Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மைசூரு-தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில்…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை வழியாக மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 06253 வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்து. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறது. மறு மார்க்கத்தில் ரயில் எண் 06254 வருகிற 5,12,19 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 5.50 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் இயக்கம்… ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு…!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் (எண் 06910) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மறு மார்க்கத்தில் ரயில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருகிற 25, 26-ஆம் தேதிகளில்….. நாகர்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்….. வெளியான தகவல்….!!!!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது, நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 25-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்- பெங்களூர் கன்டோன்மென்ட் சிறப்பு ரயில்(06051) நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கரூர், நாமக்கல் வழியாக காலை 4.45 மணிக்கு சேலம் சென்றடையும். இதனை அடுத்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 9.20 மணிக்கு வந்தடையும். இதேபோல் பெங்களூரு கன்டோன்மென்ட்- நாகர்கோவில் சிறப்பு ரயில்(06052) […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில்….. கட்டணம் எவ்வளவு….? ரயில்வே கோட்ட மேலாளரின் உத்தரவு….!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கட்டண அறையில் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்தனர். இந்த ரயிலை சிறப்பு கட்டண ரயிலாக இயக்குவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோட்ட மேலாளர் உத்தரவின்படி, நேற்று முதல் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ரயில் இயக்கப்பட்டது. அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு 70 ரூபாய், ராமநாதபுரத்தில் இருந்து 55 ரூபாய், பரமக்குடியில் இருந்து 45 ரூபாய், மானாமதுரையில் இருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வருகிற 4-ஆம் தேதி முதல்….. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென்மேற்கு ரயில்வே பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மைசூர்-தூத்துக்குடி, எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி ஆகிய மார்க்கம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயில்(06565) வருகிற 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் மதியம் 12:45 மணிக்கு எஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மற்றொரு மார்கத்தில் திருநெல்வேலி- எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில்(06566) 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் காலை 10:40 மணிக்கு திருநெல்வேலியில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொங்கல் வருதுல்ல….! இடமே இல்லை… செம கூட்டம்… வேற ரயில் விடணும்… வெளியான புது தகவல் …!!

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசித்து வருவதால் தற்போது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்டம் இல்லாம இருந்துச்சு…! இப்போ OK ஆகி இருக்கும்…. 10ஆம் தேதி முதல் மீண்டும் தேஜஸ் ரயில் சேவை …!!

ரயில்வே துறையால் நிறுத்தப்பட்ட தேஜஸ் சிறப்பு ரயில் வருகின்ற பத்தாம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த ரயிலில் 992 இருக்கைகள் இருந்த போதிலும் குறைந்தளவு பயனிகளுடனே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது, தேஜஸ் சிறப்பு ரயிலானது வியாழக்கிழமை தவிர வாரத்தில் மற்ற ஆறு நாட்கள் இயக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு ரயில்கள்: நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு அறிவிப்பு

கொரோனா பாதிப்பின் காரணமாக  கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊரடங்கில்  பல்வேறு தளர்வுகளை  அறிவித்து  நடைமுறைபடுத்தி வருகிறது. அதன்படி , அரசு பேருந்து சேவைகள் தொடங்கிவிட்ட நிலையில், இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர்- திருச்சி இடையே அக்டோபர் 27-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  எழும்பூரில் இரவு 11.15 க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45-க்கு திருச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு தொடங்கியது!

ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்காக டிக்கெட் முன்பதிவு மதுரை, ஈரோட்டில் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 4 வழித்தடங்களில் ஏசி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கோவை – மயிலாடுதுறை (திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சை, கும்பகோணம் நிலையங்களில் நிற்கும். செவ்வாய்க்கிழமையில் ரயில் இல்லை.), மதுரை – விழுப்புரம் (திண்டுக்கல், திருச்சி, […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை – ரயில்வே வாரியத் தலைவர் தகவல்!

தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தகவல் அளித்துள்ளார். ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை – ரயில்வே விளக்கம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பரபரப்பு – சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்!

சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன் அனைத்து நிறுவனங்கள், மூடப்பட்டு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றிய அனைவரும் வேலை இழந்து தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அறிவிச்சுட்டாங்க….. இனி சந்தோசம் தான்….. தீபாவளி சிறப்பு இரயில் அறிவிப்பு …!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட விரும்புவோரின் வசதியைக் கருதி வரும் 20ஆம் தேதி முதலே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் to நெல்லை இடையே அக்டோபர் 20, 21, 23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புவோர் வசதிக்காக நாகர்கோவில் தாம்பரம் […]

Categories

Tech |