சுய ஊரடங்கை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து வசதிகள் கூட தடை செய்யப்பட்டு சாலைகள் அனாதைகளாக காட்சியளிக்கின்றன. இது ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும். இந்த ஊரடங்கை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் […]
Tag: statenews
கொரோனோ வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்புபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் பொதுமக்களிடம் பெரும் அளவில் பரவிக் கிடக்க அவ்வப்போது வாட்ஸ் அப் வதந்திகள் மூலமாக பயமுறுத்தல் என்பது அதிகமாகி வருகிறது. இந்த வதந்திகளை நம்பி வீணாக மக்கள் பதற்றம் அடைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக காவல் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் வாட்ஸ் அப் […]
சோப்பு போட்டு கை கழுவுவதை போல் வதந்தி பார்ப்பவர்களையும் கைகழுவ வேண்டும் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், நடிகர் விவேக் மீண்டும் மீண்டும் கொரோனோ குறித்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பதிவு ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார். அதில், கொரோனோவை விட மிகப்பெரிய நோய் எதுவெனில் எதிர்மறை அவநம்பிக்கை தான். இந்த சூழல் […]
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். […]
மார்ச் மாதத்தில் 60 சதவிகிதம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருவதால், அதனுடைய அச்சம் பொதுமக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், பொதுமக்களும் பயணங்களை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரயில் பயணத்தை பயணிகள் விரும்பாமல் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால் அதை ரத்து செய்தும் வந்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் முன்பதிவு செய்த பயணிகள் […]
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் முட்டைகளை 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் கணிசமாக குறைந்துள்ளது. கொரோனோ வைரஸின் அச்சத்தால் முட்டையின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்து உள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் ரூபாய் 70 காசுகள் குறைந்து ரூபாய் 95 ஆக விற்கப்பட்டு வருகிறது. முட்டை விலை ஒரு புறம் குறைந்தாலும் ஹோட்டல்களில் ஆம்லெட் விலை குறைந்தபாடில்லை. சென்னை கடைகளில் முட்டை ஒன்று சராசரியாக ரூபாய் 3.50 க்கு […]
கொரோனோ வைரஸ் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவமனைகளில் மருந்து தயாரிப்பதற்கான பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை காய்ச்சல், சளி, இருமலுக்கு என்ன மருந்தோ அது தான் கொடுக்கப்பட்டு வருவதாக சட்டமன்றத்தில் பேசிய விஜயபாஸ்கர், விரைவில் கொரோனோ வுக்கு மருந்து கண்டுபிடித்து விட்ட நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனியார் […]
சட்டப்பேரவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசினார். அதில், கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது நல்ல விஷயம். இதேபோன்று தொடர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது போல் அரசு மற்றும் தனியார் […]
இனி தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அது என்னவென்றால் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதாதான் அது. இதன்படி தமிழ் வழியில் கல்வி […]
எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழக அரசு விடுமுறை அளிக்க கோரி உத்தரவிட்ட நிலையில், அதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவிரைவாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தும், தமிழகத்தின் எல்லையோர பகுதிகளில் உள்ள மால்கள், தியேட்டர்கள் […]
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கறி மற்றும் முட்டை விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சலின் எதிரொலியால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் ஒரு புறம் இருக்க கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த புதிய பறவை காய்ச்சல் தற்போது அச்சுறுத்தி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சாத்தமங்கலம், கொடியாத்தூர், பகுதிகளிலுள்ள பிராய்லர் கோழி மூலம் வந்ததாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் இதுவரை 20 […]
கோடை காலம் வரை வர இருப்பதையொட்டி எலுமிச்சைபழம் தங்களுக்கு நல்ல மகசூலை தந்து லாபத்தை ஈட்டி தருவதாக விவசாயி ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோடை காலம் வரப்போகிறது என்றாலே பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குவார்கள். ஆனாலும் அன்றாட வேலையை முடிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தினால் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் வெயிலினால் ஏற்படும் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல வருடங்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான மதுபானக் கடைகளில் மதுபானம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்கும் விதமாக டாஸ்மாக் நிறுவனம் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் கட்டணங்கள் அனைத்தும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், க்யூ […]
புதுச்சேரியில் 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தால் மெகா அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் ரகுமான் நிருபர் என்பவர் அசைவ சாப்பாடு கடை வைத்து நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த கடை அங்கு ஓரளவுக்கு பிரபலமானது தான். இந்நிலையில் மேலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக கடை உரிமையாளர் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி 100 திருக்குறளை பிழையில்லாமல் ஒப்பித்தால் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சுக்கா, பொரித்த கறி என மெகா […]
பொதுத்தேர்வு நெருங்கி வரும் பட்சத்தில் மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் ஒருசில டிப்ஸ்களை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுத்தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி வருபவர். அந்த வகையில், முழுநேரமும் படித்துவிட்டு நேரம் கெட்ட நேரங்களில் சாப்பிடுவதால் அஜீரண கோளாறு ஏற்படும். ஆகையால் அதனை தவிர்க்க சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிக நல்லது. அதேபோல் நீண்ட நேரம் படித்துவிட்டு […]
தமிழகத்தில் மாலை வகுப்புகளை முற்றிலுமாக ரத்து செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏராளமான அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் என இரண்டாகப் பிரித்து கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி காலை ஒரு சில மாணவர்களும் அதன் பின் மாலை ஒரு சில மாணவர்கள் என கல்லூரிக்கு வந்து செல்வர். இந்நிலையில் மாலையில் படிக்கும் மாணவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாமல் போவதாக பல […]
கள்ள நோட்டை மாற்ற முயன்ற வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேருக்கு ஆந்திர நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு பெட்ரோல் நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், ராமு, சீனிவாசன், செல்வன், சுதாகர், சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோரை கள்ள நோட்டுகளை மாற்றியது தொடர்பாக சத்தியவேடு காவல் நிலைய அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அதே மாவட்டத்தில் உள்ள […]
தமிழகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த்தை கலாய்த்து ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வீரன் ஆதம்பாவா நற்பணி இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதில் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நான் ஓடோடி வருவேன் என்று கூறிய ரஜினிகாந்த் தற்போது வரை வராததாலும், எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யாததாலும் அவரை கலாய்த்து போஸ்டரில் சில வாசகங்களை எழுதி உள்ளனர். அதன்படி […]
இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழை உலகமயமாதலில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இன்று உலக தாய்மொழி தினம். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தாய்மொழியை புகழ்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், நமது தாய்மொழியான தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உலகமயமாதல் என்னும் […]
மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக இன்று சென்னையில் பூமிபூஜை நடைபெற்றது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திரம் சமையலறையை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
கேரளா அரசின் புத்தாண்டு கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரியில் கூலித்தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் வடலூரில் உள்ள தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தார். கடந்த 10ஆம் தேதி பரிசுத் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்ட போது ராஜனுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் விழுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பரிசு விழுந்த மாதிரியே குடும்பத்தினருடன் வந்து தன் ஊரில் […]
தமிழகத்தில் ஐந்து எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் தமிழக பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு சுற்றுச் சூழலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு நற்பணிகள் செய்த 35 பள்ளிகளை தேர்வு செய்து அதில் […]
சீனாவை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமணியில் அதற்கென தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதற்காக சீன அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்திய சுகாதாரத் துறையும் தமிழக […]
தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த இந்து சமய அறநிலைத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய கோவிலில் நடைபெறும் குடமுழுக்கை தமிழில் திருமுறைகளை ஓதி நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்ததோடு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் […]
சென்னையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவற்றை கொள்முதல் செய்ததில் ரூ 1,480 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசனில், 1,480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது குறித்து, அறப்போர் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அதில், சென்ற 4 ஆண்டுகளில் கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனத்தின் மூலமாக சக்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட போது ஊழல் நடைபெற்றதை ஆதாரங்களுடன் சிபிஐக்கு அளித்துள்ளோம். […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பேனா வழங்கிய தினேஷ் என்ற வாலிபர் மீது SDPI அமைப்பு புகார் அளித்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பேனா மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். குடியுரிமை […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கேட்காமலேயே மக்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஆட்சி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது என்றும், இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவை எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். எடப்பாடி […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது வேறு மாவட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்வதற்கான காரணத்தை குறிப்பிடும் புதிய விதிமுறை அறிமுகப்பட்டு உள்ளது. 69 குரூப் 4 பணியிடங்களுக்கான கால அவகாசம் தொடங்கியுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான விவரங்களில் தேர்வர்கள் தங்களது மாவட்டத்தை தவிர வேறு மாவட்டத்தை தேர்வு செய்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் ராமேஸ்வரம் கீழக்கரை தாலுகாக்களில் தேர்வு எழுதியவர்கள் […]
2021 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தமிழக அரசிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகை […]
தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் துக்ளக் இதழின் 50 வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்ததோடு அவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களையும் எழுப்பினர். பொம்மை […]
“கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ரூபாய் ஒரு கோடி பரிசு வென்றுள்ளார். பிரபல கலர்ஸ் தொலைக்காட்சி நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில்பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத பெண்ணான கௌசல்யா கார்த்திகா அதிர்வுகள் மற்றும் வாய் அசைவுகள் மூலமாக கேள்விகளுக்கு பதிலளித்தார். அவருக்கு சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வர்த்தகப் பிரிவு தலைவர் சந்திரசேகரன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் […]
ஒகேனக்கல்லில் 4000 கனஅடி வீதம் நீர் வரத்து குறைந்ததால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த சுற்றுலா தலத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் பொதுமக்கள் குவித்த வண்ணம் இருப்பர். எப்பொழுதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் காணப்படும் ஒகேனக்கலில் தற்பொழுது 4 ஆயிரம் கன அடி வீதம் நீர் வரத்து […]
கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதிகளை மீறி கட்டப்பட்ட மாரடி அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்கான இறுதிகட்ட நடைமுறைகள் தொடங்கி உள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மாரடி பகுதியில் கடலோர மண்டல விதிகளை விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வரும் 11ம் தேதி […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை அதிகாலை 12 மணிக்கு வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ஆகம முறைப்படி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அதன் படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 முதல் 4 மணி வரை மத்திய மாநில அமைச்சர்களும், 4.30மணி முதல் 5 மணி வரை பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் […]
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாகு தெரிவித்தார். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றங்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். அதேபோல புதிய வாக்காளர்கள் […]
டெல்லியில் நிலவும் கடும் குளிரில் இருப்பிடம் இல்லாமல் தவித்த வெளிமாநிலத்தவர்கள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர். டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று காலை 5.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர் பதிவான நிலையில், இன்று காலை 8.10 ஆக வெப்பநிலை அதிகரித்து பொழுதும் கடும் குளிர் தொடர்ந்து நிலவியது. டெல்லியில் கடும் குளிரால் இருப்பிடம் இல்லாமல் தவிர்த்த உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அரசு […]
போராட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாத காரணத்தினால் 1000 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்து இருக்கிறார்கள். மேலும் 2000 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. ராஜினாமா முடிவை அறிவித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள் வரும் ஒன்பதாம் தேதி முதல் பணிக்கு வர […]
வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரையாண்டுத் தேர்வு முடிந்த பின் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்களை ஈடுபடுவதால் பள்ளிகள் திறப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் […]
குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இதில் சிங்கம், புலி,சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் விலங்குகளை பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குளிரிலிருந்து விலங்குகளை காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொரு கூண்டிற்குள்ளும் ஹீட்டர்கள் மற்றும் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளன. கடும் குளிரால் குறைவாக உணவு எடுத்துக் கொண்ட […]
கடந்த 3 மாதமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகின்றது. கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. தொடர்ந்து பூமிக்கு குளிர்ச்சியையும் , நீரையும் கொடுத்து வந்த இந்த […]
வடகிழக்கு பருவமழை இயல்பாகிவிட 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மழையை நம்பி இருந்த விவசாயிகள் […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் ஆங்கங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் , சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் […]
டெல்லி ஆக்ரா இடையிலான யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைப்பதில் நடந்ததாகக் கூறப்படும் 120 கோடி ரூபாய் ஊழல் குறித்த விசாரணை சிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலைகளுக்கான திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மாயாவதி துவக்கி வைத்தார். பின்னர் அவரது ஆட்சி போய் 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சாலையை திறந்து வைத்தார். 165 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை அமைக்கும் பணியில் 55 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் […]
ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியான தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் அதற்காக தம்மை தூக்கிலிட வேண்டும் என்று கோரியும் அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜி மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த பொழுது மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி சுனில்குமார் மனு அளித்தார். அதில் அவர் மதுவுக்கு அடிமையான தனது கணவர் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இரவு வழக்கம் போல் […]
டெல்லியில் மது விற்பனை செய்யும் 125 கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன. டெல்லியில் பீர் மற்றும் ஒயின் மது வகைகளை விற்பனை செய்வதற்காக மட்டும் உரிமம் பெற்ற கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அங்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட 125 மதுபானக் கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட 125 மது கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றது.
பத்து பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டு வினாத்தாள் சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. பத்தாம் வகுப்புக்கு கடந்த 13ஆம் தேதியும் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 13ம் தேதியும் தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிலையில் ஹலோ என்னும் செயலியல் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இன்று நடைபெறும் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் நேற்றைய தினமும் 12 ஆம் […]
புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். புதுச்சேரி யூனியன் காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை தகவல் தொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன மழை கொட்டி தீர்க்கும் என்பதை மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி இருக்கிறது. சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக இதுவரை 1,09,778 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகின்ற 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றது. இந்த நிலையில் கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் பெயர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை மாநகர் கிழக்கு, தூத்துக்குடி […]
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபகாலமாக ஆபாச படம் இணையதளத்தில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுபவர்கள் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ பதிவுகளை பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ மட்டும்தான் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் திருச்சியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க கிறிஸ்டோபர் என்பவர் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த […]