!!

உள்ளூர் காவல் துறையிடம் தெரிவிக்காமல் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் பெங்களூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது. சேலம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த சரக்கு கடை வைத்துள்ளார் நேற்றிரவு 9 மணி அளவில்  ரோட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச் சென்றனர். அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப்படை உறுதியளித்த தகவலின்பேரில் அந்த […]

Categories
சென்னை சேலம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் வேலூர்

மலைவாழ் மக்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்..!!

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ […]

Categories
கோயம்புத்தூர் சேலம் நீலகிரி மாவட்ட செய்திகள்

’4ஜி சேவை வழங்க வேண்டும்’ – பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்..!!

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சேலம் […]

Categories
மாநில செய்திகள்

சேலத்தை பிரிங்க….. ”ஆத்தூரை மாவட்டமாக்குங்க”….. சீமான் கோரிக்கை …!!

சேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரைத் தலையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலிருந்த மாவட்டங்களைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவித்திருப்பதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்து, அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பரப்பளவில் பெரியதாக இருக்கிற மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகத்தான் பிரிக்கப்படுகிறது என்று நம்புகிறேன். அதேநேரம், மாவட்டப்பிரிப்பு கோரிக்கையை நெடுநாளாகக் கொண்டிருக்கும் பெரிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

Breaking : ”ATM_இல் ரூ 200_க்கு பதில் ரூ 500” வாடிக்கையாளர்கள் குஷி …!!

ATM சென்டரில் ரூ 200 எடுத்தால் ரூ 500 வந்தது சேலத்தில் வாடிக்கையாளரை குஷியில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் SBI ATM_இல் வாடிக்கையாளர்கள் ரூ 200 வேண்டும் என்று எடுத்தால் ரூ 500 வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். இதனை தொடர்ந்து இந்த தகவல் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. விரைந்த வங்கி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ATM சாதனத்தை ஆய்வு செய்த போது அதில் 200 ரூபாய் பணம் வைக்கவேண்டிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு உதவுங்க…. ”நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்”….. சேலம் மாணவன் உருக்கம் …!!

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை அரசு நிதியுதவி செய்து ஊக்குவித்தால் சர்வதேச அரங்கில் அவர்கள் ஜொலிக்க முடியும் என ஏரோபிக்ஸ் வீராங்கனை சுப்ரஜா அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். சேலம் மாவட்டம் பெரியப்புதூர் பகுதியில் வசித்துவரும் பெருமாள் – பார்வதி தம்பதியினரின் மகள் சுப்ரஜா. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதல் ஆண்டு படித்து வரும் இவர், ஏரோபிக்ஸ் விளையாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்துவரும் நிலையில், 17 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உயிரிழந்த மாவோயிஸ்ட் உடலை ஊரில் புதைக்க எதிர்ப்பு!

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட மணிவாசகம் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தலைவராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி கேரளா வனப்பகுதியில் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் மணிவாசகத்தின் சொந்த ஊரான காடையாம்பட்டி ராமமூர்த்தி நகர் பகுதியில் அவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். மணிவாசகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க உத்தரவு…..!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவைக் கலைத்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் அரசு மருத்துவமனை முதல்வருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் துப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டருகே வசிக்கும் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுதொடர்பான புகார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அச்சிறுமி தற்போது 12 வாரக் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னுடைய பெண்ணுக்கு அரசு செலவில் கருக் கலைப்பு செய்யக்கோரியும், 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

கொழுத்த போகும் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை ….!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகமும் , அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் . அதில் அவர் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

டெல்டா மாவட்டதில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் …!!

டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் , ஆந்திரா கடல் பகுதியில் நிலவி வருகிறது. அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிரம்பிடுச்சு …. 12 மாவட்டம் உஷார் …. மேட்டூர் அணை நிரம்பியது …!!

தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]

Categories
மாநில செய்திகள்

நிரம்பிய மேட்டுர் அணை…. ”12 மாவட்டம் உஷார்” வெள்ள அபாய எச்சரிக்கை….!!

மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

விடாமல் வெளுத்த கனமழை…. ராமநாதபுரத்துக்கு முதலிடம் ….!!

நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

BREAKING : காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING : விடிய விடிய கனமழை….. சேலம் மாவட்டத்துக்கு விடுமுறை …!!

பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

3 டன் நெகிழிப் பைகள்… பிரபல இனிப்பு கடைக்கு ரூ 2,50,000 அபராதம்…!!

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய லாலா இனிப்புக்கடைக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளது. சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோயில் அருகிலுள்ள தனியார் லாலா இனிப்புக் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது குடோனில் 4 லட்சத்து 50 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டபுள்ளா தரேன்…. பல கோடி மோசடி ….. பெண்களுடன் உல்லாசம் ….. தம்பதிகள் கைது …!!

வெளிநாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏஜென்சி உரிமம் பெற்றுத் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாகி தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்எம்வி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகவும், ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்” சேலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு ….!!

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அருகே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதை தடுக்கும் முயற்சியாக ஓமலூர் மோட்டார் வாகன அலுவலகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விளக்கங்களையும் […]

Categories
மாநில செய்திகள்

“எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடக்காது”… முதல்வர் பழனிசாமி உறுதி.!

 எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடைபெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி  உறுதியாக தெரிவித்தார்.   சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக முதல்வர் பழனிசாமி, 424 பயனாளிகளுக்கும்  ரூ 4.93 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, கீழடியில் 4, 5ஆம்  கட்ட அகழாய்வு பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  டிஎன்பிஎஸ்சி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு முடிவுகளில் தமிழக அரசு தலையிடுவது இல்லை என்று பேசினார்.  மேலும் […]

Categories

Tech |