தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலிருந்த அம்மன் சிலையை தனிப்படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தவாரம் பிரேம்குமார் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை இருந்ததை பார்த்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் அந்த சிலையை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்து வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த பிரேம்குமாரின் உறவினர் சிலையில் இருந்து ஒரு பாகத்தை […]
Tag: statue rescued
பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஐம்பொன் சிலைகள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கும் கழிப்பறை கட்டிடத்தில் ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது. அந்த சாக்குப்பையில் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள், பழங்கால மடக்கு கத்தி போன்றவை இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், வருவாய்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
ஆற்றில் கிடந்த விநாயகர் சிலையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பட்டி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் செம்பு உலோகத்தாலான விநாயகர் சிலை கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் கிடந்த 1 1/2 கிலோ எடையும், 1 1/4 அடி உயரமும் உடைய விநாயகர் சிலையை மீட்டு காவல் […]
தாமிரபரணி ஆற்றில் இருந்து 1 டன் எடையுள்ள நந்தி சிலை மற்றும் பெண் கற் சிலையை அதிகாரிகள் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாலங்குறிச்சி பகுதியில் பூந்தலை உடையார் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் அதே பகுதியில் வசிக்கும் வள்ளிநாதன் என்பவர் மீன்பிடிக்க சென்ற போது, ஆற்றிற்குள் நந்தி சிலை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வள்ளிநாதன் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]