ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்காமல் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும், அதை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் திமுக, செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது […]
Tag: #StateElectionCommission
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது. வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு வழங்கியதையடுத்து, ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.
டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டது இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் […]
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்ததால் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. அதன் பிறகு சில காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகின்றது. இதனால் எப்போது […]