பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. தமிழ்நாட்டில் தைப்பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று ஆண்டுதோறும் உழைத்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இறைவனுக்கு படைத்து, தனது குடும்பத்தினருடன் புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பர். அந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெறும் பொருட்களில் ஒன்று மஞ்சள் குலைகள். எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் […]
Tag: #Sales
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ள வாழைதார்களை வியாபாரிகள் வாங்கி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழைத்தார் ஏலம் மையமானது திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் வைத்து ஏலம் விடுவர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் குவித்துள்ளனர். இதனையடுத்து காலை 10 மணியிலிருந்து வாழைத்தார்கள் ஏலம் துவங்கப்பட்ட […]
புத்தாண்டு தினத்தன்று கடந்த வருடத்தை காட்டிலும் 200% அதிகமாக உணவு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டதாக சமேடோ நிறுவனம் தெரிவித்துள்ளது புத்தாண்டு தினத்தன்று நாடு முழுவதிலும் சுமார் ஒரு நிமிடத்திற்கு சுமார் 4,254 எனும் விதத்தில் உணவு ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டதாக சமேடோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு அன்று உணவு விற்பனை மூலம் வருமானமாக 75 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த வருடங்களை காட்டிலும் […]
புத்தாண்டு தினமான நேற்று மது கடைகளில் விற்பனையானது ரூபாய் நாலரை கோடியை எட்டியுள்ளது. தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது அமோகமாக இருக்கும். இதற்காக பண்டிகை காலங்களில் மதுபானங்கள் இருப்பில் வைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி அதிகளவில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரு சில நாட்களுக்கு முன்னரே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் அதிகளவு மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனையடுத்து புத்தாண்டு தினத்தன்று மது […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயி ஒருவர் ஒரு கரும்பின் விலை 20 என தன் வயலில் பேனர் வைத்துள்ளார் தமிழர் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையாகும். அந்நாளில் மக்கள் புத்தாடை அணிந்து அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவர். இப்பண்டிகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது கரும்பு ஆகும். தற்போது இக்கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளும் வியாபாரிகளும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு […]
பல்லாவரம் அருகே திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றுவந்த 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.. இதனால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் பல பகுதிகளில் சட்ட விரோதமாக சிலர் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தும், அவர்களை போலீசார் கைது […]
திண்டுக்கல் மாவட்டம் மணல் கொள்ளை, வைகை ஆற்ற்ங்கரையில் இரவும், பகலும் மணல் திருட்டு நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வைகை ஆறு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு, மட்டப்பாறை, சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி போன்ற ஊராட்சிக்குட்பட்ட சுமார் 40 கிராமங்கள் வழியாக மதுரை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில் நிலக்கோட்டை அருகே கோவில் ஒன்றின் பின்புறம் அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் […]
பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கான இறுதி வரைவறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள், விற்பனை ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என அரசு சார்பில் […]
இந்தியாவைச் சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அனைவராலும் இந்த டார்க வெப்-க்கு செல்ல முடியாது. சர்வதேச அளவில் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த டார்க வெப்தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, டார்க் வெப்பிலுள்ள ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் (Joker’s Stash) என்ற தளத்தில் 13 லட்சம் இந்திய பயனாளர்களின் […]
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் […]
மலிவு விலையிலான நானோ கார் 9 மாதங்களில் ஒரே ஒரு காரே விற்பனையாகியுள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் அதிபர் ரத்தன் டாடா 2009ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் மலிவுவிலை காரான நானோ காரை அறிமுகம் செய்து வைத்தார். காரின் விலை 1 லட்சம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. பின்னர் காரில் தீவிபத்து ஏற்படுவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புகார்கூறியதையடுத்து விற்பனை மந்தமானது. நானோ கார் தயாரிப்பினால் ரூ. 1000 கோடி வரை நஷ்டம் […]
நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி விற்பனை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் , இலைகளின் விலை சராசரியாக 50 சதவீதம் முதல் 100% வரை விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொரிகடலை விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விதவிதமான தோரணங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதேபோல் […]
ஏர் இந்தியா விமானத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவின் விமான கடன் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து இருப்பதால் அந்நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முக்கிய விமான நிலையங்களில் இருந்து […]
நாடு முழுவதும் 4.12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 9 பெருநகரங்களில் கட்டிமுடிக்கப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விற்காமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.பிராப் டைகர் என்ற கட்டுமான இணையதளம் நடத்திய ஆய்வில் 45 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விற்காமல் உள்ளதாகவும் , மும்பையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரம் […]
ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17 17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் […]
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி அதிகமான ஆடுகள் விற்பனை செய்யபட்டது. சங்கரன்கோவில் அருகே புகழ்பெற்ற பாம்புக்கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இச்சந்தை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரும் திங்களன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருந்தது. சுமார் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் […]
பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியது. பஜாஜ் நிறுவனமானது அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் 115 சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர்,ஏர்-கூல்டு இயந்திரம்,8.4 பி.எச்.பி மற்றும் 9.81 NM டார்க் கொண்டதாகவும் பீக் டார்க்கில் 5,000 rpm-ல் இயங்க கூடிய புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் ஆரம்ப விலை ரூ.37,997-ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்களாக பெரிய கிராஸ் கார்டுகள்,டூவிக்டு சஸ்பென்சன், ரப்பர் மிரர் […]
ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி x ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் H.D+ AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைப்பதற்கு புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. […]
வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில் குறைந்த தண்ணீர் மூலம் அதிக விளைச்சல் பெறக்கூடிய தர்பூசணிகள் ஏராளமாக பயிரிடப்பட்டுள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் தர்பூசணிக்கு எதிர்பார்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் தர்பூசணி அறுவடையில் ஈஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் தர்பூசணிகலில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்த […]