Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்பா என்ன பந்துடா அது.! தடுமாறி கீழே விழுந்து திகைத்து போன ஸ்மித்…. யார்க்கர் கிங் பும்ராவின் அட்டாக் வீடியோ…!!

ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பும்ரா ஒரு அற்புதமான யார்க்கரை ஸ்டீவ் ஸ்மித்துக்கு வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது..  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால்  VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கை பார்த்தோம்… திறமை இருந்துச்சு… அதனால திவேதியாவை அந்த இடத்துல இறக்குனோம்… ஸ்மித் புகழாரம்..!!

ராகுல் திவேதியாவின் பேட்டிங்கை பார்த்துதான் நாங்கள் அவரை 4ஆவது இடத்தில் இறக்கி விட்டோம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்..  ஐபிஎல் தொடரில் நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியை யாருமே மறக்கமாட்டார்கள்.. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதே மாதம் போன வருடம்… தடைக்காலத்தை நினைவுகூர்ந்த ஸ்மித்.!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், கடந்தாண்டு இதே சமயத்தில் தான் தடையில் இருந்தபோது தனது மனைவியுடன் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் கடந்தாண்டு தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடியபோது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸி. வீரர்கள் வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டும், பேன்கிராஃப்ட்டிற்கு ஒன்பது மாதமும் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நம்பமுடியாத மறுபிரவேசம்”…. ஸ்மித்தை புகழ்ந்த சச்சின்.!!

ஸ்டீவ் ஸ்மித்  ”நம்பமுடியாத மறுபிரவேசம்” என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து கூறியுள்ளார்.   ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடி வருகிறது. இப்போட்டியில் 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது ஜோப்ரா ஆச்சர் பவுன்சர்  பந்துவீச்சில் பலமாக தலையில் தாக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ஓய்வுக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்மித் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் குறைவான இன்னிங்சில் 26 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை: இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்…!!!

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும் இலங்கை–நியூசிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் ஆஷஸ் தொடரின் மூன்று இன்னிங்ஸ்களில் 378 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளம் வீரர் பராக் ஆட்டத்தை பார்த்து புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித்.!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பராக் ஆட்டத்தை  புகழ்ந்து பேசியுள்ளார்  ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… 15 வீரர்கள் யார் தெரியுமா…!!

2019 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலகம் முழுவதும் […]

Categories

Tech |