Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்லால் மானை அடித்துக் கொன்ற நபர் கைது… 5 பேர் தலைமறைவு!!

கல்லால் மானை அடித்துக் கொன்ற ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன கோட்டத்தில் உள்ள கேர்மாளம் வனச்சரகத்திற்குற்பட்ட சிக்குநள்ளி வனப்பகுதியில் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கேர்மாளம் வனச்சரக அலுவலர் அமுல்ராஜ், வனத்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது சிக்குநள்ளி வனப்பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் புள்ளிமானை வேட்டையாடி மான் இறைச்சியை கூறுபோட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினரை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பரவி வரும் காய்ச்சல் : மக்கள் முகாம் அமைக்க கோரிக்கை.

சத்தியமங்கலம் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புளியங்கோம்பை பகுதியில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், நகராட்சி பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொள்ள வரவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிருடன் மீட்பு!

சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் ஒரு நபர் ஆற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி 50 மீட்டர் தொலைவில், ஆற்றில் மிதந்துகிடந்த நபரை சிறு காயங்களுடன் மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை… அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

திம்பம் சாலையில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்து வனப்பகுதியின் நடுவே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலை தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் நாள்தோறும் சென்றுவருகின்றன. இந்நிலையில், இந்த மலைப்பாதையில் வரக்கூடிய அதிக பாரமுள்ள கரும்பு லாரிகள், மலையின் மேல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்!

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அரியப்பம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திறக்க தயாரானது. ஆனால் புதிய டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடை திடீரென்று திறக்கப்பட்டது. மதுபான பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடை திறப்புக்கு எதிர்ப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் வெங்காய லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு.!!

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வெங்காய மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடியது திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைசூரிலிருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று காலை 5 மணியளவில் […]

Categories
மாநில செய்திகள்

மிரட்டும் கனமழை….. ”தமிழகத்தில் 4 தாலுகாக்களுக்கு” வெள்ள அபாய எச்சரிக்கை …!!

கொட்டும் மழையால் நீர்நிலைகளில் அதிகளவில் நீர் செல்பவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“முறையற்ற உறவினால் நேர்ந்த கொடூரம்” பெண் கழுத்தறுத்து கொலை…. கள்ளக்காதலன் கைது..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்  கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  விரைந்து வந்த போலீசார் தேவி […]

Categories

Tech |