Categories
உலக செய்திகள்

பரிசோதனையின் போது உடைந்த குச்சி… பறிபோன குழந்தையின் உயிர்… நெஞ்சை நொறுக்கும் சம்பவம்.!!

சவுதியில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது அங்கிருந்த டாக்டர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனைசெய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது சளி மாதிரிகளை எடுக்க மூக்கின் உள்ளே விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… புனித பயணத்திற்கு தடை- சவூதி அரேபியா!

புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே ‘கோவிட்-19’ எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக, யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ‘உம்ரா’ (Umrah) வுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்…. ஏமனில் 19 சிறுவர்கள் உட்பட 31 பேர் பலி..!!

ஏமனில் கடந்த 15-ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பேர் பலியானதை ஐ.நா உறுதி செய்துள்ளது. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-ஜாஃப் நகரில் கடந்த 15ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படைகள் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஐநாவின் யுனிசெப் அமைப்பு இதனை தற்போது உறுதி செய்துள்ளது. முன்னதாக சவுதிக்கு சொந்தமான டொர்னாடோ […]

Categories
உலக செய்திகள்

ஹவுதி கிளர்ச்சி படைக்கு பதிலடி… சவுதி தலைமையில் தாக்குதல்… 31 பேர் மரணம்..!!

ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஆதரவாக ஈரான் நாடு செயல்படுகிறது. அதே சமயம் அரசு படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அல் ஜாவ்ப் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி அரேபியா […]

Categories
உலக செய்திகள்

அமேசான் உரிமையாளரின் செல்போனை ஹேக் செய்த சவுதி இளவரசர்!

அமேசான் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸின் செல்போனை சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்ததாக அமெரிக்காவின் பிரபல செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் செல்போனை 2018ஆம் ஆண்டு ஹேக் செய்ததாக அமெரிக்காவின் பிரபல செய்திதாள் தெரிவித்தது. ஹேக் செய்யப்பட்ட செல்போனிலிருந்து என்னென்ன தகவல்கள் திருடப்பட்டது என்று அறியமுடியாவிட்டாலும் ஒருசில தகவல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் தனது […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். மேலும் பல்வேறு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்லவிருக்கிறார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான எரிசக்தி, பாதுகாப்பு, கொள்முதல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.இப்பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். மோடியின் 2016ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆல் ஏரியா… சவுதி அரேபியா… ஐயா கில்லிடா… முதல் படமாக வெறித்தனம் காட்டும் பிகில்.!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் சவுதி அரேபியாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..!!

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இந்தியாவியில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.  சவுதி அரேபியாவில் இருந்து தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் உலகின் பிற நாடுகளுக்கு 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலகின் மொத்த எண்ணெய் வள நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அளவு சவூதி அரபியாவில் தான் நடைபெறுகிறது.  பல நாடுகள் கச்சா எண்ணெயை […]

Categories
உலக செய்திகள்

“புனித ஹஜ் பயணம்” உலகம் முழுவதும் “18,00,000 பேர்” மெக்காவில் குவிந்தனர்..!!

உலகம் முழுவதும் இருந்து 18,00,000- த்துக்கும் அதிகமானோர் மெக்காவில் குவிந்துள்ளனர்.  சவூதி அரேபியாவின்  மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகைக்காக ஆண்டு தோறும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்கு  உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்  லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இதுபற்றி சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா (General Suleiman bin Abdul Azizi Al-Yehya) கூறும்போது, நடப்பாண்டு […]

Categories
உலக செய்திகள்

“இனி ஆண்களிடம் அனுமதி பெற தேவையில்லை” பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம்… சவூதி அரசு அதிரடி…!!

சவூதி அரேபியாவில் ஆண்களிடம்  அனுமதி பெறாமலேயே பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் வசித்து வரும் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் தங்கள் கணவர், தந்தை அல்லது பாதுகாவலராக இருக்கும்  ஆணிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற விதிமுறை நீண்ட காலமாக இருந்து வந்தது. சவூதியின்  இந்த விதிமுறைகள்  ஆணாதிக்கத்தின் உச்சம் என சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது  சவூதி அரேபிய அரசு அந்த விதியை நீக்கியுள்ளது.அதன்படி 21 வயதைக் கடந்த […]

Categories
உலக செய்திகள்

சவூதியில் மரண தண்டனை….. 37 பயங்கரவாதிகள் தலை வெட்டப்பட்டது!!

சவுதி அரேபியாவில் பயங்கரவாதிகள்  37 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  சவூதி அரேபியாவில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். அந்நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சகஜம். பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உறுதியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்திற்கு ஆதரவை  பரப்பியோர் மற்றும் பாதுகாப்பு படையினரை தாக்கியோர் என 37 பேரை […]

Categories

Tech |