கொரானா வைரஸ் காரணமாக ஐ.பிஎல் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார் சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 3100க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது.மேலும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் தற்போது பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2020 […]
Tag: #SouravGanguly
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்மூலம், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்களை குவித்த கங்குலியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில், 348 ரன்கள் இலக்குடன் […]
ரிஷப் பந்திற்கு பதில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியது கேப்டன் கோலியின் முடிவு என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ரீப்ளேஸ்மெண்ட்டாக கருத்தப்படும் ரிஷப் பந்த், சமீப காலங்களாக விக்கெட் கீப்பிங் + பேட்டிங் இரண்டிலும் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்துவந்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியதால் அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை கே.எல். […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்த இரு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனை கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பெரும் தோல்வி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சுக் கூட்டணியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடித்தது இந்திய அணியின் மனஉறுதியைப் […]
தோனியைப் போன்ற திறமையான வீரர் மிக விரைவில் கிடைப்பது மிகவும் கடினம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், தோனி இனி விளையாடுவாரா இல்லை… ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இதனிடையே தோனியின் எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், […]
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஷ்டாக், பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து தனது வீடியோவில் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் எல்லைப் பிரச்னை போன்ற அரசியல் ரீதியிலான விஷயங்கள் இருப்பதே ஆகும். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் சமயங்களில் இருநாட்டு வீரர்களும் எலியும் பூனையுமாய் இருந்தாலும் போட்டிக்கு வெளியே உள்ள அவர்களின் […]
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பங்கேற்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்தியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்துவருகிறார். இதனிடையே அறுவை சிகிச்சைக்குப்பின் சமீபத்தில் வலைபயிற்சி மேற்கொண்ட பும்ரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது, இந்திய வீரர்களுக்கு பந்துவீசினார். இந்திய அணியின் பிசியோ […]
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த 10 ஆண்டுகளில் அதிக சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் (தற்போது டெஸ்டில் மட்டும்) ரவிச்சந்திரன் அஸ்வின். 2010ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் இவரின் கேரம் பால் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மண்ணை கவ்வியுள்ளனர். இதனால் அணியில் சேர்ந்த […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கங்குலியின் மகள் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் 18 வயது மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவருடயை இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலானது. அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும், குழுக்களும், இனங்களும் தேவைப்படுகின்றன. அதன்மூலம் அரக்கத்தனத்தை […]
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி வெளியிட்ட அறிக்கையில். சிறந்த வீராங்கனைகளை உடைய ஏழு அணிகளை கொண்ட ஐ .பி .எல் போட்டி நடத்தலாம் என அறிவித்துள்ளார் . மகளிருக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது . கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக பல நாட்டு வீராங்கனைகள் பங்குபெற்ற இருபது ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிலையில் மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி இந்திய […]
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார். இந்திய அணியின் ஒப்பற்ற விக்கெட் கீப்பரான தோனியின் ஓய்வுக்குப்பின் அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் தோனியின் ஓய்வு எப்போது என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அவரது இடத்தை நிரப்புவதற்காக இளம் விக்கெட் கீப்பர் […]
இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கிடைத்த சொத்து என்று பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற வங்கதேச அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. […]
இந்திய அணி பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கு தயார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்து வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளை பார்க்க நேரம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐசிசி டெஸ்ட் போட்டிகளை ஒருநாள் போட்டிகள் போல் பகல் – இரவு போட்டிகளாக நடத்த முடிவு செய்து சில போட்டிகளை நடத்தியது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ள நிலையில், […]
பிசிசிஐயின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி கங்குலி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்தச் சூழலில் கங்குலியின் நியமனம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் பிரபல ஆங்கில […]
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போன்று பிசிசிஐ-யும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனிடையே சவுரவ் கங்குலி பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இன்று பதவியேற்றார். இதன்மூலம் 65 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஒருவர் பிசிசிஐயின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விண்ணப்பித்து இருந்தார். கடந்த 33 மாதங்களாக தலைவர் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று BCC_யின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பை ஏற்றிருக்கிறார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39ஆவது தலைவராக சவுரவ் கங்குலி பதவி […]
கங்குலியும், விரேந்தர் சேவாக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாத சூழல் உருவாகியுள்ளது சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தொடக்க முதலில் நன்றாக விளையாடிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி உலக கோப்பையை கைவிட்டது. இது மட்டுமில்லாமல் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன அதன் ஒரு பகுதியாக இந்திய அணி […]
உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2019 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ஆம் தேதி இங்கிலாந்து மாற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. இப்போட்டி தொடங்குவதற்கு சில நாட்களே உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலி, பாகிஸ்தான் […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு சவ்ரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 25 வது லீக் போட்டியில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது. இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து சென்னை […]
இந்திய அணி விழிப்புடன் இருக்கவேண்டிய தருணம் இது என முன்னாள் வீரர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவ்ரவ் கங்குலி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் 2019 உலகக் கோப்பை தொடர் குறித்து பேசியபோது, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்தது. எனவே ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றி, இந்திய அணி விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்தி சென்றுள்ளதாக கங்குலி தெரிவித்தார். மேலும், இப்போதைய ஆஸ்திரேலிய அணியானது […]