மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். மன்னன் ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவரா? சைவமா? வைணவமா? என பல தரப்பில் இருந்து பல கருத்துக்கள் வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக நிர்வாக சிந்தனையில் கவனம் செலுத்தாமல் பின்னோக்கிச் சென்று வரலாற்றை சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் […]
Tag: #sarathkumar
கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதாக நடிகரும்,சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு பாலியல் கல்வி போதிக்க வேண்டும் எனக்கூறி அவர் பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும்,உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயார் என கூறிய சரத்குமார்,கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நடிகர் சசிகுமார் நடிக்கிற நானா திரைப்படத்தில் ஒரு கன்னட நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜனரஞ்சகமான திரைப் படங்களில் நடிக்கிற நடிகர் சசிகுமார் நடிப்பில் கடைசியாக பேட்ட படத்தில் நடித்து இருந்தார்.அடுத்ததாக கென்னடி கிளப் திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இதைத்தொடர்ந்து இப்போது நிர்மல் குமார் இயக்கத்தில் , தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தயாரிக்க்கும் நானா திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகதயாராக இருக்கும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் தெலுங்கு […]
“தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய புதிய கல்விக்கொள்கை அமலாக வேண்டும்” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ்கோயலையும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோரை சரத்குமார் சந்தித்து பேசினார் . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,விருதுநகரில் அண்மையில் திறக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை பொதுமக்கள் கண்டுசெல்லும் வகையில், அனைத்து ரயில்களும் விருதுநகரில் நின்று செல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உலக கல்வி தரத்திற்கு இணையாக, […]
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் […]
அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் என்ன எல்லோருக்கும் சேர்த்து தான் பிரச்சாரம் செய்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது. போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. மேலும் இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி […]