கொரோனா குறித்து வெளியான தகவலால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தென்கொரியாவில் 7829 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதில் 163 பேரை மீண்டும் கொரோனா தாக்கியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது குணமடைந்த 100 பேரில் மீண்டும் 2% தாக்கியுள்ளது. மீண்டும் கொரோனா தாக்கியுள்ள 100 பேரில் 44 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டிருக்கிறது. மறுபடியும் கொரோனா வந்துவிட்டது என்று சந்தேகமா இருக்கிறது, ஆனால் சோதித்து பார்த்த பொழுது, தெரிந்த தகவல் கொரோனா […]
Tag: Scientists
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 37 நாடுகளில் கொரோனா பரவி உயிர் பலி வாங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றது. ஆனாலும் கட்டுப்படுத்துவதற்கு திணறி வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வருகின்ற தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் […]
மனிதர்கள் மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற காரணத்தால் இதுவரை 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் அழிந்து வரும் பூச்சி இனங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பூச்சி இனங்கள் மட்டுமில்லாமல் வண்டுகள் மற்றும் பறவை இனங்களும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரையில் பார்த்தோம் என்றால், 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இந்த பட்டியலில் […]
இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் டிசம்பர் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த சூரிய கிரகணத்தில் சூரியனை சுற்றி நெருப்பு வளையம் தோன்றும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனை பூமி சுற்றிவரும் பாதையின் தளமும் நிலவு பூமியைச் சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றிவரும் பாதை புவி – சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய […]
உலகின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் ஒரு புதிய வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் நீர்மூழ்கி வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் போது, ஒரு புதியவகை ஜெல்லிமீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல், பூச்சாடி போன்று தோற்றத்தை கொண்டிருந்தது. அந்த ஜெல்லி மீன் தோற்றம் கூம்பு […]
உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட “வெள்ளை நிறமிப் பல்லியை (White pigment lizard) உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். ஜார்ஜியா நாட்டின் பல்கலைக்கழகத்தைச் நேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள் CRISPR என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரீபியன் தீவுகளில் அதிகமாக காணப்படும் குறிப்பிட்ட வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளைத் தனியாக பிரித்தனர். பின்னர் அதிலுள்ள டிஎன்ஏ (DNA) மூலமாக புதிய உயிரினத்தை உருவாக்க சோதனைகளை நடத்தி வந்தனர். இந்தச் சோதனைகளின் விளைவாக “அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமி” கொண்ட புதிய […]
பருவநிலை மாற்றத்தால் ஐஸ்லாந்தில் முற்றிலும் பனிப்பாறை உருகியதால் அப்பகுதி மக்களும், விஞ்ஞானிகளும் இணைந்து துக்கம் அனுசரித்தனர். ஐஸ்லாந்து நாட்டின் பல்வேறு பனிப்பாறைகள் வெப்பமயமாதலால் உருகி வருகின்றது. முன்னதாக ஓகேஜோகுல் என்ற பிரம்மாண்ட பெரிய பனிப்பாறையும் 20-ம் நூற்றாண்டு முதல் உருகி வந்தது. 1986-ம் ஆண்டு செயற்கைகோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படத்தில், பிரம்மாண்ட பனிப்பாறையாக காட்சியளித்த ஓகேஜோகுல் தற்போது முற்றிலும் உருகிய நிலையில், இந்தாண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிறு சிறு திட்டுகளாக காட்சியளிக்கின்றது. இந்நிலையில் முற்றிலும் உருகிய முதல் பனிப்பாறைக்கு […]
நாசா விஞ்ஞானிகள், பூமியைப் போலவே இருக்கும் புதிய கிரகத்தை கண்டபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள், டெஸ் என்ற தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர் . விஞ்ஞானிகள் இந்தக் கிரகத்திற்கு ஜி ஜே 357 என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகமானது பூமியிலிருந்து சுமார் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது .மேலும் இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கிரகம் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருவதனால் அதிகக் குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாததால் […]
சந்திரனில் அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகளால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்கி வருகிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சந்திரனை சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. அந்த அப்பல்லோ விண்கலன்கள் சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொண்டதில் அதன் மேற்பரப்பு திராட்சை பழம் போல சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது. அதனை வைத்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். […]
ஆண் மலைப்பாம்பு உதவியுடன் 17 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பை விஞ்ஞானிகள் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் பிக் சைப்ரஸ் என்ற தேசிய வனப்பகுதியில் சில காலமாக பறவை, முயல் உள்பட சிறிய வகை விலங்குகள் அடிக்கடி மாயமாகி வந்தன. இதுகுறித்து ஆராய்ந்ததில் பெண் மலைப்பாம்பு ஒன்று இந்த விலங்குகளை வேட்டையாடி வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும் அந்த மலைப்பாம்பு பெரிய உயரமும் , 64 கிலோ கிராம் எடையும் கொண்டுள்ளது என தெரிந்ததையடுத்து வனத்துறையினர் விஞ்ஞானிகளின் உதவியுடன் மலைப்பாம்பை பிடிக்க திட்டமிட்டனர். […]