கரூர் மாவட்டத்திலுள்ள புகலூரில் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் திருக்காட்டு துறையில் இருக்கும் மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் இருக்கும் கால […]
Tag: special pooja
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒய்.எம்.ஆர் பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி சுவாமி அஜமுகன், அக்னிமுகம், தாரகாசூரன், சிங்கமுகசூரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை வள்ளி- தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவள்ர்மங்கலம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்ற பிறகு தொடர்ந்து 48 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சந்தியாகம் நடைபெற்றது. முன்னதாக சுவாசினி, பைரவர் பலி தானங்கள், வடுகபூஜை, தீபாராதனை, கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி இரண்டாவது நாளை முன்னிட்டு சுவாமிக்கு சந்தனம், மஞ்சள், தயிர், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் சிம்ம வாகன கால சம்ஹார பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபா ஆராதனை நடைபெற்றுள்ளது. இதே போல் கோவில் உள் பிரகாரத்தில் இருக்கும் மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. […]
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் நகரில் புகழ்பெற்ற அச்சம் தீர்த்த விநாயகர் கோவில், கற்பக விநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சுவாமியை மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் இருக்கும் விநாயகர், மருத மரத்து விநாயகர், புஷ்பவனம் புஷ்ப […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு சாமிக்கு சந்தனம், விபூதி, பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவிலிலும் புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாரத ரத்னா காமராஜர் கலையரங்கத்தில் வைத்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற 1008 திருவிழாக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று காலை கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததால் அனுமதி வழங்குவதில் தாமதமானது. இதனை அடுத்து மழை நின்றதும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதித்தனர். இந்நிலையில் பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு இளநீர், […]
ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாத சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரகரம் பகுதியில் கந்தநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதிசுவாமிநாதசாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்நிலையில் ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் ஆதிசுவாமிநாதசாமிக்கு திரவியப் பொடி, மஞ்சள்பொடி, பழங்கள், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், விபூதி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடி எடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து விட்டு சென்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் முருகருக்கு தங்கவேல் மற்றும் தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அப்போது தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வண்ணம் பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை வலம்வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]
சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு பூஜையானது நாளையுடன் நிறைவடையும் நிலையில் பக்தர்களுக்கு இன்று மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் களபாபிஷேகம் நடந்தது. இந்த விழாவானது கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் சுரேஷ் குமார் வர்மா மற்றும் பிரதீப் வர்மா போன்றோர் பங்கேற்றனர். இதனையடுத்து வழக்கமான பாரம்பரிய முறைப்படி தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாநதிகளுக்கு மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பணமுடிப்புகளை […]
மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 100 கிலோ காய்கறிகள் மற்றும் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் மட்டுமே மிகப்பெரிய நந்தி பெருமாள் சிலை இருக்கிறது. இங்கு ஒரு டன் காய்கறி, பழங்கள், மலர்கள் போன்றவற்றால் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்து 108 பசுக்கள் வரிசையாக […]