மொபட் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நேர்ப்புகப்பட்டி பகுதியில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். சிங்கப்பூரில் வேலை பார்த்த மதன் சொந்த ஊருக்கு வந்து நதியா என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். நேற்று கணவன் மனைவி இருவரும் காரைக்குடி சென்று விட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது காரைக்குடி நோக்கி வேகமாக வந்த கார் மொபட் மீது […]
Tag: Sivagangai
தண்ணீரில் தத்தளித்த முதியவரை வாலிபர்கள் மீட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் பெரிய மேம்பாலம் அமைந்துள்ளது. இதற்கு கீழே கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்நிலையில் கால்வாயில் இருக்கும் பள்ளத்தில் 62 வயது முதியவர் ஏற முடியாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த மாரிகண்ணு, தென்னரசு ஆகிய வாலிபர்கள் முதியவரை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர் வேலூரைச் சேர்ந்த நாராயணன் என்பதும், ராமேஸ்வரத்திற்கு செல்வதும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த முதியவரை போலீசார் கார் […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவிக்கு 4 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல மாகாணம் கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வீட்டில் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஆலங்குடியில் ஊராட்சி தலைவியாக இருந்த ராணி என்பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது ராணி 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் வெங்கடேசன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ விற்பனையாளரான தனுஜா என்பவரிடமிருந்து 600 ரூபாய் மற்றும் செல்போனை திருடி செல்ல முயன்றார். இதனை பார்த்த தனுஜா சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெங்கடேசனை பிடிக்க முயன்றனர். அப்போது அச்சத்தில் செல்போனையும், பணத்தையும் தூக்கி எறிந்து விட்டு வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் தனுஜாவும் அவரது உறவினர்களும் […]
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தி.புதுப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அடைக்கலம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கபடி வீரரான அடைக்கலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நரியங்காடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் குன்றக்குடி அணிக்காக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் வெற்றி பெற்ற அணி அரை இறுதி சுற்றுக்கு தேர்வாகியது. இதனை அடுத்து சக வீரர்களுடன் போட்டி முடிந்த […]
கடப்பாரையால் அடித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காராம்பட்டி பகுதியில் சின்ன கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா(56) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே மின்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் திடீரென உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் லட்சுமி செய்வினை வைத்ததால் தான் தனது மகள் இறந்ததாக கூறி கருப்பையா அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]
பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஜான் பெஸ்டர்ட் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் இவர் சிவகங்கையில் இருந்து காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மற்றும் அழகப்பா அரசு கலை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பில் கல்லூரி முதல்வர் துரை தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவ மாணவிகள் காரைக்குடி ஆரிய பவன் சந்திப்பிலிருந்து கல்லூரி சாலை வழியாக அழகப்பா அரசு கலை கல்லூரிக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போது இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படியும், முழக்கங்களை எழுப்பியும் மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிவகங்கை […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் வசிக்கும் பூசாரி சிங்கராஜா என்பவர் பழங்கால சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்த தகவலின் படி பாண்டியநாடு பண்பாடு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, மகாபாரதம், அக்னி, மச்ச புராணங்களில் அடிப்படையில் தேவர்களின் குரு பிரகஸ்பதி ஆவார். இவர் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி […]
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கொரியர் சர்வீஸ் நடத்துபவர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் நடத்துபவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். தற்போது மாற்று வழியாக ஆம்னி பேருந்து, பார்சல் சர்வீஸ், மற்றும் கொரியர் ஆகியவற்றை பயன்படுத்தி போதை பொருட்களை அனுப்புகின்றனர். […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல தேங்கியது. இதனையடுத்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீரென பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலவியதால் பொதுமக்கள் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவபுரி பட்டியில் அமைந்துள்ள தர்மவர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் வடுகபைரவர் உள்ளார். இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. முன்னதாக கோவில் முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள், 21 வகையான சிறப்பு அபிஷேகம், விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடுகபைரவரை தரிசனம் செய்தனர்.
ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார்(24) என்பவர் கையில் வாள் போன்ற பயங்கர ஆயுதத்துடன் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்தனர். அவர் மீது காவல் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்லக்கண்ணு என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தி 160 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து […]
கோவிலில் நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆசிரமம் கிராமத்தில் ஏழு முக காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வருமுன் காப்போம் திட்டம் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் யூனியன் தலைவர் சின்னையா தலைமையில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு வரவேற்புரை ஆற்றியுள்ளார். இதனை அடுத்து வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் […]
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 2-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்து கலெக்டர் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, அதிகாரம் வழங்கல் அமைச்சகம், மத்திய அரசின் சமூக நீதி மூலம் இம்மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்களுக்கும், […]
நாவல் பழம் பறிக்க சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீனிமடை கிராமத்தில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கொம்புகாரனேந்தல் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது சில மாணவர்களுடன் சேர்ந்து மனோஜ் பள்ளிக்கு வெளியே சென்று நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துள்ளார். […]
குடும்ப தகராறில் கணவர் மீது தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை ஜீவா நகரில் லிங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கயற்கண்ணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அங்கயற்கண்ணி தூங்கிக் கொண்டிருந்த போது தன் மீது தீ வைத்ததாக லிங்கநாதன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு யாழ்மணி தேவா(6) என்ற மகனும், யோக வர்ஷினி(2) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் யாழ் மணி தேவாவிற்கு பிறந்ததிலிருந்து பேச்சு வரவில்லை. இதனால் சிறுவனுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும் […]
பள்ளியின் தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. மேலும் அவர்கள் பொது தேர்வும் எழுதவில்லை. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரான வெங்கடேசன் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக […]
நகை வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தகராறு தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நகைகளை கொள்முதல் செய்து கொடுப்பதற்காக முத்துக்குமாரிடம் இருந்து 30 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். இதில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டும் மணிகண்டன் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகைக்கான நகைகளை மணிகண்டன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக […]
ரயில்நிலையத்தில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி ரயில்நிலையத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகரில் முனீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் வெளியே சென்று பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முனீஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் மடப்புரம் விலக்கு பகுதியில் வசித்து […]
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 14 வயது மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை 14 வயது மாணவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயார் சிவகங்கையிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை பேருந்துநிலையம் முன்பு சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசின் பெட்ரோல், சமையல் கேஸ் சிலிண்டர், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் வட்டார காங்கிரஸ் தலைவர் மற்றும் தலைமை பேச்சாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய […]
தனியார் கடைக்கு சென்ற நபர் தனது விலாசத்தை மாற்றி கூறிய குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காந்தி வீதியில் தவணை முறையில் பொருட்களை விற்கும் தனியார் கடை ஒன்று இருக்கிறது. இந்த கடைக்கு ஒருவர் தவணை முறையில் டி.வி. வாங்குவதற்காக வந்துள்ளார். அவர் தான் சிவகங்கை பேருந்து நிலைய பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். பின்னர் கடை ஊழியர்கள் அவரது ஆதார் எண்ணை சோதனை செய்து பார்த்தனர். அப்போது அந்த […]
இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இலுப்பக்குடி கிராமத்தில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு அழகப்பா அரசு கலை கல்லூரியின் முதல்வர் லட்சுமி தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து இலுப்பக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இந்நிலையில் இலுப்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் […]
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து கலைச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் […]
மர்ம நபர் தங்க நகையை பறிக்க முயன்ற போது தாய்-மகள் இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்கங்குடி கிராமத்தில் சண்முகம்- ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்வேதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது மகளை அழைத்துக்கொண்டு கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ராணியின் […]
தங்க சங்கிலியை திருட முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்பாள்புரத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வைர கற்கள் பதித்த 2 3/4 பவுன் சங்கிலியை நகை கடையில் கொடுத்து விட்டு புதிதாக நகை வாங்க முடிவு செய்தார். இதற்காக புவனேஸ்வரி தனது சகோதரியுடன் நகைக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் தங்க சங்கிலியை வாகனத்தின் சீட்டுக்கு அடியில் இருக்கும் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு புவனேஸ்வரி ஏ.டி.எம் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பொட்டல் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக பாண்டி பல்வேறு இடங்களில் பெண் பார்த்துள்ளார். ஆனால் செல்லப்பாண்டிக்கு ஏற்ற வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பாண்டி தங்க நகைகளை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் அவலத்தை மதுவில் கலந்து குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மடப்புரம் விலக்கு பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு சசிகுமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருவிடையார்பட்டியில் கூலி தொழிலாளியான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் அனைவரும் பெண்பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் வீடு திரும்பியவுடன் தனக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என நாகராஜன் கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வேன் வைத்து காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேனில் இருந்த மோட்டரில் திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் நடுரோட்டில் வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அருண்குமார் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]
அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கூடம் முடிந்து சிறுவன் வேனில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடந்து செல்ல முயன்ற சிறுவன் மீது சிவகங்கை நோக்கி வேகமாக சென்ற டவுன் பேருந்து […]
செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் காரைக்குடியை சேர்ந்த ராஜா ஆனந்த் என்பவர் ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா ஆனந்த் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது அதனை கவனிக்காமல் அந்த மாணவர் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பார்த்த ராஜா மாணவரை […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராந்தமங்கலம் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில அவ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல்துறையூர் கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராந்தமங்கலம் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில வ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல்துறையூர் கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இளையான்குடி மின் உற்பத்தி நிலையத்திற்கு உட்பட்ட இடையமேலூர், வில்லிபட்டி, மேலப்பூங்குடி, சாலூர் மற்றும் மல்லம்பட்டி போன்ற கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என சிவகங்கை மின்வாரிய பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி […]
நாய் குறுக்கே பாய்ந்ததால் மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை புறவழிச்சாலையில் திருச்சியிலிருந்து தொண்டி நோக்கி மினி லாரி ஒன்று காய்கறி ஏற்றி கொண்டு சென்றுள்ளது. அப்போது திடீரென நாய் ஒன்று மினி லாரியின் குறுக்கே பாய்ந்துள்ளது. அதன் மீது மோதாமலிருக்க மினி லாரியின் ஓட்டுனர் வேகத்தை குறைத்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இதில் காய்கறி அனைத்தும் சிதறி போய்விட்டது. அந்த […]
டிராக்டரில் மணல் கடத்த முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மேல்துறையூர் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக பிராந்தமங்கலம் கால்வாயில் மணல் அள்ளி தனது டிராக்டரில் கடத்த முயன்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் முருகேசனின் டிராக்டாரை சோதனை நடத்தியுள்ளனர். அப்போது முருகேசன் மணல் கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிந்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வையாபுரி பட்டியில் சிறைமீட்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் தமிழ்நாடு ஏறுதழுவுதல் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் பூமிநாதன் தொடங்கி வைத்த பந்தயத்தில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. போட்டியில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டி பந்தயத்தின் இறுதியில் முதல் பரிசை காஞ்சனா தேவி மற்றும் அஜ்மல்கான் வண்டி பெற்றுள்ளது. இரண்டாவது பரிசை விபிலன் வண்டி பெற்றுள்ளது. மூன்றாவது பரிசை யாஷிகா வண்டி […]
இருசக்கர வாகனம்-கார் மோதி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மாதா ஆலயம் அருகே வேகமாக வந்த கார் சுமித்ரா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த சுமித்ரா, சம்பவ […]
மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த குற்றத்திற்காக மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாளை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியம்மாள் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம […]
ஒரே நேரத்தில் 5 வீடுகள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இங்கு வசிக்கும் பிச்சப்பன், முருகானந்தம், பாண்டி, செல்வம், கலைச்செல்வி ஆகிய 5 பேர் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பயங்கர […]
ஊராட்சி ஒன்றிய அலுவலர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள குறிஞ்சி நகர் பகுதியில் முரளி-துர்காதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவரை எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]
வீடு இடிந்து விழுந்ததால் மூதாட்டி கழிப்பறையில் வசித்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பில்லத்தி கிராமத்தில் மூதாட்டியான அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அம்மாக்கண்ணுவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் தங்குவதற்கு இடமில்லாமல் மூதாட்டி வீட்டின் முன்பு கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் பொருட்களை வைத்துக் கொண்டு அதன் அருகிலேயே சமைத்து வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து மூதாட்டி கூறும் போது வீடு இடிந்தது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் […]
வெறிநாய்கள் கடித்ததால் 33 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வலங்காவயல் கிராமத்தில் விவசாயியான சோலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 38 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தோட்டத்தில் இருக்கும் கொட்டகையில் ஆடுகளை அடைத்துவிட்டு சோலை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 33 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு சோலை அதிர்ச்சி அடைந்தார். மேலும் 5 ஆடுகள் உயிருக்கு […]
மாயமான பெண் சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினிக்கும், கண்ணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு நந்தினி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு குழந்தைக்கு தங்க நகை எடுப்பதற்காக நந்தினி தனது தாயுடன் […]