கோஸ்ட்டா ரிகா நாட்டில் 3 டன் கொகைன் போதை பொருட்களை அந்நாட்டு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்ட்டா ரிகாவில் (Costa Rica) 3 டன் கொகைன் (Cocaine) போதை பொருளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் கொலம்பியாவிலிருந்து படகு மூலம் கரீபியன் கடல் பகுதி வழியாக கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 3 பேரும், நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
Tag: seized
வேதாரண்யத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தி வரப்பட்ட 661 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து, 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட போலி தனியார் நிறுவன கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஆந்திராவிலிருந்து வந்த […]
தாய்லாந்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட விஷத்தன்மை உடைய உயிரினங்களை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். சென்னை விமான நிலையத்துக்கு கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, தாய்லாந்திலிருந்து சென்னை வந்த இப்ராகிம் ஷா (38) என்பவரிடம் அலுவலர்கள் விசாரித்தனர். ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர். அதில் ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு […]
வங்கி மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் சொத்துகளை ஏலத்தில் விற்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பின்னர், அமலாக்கத் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர […]
காஞ்சிபுரம் அருகில் வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில் உள்ள வயல்வெளியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி […]