காலை 8 மணி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாசி மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை பெரிய கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு காலை 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்துள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம் கோபுரம் மற்றும் மேம்பாலங்கள் போன்றவை பனியால் […]
Tag: #Snow
அதிகமான உறைப்பனி காரணமாக ஊட்டியில் தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் அங்கு உள்ள புல்வெளிகள், செடிகள் மற்றும் வனப்பகுதிகள் வேகமாக கருகி கொண்டே வருகின்றன. இந்நிலையில் கடுமையான உறைப்பனி காரணமாக கேத்தி, பாலாடா, சோலூர், லவ்டெல், வேலிவியூ போன்ற இடங்களில் பச்சைப் பசேலென காட்சி அளித்த தேயிலைத் தோட்டங்கள் பனியின் காரணமாக […]
ஊட்டியில் கடுமையான உறைப்பனியின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் உள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானம், ரயில் நிலைய வளாகம், காந்தல் விளையாட்டு மைதானம், குதிரைப்பந்தய மைதானம், பைக்காரா, தலைகுந்தா, எச்.பி.எப், அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற அனைத்து இடங்களிலும் புல்வெளிகளில் மீது வெள்ளைப் போர்வை போர்த்தியது போல […]
காஷ்மீரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் இன்ஸ்பெக்டர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் உயிரிழந்தனர். காஷ்மீரில் அதிகளவு பனிப்பொழிவு உள்ளதால் சாலைகளும், குடியிருப்புகளும் பனியால் மூடப்பட்டன. இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் எச்.சி. முர்மு என்பவர் ஸ்ரீநகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ செய்யது எம் அக்கூன் என்பவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட அதிக பனிப்பொழிவு காரணமாக திடீரென அவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் […]
பிரான்ஸ் நாட்டில் 2 அடி ஆழத்துக்கு உறைபனியில் தலை கீழாக புதைந்து மாட்டிக் கொண்ட இளம் வயது பெண் ஒருவரை பனிச்சறுக்கு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இங்கிலாந்து வீரரான வில் ஃபீல்ட் (Will Field), என்பவர் பனிச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் 2 கால்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பதை பார்த்து உடனே அருகில் சென்றார். அங்கு உறைபனியில் பெண் ஒருவர் தலைகீழாக சிக்கி கொண்டிருப்பதை கண்டார். ஆம், அவரது தலை […]