தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம் மேல்மங்கலம் லட்சுமிபுரம் தாமரைகுளம் பகுதியில் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 126.28 அடி கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் முதல் போக […]
Tag: #savewater
புதுச்சேரி முத்தரையர் பாளையம் அருகில் ஆய குளத்தை தூர்வாரும் பணியில் வாட்ஸ்அப் குழு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலாச பட்டையில் உள்ள ஏரியை புதுச்சேரி இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தூர் வாரினர். இதை தொடர்ந்து நீர் நிலை பாதுகாப்பு குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் புதுச்சேரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் உள்ள 18 குளங்களை இவர்கள் தூர்வாரி […]
ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு இன்னும் 17 நாட்களில் குடி நீர் திறந்துவிடப்படும் என்று கங்கை திட்டம் கண்காணிப்பு [பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் நிலவி வரும் தொடர் தண்ணீர் பஞ்சம் சென்னையை சுற்றியுள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் குடிநீரை பெற முடியாமல் சென்னைவாசிகள் திண்டாடினர். இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நீரை தமிழக அரசாங்கம் சென்னைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு […]
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையில் இருந்து இன்று காலை விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அடவிநயினார் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவு படி இன்று முதல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அடவிநயினார் […]
திருச்சி லால்குடி அருகே உடையும் நிலையில் உள்ள பங்குனி அணைக்கட்டை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் பங்குனி அணைக்கட்டு காவிரி ஆற்றில் இருந்து வரும் நீர் மற்றும் உபரி நீரால் நிரம்புகிறது. சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களுக்கு பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் பங்குனி அணை கட்டு, தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை […]
ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு இடங்களில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்து. தற்போது மழையின் அளவு குறைந்து விட்டதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் தொடர்ந்து 14-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் […]
நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தனியார் தண்ணி லாரி உரிமையாளர்கள் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் 20 […]
காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தின் மூலம் 83 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக காவேரி-கோதாவரி நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 83 டிஎம்சி நீர் மட்டுமே ஒதுக்கப்படும் என தேசிய நீர்வள மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ஆந்திரா தெலுங்கானா […]
கர்நாடகாவில் இருந்து காவேரிக்கு உறுதியாக தண்ணீர் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படுவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணிர் நிச்சயம் வரும் என்று தெரிவித்தார். மேலும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு என […]
கர்நாடாகாவின் இரண்டு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 நாட்களில் 50 அடியை கடந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அணைகளில் இருந்து 11,443 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
திருவண்ணாமலை அரசு பள்ளியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரம் வளர்ப்பதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணி குப்பம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வருகின்றன. அப்பள்ளி வளாகத்தை சுற்றி மாணவர்கள் சார்பில் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காட்சியளித்து வருகிறது. ஏராளமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் அதிகரித்துள்ள […]
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம் தூர்வாரும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம், நீலம்பூர் முத்துகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர் ,படந்தால், கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக வைப்பாறு விளங்குகிறது. இந்நிலையில் வைப்பாற்றில் அதிக அளவிலான கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து சாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் வைப்பாறு முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து […]
ஜோலார் பேட்டை-சென்னை ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம் ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டன. இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் புறப்பட தயாராகி […]
திருச்சியில் மழை வேண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் […]
தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக சார்பில் நடைபெறக் கூடிய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில் குடிநீர் பிரச்சனையை போக்க கோரி […]
தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை சென்னை தற்போது சந்தித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மக்கள் தொகையானது இருந்துவருகிறது ஆகையால் சென்னையில் நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ஆனால் தற்போது அது குறைந்து வெறும் 525 லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சத்தை […]
தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணின் முகத்தில் வெட்டிய சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரத்தை அடுத்த அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுபாஷினி மற்றும் மோகன் இவர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் இவர் தலைமைச் செயலக பணியாளர் மற்றும் சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார் […]
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் ஒரே நாளில் நீர் மட்டம் ஆனது 8 அடி உயர்ந்து 20.40 அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதன்படி தற்போது அணையின் நீர்வரத்து 1153 கன அடியாக உள்ளது. மேலும் அதே நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தென்காசி பகுதியில் சாரல் விழுந்து […]
கோடை வெயிலை தணிக்கும் வகையில் இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மற்றும் குடிநீர் பிரச்சனைகளாலும் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி மணிகண்டன் பொதுமக்கள் அவதி படுவதை கண்டு தனது சொந்த செலவில் தனது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கும் […]
கடலூர் பகுதிகளில் தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் கடலூர் மக்கள் வேதனையில் உள்ளனர் கடலூர் நகராட்சி பகுதிகளுக்கு திருவந்திபுரம் பகுதியில் உள்ள நீர்த்தேக்க நிலையங்களில் இருந்து குடிநீர் பிரத்தியேக குழாய்கள் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீப காலத்தில் கடலூர் நகரப்பகுதிகளில் குடிநீர் எடுத்து வரும் குழாய்களில் அவ்வபோது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன .இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கடலூர் செம்மண்டலத்தில் […]
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுக்கள் குடிநீரை அதிகவிலைக்கு வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . சென்ற ஆண்டு போதிய அளவு கன மழை இல்லாததால் ஏரிகளில் நீர் வரத்து மோசமான நிலையில் குறைந்துள்ளது குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கும் செம்பரம்பாக்கம் சோழவரம் பூண்டி ஆகிய ஏரிகள் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தேவைப்படும் நிலையில் வெறும் 550 லிட்டர் மட்டுமே […]