கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கேரளாவுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக கேரளாவின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்திற்குள் […]
Tag: statenews
கலைஞர் இறந்த பின்பும் அவரது தத்துவத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை விலங்குகளுடன் ஒப்பிட்டு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன்பின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் […]
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதிமுக ,திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]
கர்நாடாகாவின் இரண்டு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 நாட்களில் 50 அடியை கடந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அணைகளில் இருந்து 11,443 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
உத்திரபிரேதசத்தில் முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பும் தலாக் கூறிய கணவன் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. முத்தலாக் தடைச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். குறிப்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முத்தலாக் தடை சட்டம் […]
கேரளாவில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 15 லட்சம் என்ற வதந்தி பரவியதால் 1500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். வாட்ஸ் அப் உலக மக்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலியாகும். இதில் சில சமயம் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இதனால் சில அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கேரளாவின் மூணாறு பகுதியில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாயை தவணை முறையில் தர உள்ளதாக போலி தகவல் ஒன்று கடந்த சில […]
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி எதிர்ப்பு அதிகரித்து உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரில் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ள வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை திரும்பப் பெறக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஏற்கனவே தமிழக […]
ஜம்மு காஷ்மீரில் மண்சரிவில் இரவெல்லாம் சிக்கிக் கிடந்த இளைஞரை பாதுகாப்பு படையினர் மீட்டனர் . ஜம்மு காஷ்மீரில் ரம்பான் மாவட்டம் லூட்பால் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் நேற்று இரவு மேகத் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையினால் சாலையை ஒட்டி இருந்த மலையிலிருந்து மண்ணும் பாறையும் சரிந்து விழுந்தது. இதற்குள் பிரதீப் குமார் சிக்கிக்கொண்டார் . பின் இரவு முழுவதும் மண்ணுக்குள் சிக்கித் தவித்தார் பிரதீப் குமார். இதையடுத்து , […]
தெலுங்கானாவின் துணை சபாநாயகர் சிறுவனை பாராட்டும் விதமாக வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . தெலுங்கானாவில் செகந்திராபாத் இல் நடைபெற்ற கோனலு எனும் திருவிழா கொண்டாட்டத்தின்போது டிரம்ஸ் கருவியை வாசித்துக் கொண்டிருந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் கைதட்டி பாராட்டி கொண்டிருந்தனர். பின்னர் , தெலுங்கானாவின் துணை சபாநாயகர் பத்மராவ்கவ் அந்த சிறுவனை பாராட்டும் வகையில் அவனது வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி […]
புதுச்சேரியின் சட்டப்பேரவை கட்டிடத்தில் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்குமுன்பு , புதுச்சேரியில் 22 அரசு கட்டிடங்களில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் 20 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய வகையில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடத்தில் நாளொன்றுக்கு 100 யூனிட் […]
டெல்லியில் சரியாக ஓராண்டுக்கு பின்னர் காற்று மாசுபாடு குறைந்து சற்று தூய்மையான காற்று வீசுவதாக சுற்றுசூழல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அளவு கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காற்று மாசுபாடு குறித்த தர அட்டவணையில் பூஜ்யத்திலிருந்து 500 புள்ளிகள் வரை, மிக தீவிரம், மோசம், திருப்திகரம், தூய்மை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் டெல்லியில் கடந்த 24ம் தேதி 164 ஆக இருந்த காற்று மாசுபாடு புள்ளிகள் கடந்த 25ஆம் தேதி […]
ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தாய்,தந்தை கழுத்தை மகன் அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுவுக்கு அடிமையான நாராயண ரெட்டி தனது பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தவும், வெளியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் தான் பணிபுரிந்து வந்த நிதி நிறுவனத்தின் […]
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கான எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் 500 பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க கோரி பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் , அறநிலைய துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின் அறநிலைய துறை […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , நான்கு […]
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் சான்றளிக்கப்படும் நகல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவானது சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சதாசிவம்,பாப்டே, தஹில் ரமாணி உள்ளிட்ட 3 நீதியரசர்களுக்கு மாண்பமை […]
உத்திரப்பிரதேச மாநில முன்னாள் MLA வின் மகன்கள் இளைஞர் ஒருவரை துன்புறுத்தியதால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் MLA விஷ்ணு ஸ்வரூப்பின் மகன்களான சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் பன்சால் ஆகியோர் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.மேலும் கடைகளை வாடகைக்கு விட்டும் வருகின்றனர்.இந்நிலையில்,ஒரு கடையை வாடகைக்கு எடுப்பதற்காக ராஜேஷ் சிங் என்ற இளைஞர் 7,00,000 ரூபாயை முன்தொகையாக அளித்துள்ளார். இதையடுத்து பணம் கொடுக்கல்,வாங்கலில் ராஜேஷ் சிங்குக்கு சஞ்சய் ஸ்வரூப் பன்சால், அசுதோர் […]
பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு பழைய பேப்பர் ,துணி பை உள்ளிட்ட பொருள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இத்திட்டம் பலர் மத்தியில் வரவேற்பையும்,எதிர்ப்பையும் பெற்று வந்தது. மேலும் தமிழகத்தில் இத்திட்டத்தால் தொழில்கள் பாதிக்கப்படுகிறது என்றும்,தமிழக அரசு […]
MLAக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை எதிர்த்து கர்நாடக சபாநாயகர் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில MLAக்கள் 14 பேர் அளித்த ராஜினாமா கடிதத்தில் 8 பேரின் கடிதங்கள் சட்ட விதிமுறைகளின் படி இல்லை என்றும், ராஜினாமா செய்ய விரும்பினால் முறைப்படி கடிதம் அளிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து MLAக்கள் 10 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,MLAக்கள் 10 […]
ராஜினாமா செய்த 10 காங்கிரஸ் MLAக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சியை சேர்ந்த அதிருப்பதி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தததையடுத்து,மும்பை பிரபல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளையும் பாஜக கட்சி மேற்கொண்டதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டியது.இதையடுத்து ஆட்சியை காப்பற்ற பெங்களூருவில் காங்கிரஸ் MLAக்களுக்கான ஆலோசனை கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்த பின் […]
கர்நாடகா மாநிலத்தில் ராஜினாமா செய்த 11 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி அளிக்க ஆளும் கூட்டணி அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக 11 எம்.எல்.ஏ.க்கள் பேர் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரசுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது. இதையடுத்து மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய […]
திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த குஜராத் தம்பதியினர் வளர்ப்பு பூனையை கண்டுபிடிக்கக் கோரி ரேணிகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஜேஸ்பாய் இவரது மனைவி மினாபீ இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பூனையுடன் வந்துள்ளனர். இதையடுத்து தரிசனத்திற்கு பின் சொந்த ஊர் செல்வதற்காக ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தவர்களின் பூனை தொலைந்தது. இதனால் பதற்றமடைந்தவர்கள் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் […]
மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த தண்ணீர் 12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் […]
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் […]
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூற கூடாது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய […]
மாநில அரசின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதுதேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று […]
புயலால் பாதிக்கப்படும் மீனவர்களை மீட்க 3 கோடி ருபாய் செலவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏராளமான மீனவர்களின் உயிர் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு மீனவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அதில் அனைத்து மீனவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வாக்கி டாக்கி வழங்கப்படும் என்றும், அதன் மூலம் புயலால் கடலுக்குள் […]
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமைச் செயலக அதிகாரியாக இருந்து வருபவர் கிரிஜா வைத்தியநாதன். இவருடைய பதவிக்காலம் ஆனது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகு ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இவருக்குப் பின் யார் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் என்ற கடும் போட்டியானது நிதித்துறை செயலாளர் சண்முகம்,வீட்டுவசதி துறை செயலாளர் கிருஷ்ணன்,கவர்னரின் செயலாளர் ராஜகோபால், உள்ளாட்சித் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா […]
ஹரியானா மாநிலத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த போர் விமானம் பறவை மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இந்திய விமானப் படை வீரர்கள் போர் விமானங்களை சோதனை செய்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சோதனையின் மூலம் விமானங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதையும் விமானப்படை வீரர்கள் போரின்போது விமானங்களை எவ்வாறு இடத்திற்கு ஏற்றபடி சாதகமாக இயக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஜாகுவார் போர் விமானத்தை பயிற்சியில் ஈடுபட செய்தபோது விமானம் பறந்து கொண்டிருக்கும் […]
பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கயிருக்கிறது. STRR திட்டம் என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின்கீழ் ஓசூரிலிருந்து ஆனேக்கல்,கனகபுரா,ராம்நகர்,மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச் சாலை அமைய இருக்கிறது .இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948-A என பெயரிடப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 4,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.சாலையின் மொத்த நீளம் […]
தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக சார்பில் நடைபெறக் கூடிய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில் குடிநீர் பிரச்சனையை போக்க கோரி […]
தலைமைச் செயலகத்தில் வேலைபுரியும் அரசு ஊழியர்கள் உடை உடுத்துவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணையிட்டுளார். தலைமை செயலகத்தின் நல்மதிப்பை பராமரிக்கும் வகையில் அங்கே பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஒழுக்கமான உடைகளை அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் சுடிதார் போன்ற உடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் சேலையைத் தவிர மற்ற ஆடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிய வேண்டும் என […]
ஹரியானா மாநிலத்தில் வேலை தராததால் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஹரியானா மாநிலம் குறுகிராமில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரியான காரணமின்றி அவரை பணியிலிருந்து தனியார் கம்பெனி நிர்வாகம் நீக்கியது. இதனால் மனமுடைந்த அவர் செய்வதறியாது கம்பெனியின் மொட்டை மாடிக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த கம்பெனியின் காவலாளி நிர்வாகத்திடம் மற்றும் காவல்துறையினரிடமும் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறையும், […]
மகனுடன் சேர்ந்து தாயும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது . ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி . இவர் தனது பத்தாம் வகுப்பு படிப்பை படித்து கொண்டிருக்கும் பொழுதே திருமணம் ஆகிய காரணத்தினால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பின்பும் படிப்பை கைவிட்ட வருத்தம் அவர் மனதிற்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆகையால் அவரது மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் சேர்ந்து மகன் சொல்லிக்கொடுக்க தாயும் […]