தென் கொரியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in) சார்ந்த ஆளுங்கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து மிரட்டி வரும் நிலையிலும் தென்கொரியாவில் நேற்று பொதுத் தேர்தல் நடந்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆளும் ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை […]
Tag: #SouthKorea
உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுவரும் வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஹாம்யாங் (Hamyang) மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஏவுகணைகள் மீண்டும் ஏவப்படலாம் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது. முன்னதாக, வட கொரியா கடந்த வாரம் கடலில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை […]
கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000-ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து அடுத்தப் படியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,022ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக […]
கொரோனா வைரஸ் தொற்றினால் தென்கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அதில் தென்கொரியாவும் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்றினால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் குவைத்தில் […]
கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்கொரிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் ஊழியர்களால் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2698 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கின்றது. அதன் ஒருபகுதியாக சீனாவிலிருந்து அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்தநாட்டிலும் சில […]
தென்கொரியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகமூடிகளை வாங்க பல மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 2,592 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 77,150 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் […]