வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி சத்திரம் வீதி, பவானிசாகர் ரோடு, மாதம்பாளையம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான 126 கடைகள் அமைந்துள்ளது. இதில் பல மாதங்களாக 67 கடைகளின் உரிமையாளர்கள் 11 லட்சம் ரூபாய் வரை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை. […]
Tag: # Sealed
அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் அமைந்துள்ளது. இதில் 10 பேர் 25 லட்ச ரூபாய் வரை கடைக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனை அடுத்து குடிநீர் வரி கட்டாத குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பையும் அதிகாரிகள் […]
35 லட்ச ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 கடைகளுக்கு சில ஆண்டுகளாக வாடகை தராமல் 35 லட்ச ரூபாய் வரை பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தும்படி கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனாலும் கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தாததால் 7 கடைகளை […]
ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்ததால் பொதுமக்கள் கூடிய கடையை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையின் திறப்பு விழாவில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்துள்ளனர். இதனால் பிரியாணி வாங்குவதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அந்த கடைக்கு முன்பு மக்கள் குவிந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு விரைந்து சென்று சமூக இடைவெளி இல்லாமல் […]
கலெக்டர் கருணாகரனின் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக காலிங்கராயன் கால்வாயில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றி 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் கால்வாய் மூலம் சுமார் 14 ஆயிரத்து 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைகின்றன. மேலும் விவசாயிகள் இந்த கால்வாய் பகுதியில் வாழை, நெல், மஞ்சள் போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீரை கடந்த சில வாரங்களாக காலிங்கராயன் கால்வாயில் வெளியிடுவதாகவும், விளைநிலங்கள் […]
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி மற்றும் காஜியாபாத் இடையிலான எல்லைகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன. காசியாபாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1397 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் சுமார் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து […]
சென்னையில் விதிகளை முறையாக பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையான மளிகைக்கடைகள், பால், இறைச்சி கடை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்து வந்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை […]
அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் தொடர்பான பாலியல் வழக்கில், பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தை காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் என்ற அரசு அலுவலர், தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக இரு பெண்கள் மிரட்டிவருகின்றனர் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பெண்களுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக […]
இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் […]