ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் மணப்பாறை அருகே பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் குழந்தை மீட்கப்படாதது பெற்றோர்கள், பொதுமக்களிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரிக் இயந்திரத்தை கொண்டுவர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தை விரைவில் மீட்கப்படும் என்றும் மீட்புப் பணியினர் நம்பிக்கையளித்து வருகின்றனர்.
Tag: #SDRF
ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் நடுக்காட்டுப்பட்டி வந்தடையும். ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கியது. அதன் பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை படிப்படியாக 85 அடியைத் தாண்டி தற்போது 100 அடிக்குச் சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். நேற்று மாலை 5.40 மணிக்கு குழந்தையை மீட்க தொடங்கப்பட்ட மீட்புப் பணி 29 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை. […]
பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல சுர்ஜித்துகள், தன் இன்னுயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் கதறல்கள் வெளியே கேட்காவிட்டாலும், நீதிமன்ற வாயில்களில் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் அனைவரின் கவனமும் திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. அதற்கான காரணம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் அழுகுரல். அந்த குழுந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஐஐடி குழுவினர் என அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுபோன்று பல ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை பெய்து வருவதால் மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க தொடங்கப்பட்ட இந்தப் பணி 27 மணி நேரத்தை கடந்த பின்பும் தொடர்கிறது. 85 அடியில் இருந்த குழந்தை படிப்படியாக 100 அடிக்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புக் குழுவினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்எல்சி, ஓஎன்ஜிசி தீயணைப்புத் துறையினர் இணைந்து 1 மீட்டர் அகலத்திற்கு 100 […]
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவித்துவரும் குழந்தையிடம் எந்தவித சமிக்ஞையும் வராதது மிகுந்த வேதனையளிப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முகாமிட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துவரும் நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை […]
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணிகள் கடந்த 27 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் மத்திய நீர்வள அமைச்சகம் 2009ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் ஆழ்துளைக் கிணறுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் […]
இந்தியாவில் இந்தாண்டு ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த ஒரு சிறிய தொகுப்பு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழந்தது. நேற்று மாலை 5.40 மணியளவில் கிண்றறில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 27 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. அவரை மீட்பதற்காக பல்வேறு பிரார்த்தனைகளும் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற […]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 27 மணி நேரத்தை தாண்டியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்கும் கீழ் சென்று விட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. குழிதோண்ட எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மீட்டர் அகலத்தில் […]
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 23 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 30 அடியிலிருந்த குழந்தை சுர்ஜித் மீட்புப் பணியின்போது 68, 70, 80 என கீழே சென்றுவிட்டதால் மீட்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குழந்தையை மீட்க தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். 23 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை சுர்ஜித்தை மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படையினர் போராடிவருகின்றனர். […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்டுவருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுர்ஜித் 17 மணி நேரமாக சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.குழந்தை சுர்ஜித்தை உயிரோடு மீட்க உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பெரியாண்டவர் சன்னதியில் நடைபெற்ற தொழுகையில் குழந்தை எந்த […]
மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நேற்று (அக்.25) மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. சிறுவனை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புப் பணி தொடர்கிறது. இதனிடையே, குழந்தை […]