Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஒருவர் பலி!

சிவகாசி முதலிப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு

சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பரிசு பெட்டி” 40 வகையான பட்டாசு ரூ575 மட்டுமே……. தீபாவளி சிறப்பு சலுகை….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பெட்டி என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசியில் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களை அரைக்கும் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் சொந்தமாக கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி முடிந்து வீடு சென்றவுடன் வெடி உப்பில் திடீர் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு  கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தகவல் கொடுக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து “2 பேர் படுகாயம் ..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் . விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை  முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. […]

Categories

Tech |