கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், […]
Tag: Sharad Pawar
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை மறுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தன்னால் ஆட்சியமைக்க இயலாது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை சந்தித்த சிவசேனா, காங்கிரஸிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு தெரிவிக்காத நிலையில் ஆளுநரிடம் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. […]
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 […]
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சிவசேனா ஆதரவில் அமைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வருகிற 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ளது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழா (தேர்தல்) கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்தது. வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா […]