தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் ரானா தெரிவித்தார். மேலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை […]
Tag: Sonia Gandhi
ராஜாஸ்தானில் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளது குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சரிடம் சோனியா காந்தி விளக்கம் கோரியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் அவினாஷ் பான்டே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் விளக்கம் கோரியுள்ளார். அதன்படி சோனியா காந்தியிடம் தற்போது நிகழும் சூழ்நிலையை அவினாஷ் பான்டே […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடிமற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது 73 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ,நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் அவர் வாழ பிராத்திப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் .சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், நாட்டில் மதச்சார்பின்மையையும் , கூட்டாட்சி தத்துவத்தையும் […]
கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், […]
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தேசியக் குடியுரிமை மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் குளிர் காலக் கூட்டத்தொடரை எவ்வாறு கையாள்வது, எந்த மாதிரியான திட்டங்கள் தேவை என்பதெல்லாம் குறித்து ஆலோசிக்க இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் […]
சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் நோக்கை காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் சாடியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, […]
கட்சி எடுக்கும் ரகசிய முடிவுகள் மற்ற கட்சிக்குச் சென்றடைவதைக் கட்டுப்படுத்தும்விதமாக முக்கிய கூட்டங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னை, பொருளாதார மந்தநிலை போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்விதமாகவும் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நவம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.இது குறித்து விவாதிக்க பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளடக்கிய கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி […]