தி.மு.க பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் லியோனி பெண்கள் குறித்து பேசிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நட்சத்திர பேச்சாளரான லியோனி கடந்த 23ஆம் தேதி பிரச்சாரம் செய்துள்ளார். அந்த பிரச்சாரத்தின்போது லியோனி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் […]
Tag: # Speech
புதிய கல்விகொளகை குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அதில், தாய்மொழிக் கல்வியின் மூலம், மாணவர்களின் புரிதல் திறன் மேம்பட்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட முடியும். கற்றல், ஆய்வு, கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, மனப்பாடக் கல்வியிலிருந்து சிந்தனை ஆற்றலை வளர்க்கும் முறைக்கு மாறுவதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும். இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்புகளையும், 21ஆம் நூற்றாண்டில் அவர்களின் வளர்ச்சியையும் புதிய கல்விக் கொள்கை உறுதி செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதுநாள் வரையில் கல்வி முறையில் […]
இந்திய-அமெரிக்க வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் ‘சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்தல்’ எனும் தலைப்பில் பிரதமர் உரைபிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, கொரோனா பேரிடருக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து பேசினார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் மாநாட்டில் பங்கேற்ற்றுள்ளார். இந்தியா வேளாண் சந்தையில் உள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா வாய்ப்புகள் நிறைந்த தேசமாக உள்ளது. மருத்துவத்துறையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 22% வளர்ச்சி அடைந்து […]
கொரோனா குறித்து பேசும் முன் நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சுகாதார அமைப்புகள் நட்சத்திரங்களுக்கு வலியுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருவோர் மீது சுகாதார அமைப்புகளும், அரசு அதிகாரிகளும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபல நட்சத்திரங்களும் கொரோனா குறித்து அவ்வப்போது தவறான செய்திகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்கூட ரஜினி, அமிதாப் ஆகியோர் கொரோனா குறித்து பேசியது தவறான செய்தி என்பதால் அதனை […]
சென்னையில் லீலா பேலஸில் அரசியல் பயணம் குறித்த கேள்விகளுக்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்து வருகிறார். அதில், தனது கட்சிக்கென மூன்று முக்கிய திட்டங்கள் இருப்பதாக கூறினார். அவையாவன, திட்டம் 1: தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 மிகப் பெரிய கட்சிகளில் ஒன்று திமுக, மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன. ஐம்பதாயிரம் பதவிகளும் தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் தேவைப்படலாம். ஆனால் மற்ற நேரங்களில் ஒருபோதும் தேவைப்படாது. தேர்தல் […]
மலை, மழை மீது நம்பிக்கை வைத்து சைக்கோ படம் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் மிஷ்கின், சைக்கோ படம் குறித்து மனம்திறந்து பேசினார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், மிஷ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் இயக்குநர் […]
இயக்குநர் மிஷ்கின் தன்னை ஒரு குழந்தைப்போல பெற்றுக்கொண்டதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.இதையடுத்து இதைக் கொண்டாடும்விதமாக, சைக்கோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை நித்யா மேனன், “சைக்கோ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையம்சம் […]
சாதியைச் சொல்லி படம் எடுப்பவர்களை செருப்பால் அடிப்பேன் என இயக்குநர் தருண் கோபி கூறியுள்ளார். இயக்குநர் மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் அபி சரவணன், ஸ்டண்ட் கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் […]
சிறுவயதில் தான் கண்ட சாதி தீண்டாமையை பார்த்து ‘ஒரு கை ஓசை ‘படத்தில் சாதியை எதிர்த்துள்ளதாக இயக்குநர் கே. பாக்யராஜ் கூறியுள்ளார். மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் , இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் அபி சரவணன், சண்டைக் கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் […]
நான் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகும் பல கதாநாயகர்கள் என்னிடம் படத்தைத் தர முன்வரவில்லை, நன்றியை எதிர்பார்த்து சினிமா தொழில் செய்ய முடியாது என்று இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கூறியுள்ளார். மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே. பாக்யராஜ் , தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் மன்சூர் […]
அஜித்தை நாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தற்போது சிரமத்தில் இருப்பதாக, தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார். மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே. பாக்யராஜ் , தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் மன்சூர் அலிகான், அபி சரவணன், சண்டை கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் கதாநாயகன் […]
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெ. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலநலக்குறைவின் காரணமாக இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, […]
ஐநாவில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்கள் தான் காரணம் என்று டெல்லியில் பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். பிரதமர் மோடி நேற்று அமெரிக்காவின் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். மேலும் இந்தியா கொண்டு வந்த திட்டத்தையும் புகழ்ந்து கூறினார். பல கருத்துக்களையும் பேசினார். ஆனால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் […]
பாக்.,பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.வில் உரையாற்றியபோது , பிரதமர் மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது, அவர் பேசியதில் பெரும்பங்காக இந்தியாவுக்கு எதிராகவே பேசினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து மையமாக வைத்து தாக்கியே பேசினார். ஒவ்வொருவருக்கும் 15 முதல் 20 நிமிடம் ஐநாவில் பேச ஒதுக்கப்படும். ஆனால் பாக் பிரதமரோ, அவருக்கென ஒதுக்கப்பட்ட நிமிடங்களை விட அதிகமாக […]
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக […]