நிஜமான நட்பு என்பது எது? சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் விவரித்திருக்கிறார்: தம்மோடு பழகுபவரின் வீட்டு திருமணம், பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சிக்கு ஒரு நட்பு வந்தாலும், வராவிட்டாலும், துக்கத்திற்கு வருகை தந்து மயானம் வரை வந்தால் மட்டுமே அது நிஜமான நட்பு ஆகும். நிஜமான நட்பு, தனது நட்பின் குறைகளை தனியே கண்டிக்கும்; ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும்; தேவைப்படும் போது தன்னையே பலிகொடுத்து, பழிகளில் இருந்து பாதுகாக்கும்.
Tag: sprituality
அத்திவரதர் உற்சவத்தின் 40ஆம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாற்பதாம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அத்திவரதர் பஞ்ச வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டு, செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு […]
பக்தர்களின் தரிசன வசதிக்கு ஏற்ப அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மரணமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி […]