உக்கடம் ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நேற்று நடைபெற்றது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவை லட்சுமி நரசிம்மர் திருகோவிலில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் இரவு முதல் யாக வழிபாடுகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பொதுமக்கள் முன்னிலையில் திருக்கோவில் கலசத்திற்கு சிறப்பு வழிபாடுகள் […]
Tag: SPvelumani
கோவையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி காயமடைந்தவர்களை தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோரிப்பாளையம் அருகே வேகமாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாளையத்தை சேர்ந்த கோபால் மற்றும் பச்சை பாளையத்தை சேர்ந்த தங்கவேலு ஆகியோர் காயம் அடைந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தன்னுடைய சொந்தப் […]
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்றபோதும், அதிமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிவருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவை பூ மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 649 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஜெயலலிதா முதலமைச்சராக […]
குடியுரிமைச் சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதை அதிமுக அரசு பார்த்துக் கொண்டு இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கோவையில் மேம்பாலம், சாலைகள், […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் “தல எம்.எஸ்.தோனி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்திய அணிக்குள் நுழைந்தார். இதனை அவரது ரசிகர்கள் #15YearsOfDhonism என்ற ஹேஸ்டேக் மூலம் சமூகவலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இவர் அணிக்குள் நுழைந்ததும் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது. இவரது கேப்டன்சியில் இந்திய அணி பல கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. தற்போது நடந்து முடிந்த உலக கோப்பைக்கு பிறகு அணியில் இவர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் தோனி ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை […]
தமிழகத்திற்கு பிரதமர் வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல் என்று அமைச்சர் வேலுமணி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறித்து அமைச்சர் வேலுமணி […]
அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் மழைநீர் சேகரிப்பு குறித்து வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி வேலுமணி மழை நீரை ஒவ்வொரு குடும்பத்தினரும் சேமிக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இறைவன் கொடுத்த கொடை மழை அந்த மழை நீரை சேமிப்பது மிக மிக அவசியம். 200 சதுர அடி கொண்ட வீட்டில் முறையாக மழைநீரை சேமித்தோம் என்றால் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு தேவையான மழை […]
இனிபெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்பது என உறுதி கொள்வோமாக என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பருவமழை பொய்த்ததால் சமீபத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் மக்கள் தெருத்தெருவாக காலிகுடங்களுடன் அலைந்தனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டும் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம் தூர்வாரும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம், நீலம்பூர் முத்துகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு […]