Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 36 மாவட்டங்களில் கொரோனா தொற்று …. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14ஆயிரத்தை தாண்டியது ….!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்தை தாண்டியுள்ளது நாட்டு மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மத்திய சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடும் போதெல்லாம் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நாட்டின் விதிமுறைகளை கடைபிடியுங்கள் – ரஜினிகாந்த் வேண்டுகோள் ..!!

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு கொரோனா விழிப்புர்ணர்வு குறித்து நடிகர் ரஜினிக்காந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு கொரோனா குறித்து விழுப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாட்டில் வாழும் தமிழக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தினமும் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய மாநில அரசுகளும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளை மத்திய, மாநில முடுக்கி விட்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவின் அதிக தாக்கத்தை […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கடைசி 7 நாளில் கொரோனா பலி எண்ணிக்கை 100% அதிகரிப்பு!

உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம் – அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சீனா தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்  146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1397ஆக அதிகரித்துள்ளது. இதில் 1238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டான்ஸ் ஆடி… பாட்டு பாடி… பிராவோவின் ‘கொரோனா’ விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ!

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற பாடலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்வதற்காகவும், பிறருக்கு பரவகூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்களது மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன. இந்தநிலையில் […]

Categories

Tech |