உலகம் முழுவதும் உள்ள காதலால் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. 19 நூற்றாண்டு வரைக்கும் மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் காதலர் தினம் பரவலாக கொண்டாடப்பட்டது. ஆனால் 2௦ நூற்றாண்டில்தான் காதலர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாட ஆரம்பித்தார்கள். குறிப்பாக இந்தியாவிலும் கூட இன்று கிராமப்புறங்கள் வரைக்கும் காதலர் தினம் பரவியிருக்கிறது. இப்படி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த காதலர் தினம் உருவான கதை பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. காதலர் தினம் உருவானது தொடர்பாக பல […]
Tag: Story
கனவு, சிந்தனை உள்ளிட்ட பிரமிக்கவைக்கும் விஷயங்கள் குறித்து அற்புதமான தத்துவங்களை தந்த சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் பிறந்த தினம் இன்று ,இந்நாளில் அவரது தத்துவ வரிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கனவுகள் வேறொரு உலகில் இருந்து வருகின்றன என்று சொல்லமுடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன பிரார்த்தனையால் மனித குலத்திற்கு மகத்தான சக்தி கிடைக்கிறது. அதன் மூலம் மனிதர்கள் தங்களது துன்பங்களை போக்கிக் கொள்ள முடியும் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்தி காட்டுகின்றன. […]
பல இரவு, பல நபர்களுடன் இருந்தும் இன்னும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறேன் நம்புங்கள் என்று கெஞ்சியது வீட்டிலிருந்த பாய். குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் கோடை காலத்தில் ஏற்படும் வெம்மையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இலைதழைகளை பரப்பி படுக்கைகளை செய்தார்களாம். பின்னாளில் அதுவே ஒரு வடிவத்தில் உருவாக்கப்பட்டு அதுவே பாய் ஆனது. ஏன் வெறும் தரையில் படுக்க அந்த பாயை எடுத்து போட்டு படு என்ற வார்த்தையை நம் வாழ்வில் நாம் கேட்டிருப்போம். நம் வாழ்நாளில் இப்போது […]
நான் இறந்த பின் ஊக்கை மறுமணம் செய்து கொள் என்று கெஞ்சியது சட்டை பட்டன். விளக்கம் : பெண் என்பவளுக்கு அதிகப்படியான வரைமுறைகள் உண்டு. அவளுக்கு என்று வந்து விட்டால் மட்டும் தராசு ஆண்கள் பக்கமே அதிகம் சாயும். கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறுவது. வெள்ளை புடவை அணிவது, பொட்டு, மஞ்சள், குங்குமம் இல்லாமல் இருப்பது என ஏகப்பட்ட கொடுமைகள் அனுபவித்து வந்தார்கள். டிவோர்ஸ் என்றாலே போதும் அவர்கள் மீது நம் பார்வையே வேறு விதமாக இருக்கும். […]
மனிதராய்ப் பிறந்த அனைவரும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததற்கான வழிமுறைகள் மற்றும் காரணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒரு வேலையை நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி முடித்து விட நமக்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும், அதில் எது மிகவும் எளிதோ அதைத்தான் தேடுவோம். ஏண்டா இப்படி சோம்பேறியாய் இருக்கன்னு கேட்டா ஸ்மார்ட் வொர்க்னு சொல்லுவானுங்க. அனைத்தையும் சுலபமாய் முடித்திட வேண்டும் என்ற எண்ணமே இங்கு […]
வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான 7 மந்திரங்களாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கூறியதாவது, 1 உங்கள் விதியை நீங்களே எழுதுங்கள். 2.முடிந்துபோனவற்றைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு செய்ய வேண்டியதைப் பற்றி திட்டமிடுங்கள் 3.பாதியில் எதையும் விட்டுப்போக எண்ணாதீர்கள். 4.முயற்சி செய்து பார்க்க ஆசைப்படுங்கள். 5. கேள்வி கேட்க பயப்படாதீர்கள். 6. அனைவரையும் சமமாக நடத்துங்கள். 7. மற்றவரிடமிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொள்ளுங்கள் . இந்த அனைத்து மந்திரங்களையும் உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு செயல்படுத்தினால் கட்டாயம் வெற்றியடைய முடியும் என்று […]
சப்த கன்னிகைகள் என்று சொல்லக்கூடிய ஏழு கன்னிமார்களின் கதை நாம் பார்க்க போகிறோம். பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, மற்றும் சாமுண்டி இவர்கள்தான் சப்தகன்னியர்கள் எனப்படுவார்கள். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர் சப்தகன்னியர்கள் எனப்படும். இந்த மாதிரி கன்னியர்கள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்ற அமைப்புகள் சில இடங்களில் பார்த்தீர்கள் என்றால் தனித்து நிற்கும். ஆனால் இன்றைய நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் நம்முடைய வழக்கில் இல்லை, […]
இந்த காலத்தில் டைரி மில்க், கிட்கேட் என பல்வேறு சாக்லேட் வகைகள் வந்துவிட்டன. அதிலும் டைரி மில்க் சாக்லேட்க்கு பலரும் அடிமை. இந்நிலையில் 90s கிட்ஸ் என்று சொல்லப்படும் ஜெனரேஷன் ஐ சேர்ந்த இளைஞர்கள், வாலிபர்கள் ஆசை என்னும் சாக்லெட்டை சாப்பிட்டு இருப்பார்கள். அக்காலகட்டத்தில் கமரகட்டு, கடலைமிட்டாய் என நாட்டு இனிப்பு வகைகளை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்கள் முதல் முறையாக சாக்லேட் வகை என்று சொன்னால் அது ஆசைதான். அதை சாப்பிட்டு முடித்துவிட்டு அதனுடைய கவரை எடுத்து […]
மனித நாக்குக்கு எலும்புகள் கிடையாது. ஆனால் அது அது ஒரு மனித இதயத்தை உடைக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. கோபத்தில் சமநிலை இழந்து நமக்கு பிடித்தமான நபர்களையே தாறுமாறாக பேசி விடுகிறோம். அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விடுகிறோம். இதன் மூலம் நம் மீது தீராத அன்பு கொண்டவர்கள் கூட நம்மைப் பார்த்து வெறுக்க தொடங்கி விடுவார்கள். நாம் ஒருவரை உடலளவில் காயப்படுத்தும் சமயங்களில் அதனுடைய காயம் வெளிப்புறத்தில் இருக்கும். அது காலப்போக்கில் ஆறிவிடும். அந்த வலியும் அதற்கான […]
சுடலை மாடனின் திகிலூட்டும் வரலாறு கதை.. உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் “பார்வதி… நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்.” என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே […]
சென்னையில் ஜனவரி28 ஆன இன்று தொலைபேசி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் அலைபேசி இல்லாத நாட்களை நினைத்து கூட பார்க்கமுடியாது. தொலைபேசி என்பது நேரடியாக பேச முடியாத தொலைவில் இருப்பவர்களுடன் பேச பயன்படும் ஒரு தொலைநோக்கு கருவி.1881 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை ஏற்படுத்த இங்கிலாந்தை சேர்ந்த ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி சென்னை ரபால செட்டி தெருவில் 1881 ஆம் ஆண்டு […]
1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான் இக்கோவிலில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். காவிரி பாயும் சமதளப் பகுதியில் இது போன்றதொரு கோவில் கட்டுவதற்கான கற்களும் பெரிய பாறைகளை இல்லாத இடத்தில் அரியவகை கற்களைக் கொண்டுவந்து உலகம் வியக்கும் […]
இங்கிலாந்தில் பிறந்து நைஜீரிய அணிக்காக கால்பந்து ஆடும் ஓலா ஐனாவின் கதை. ”செல்சீ கிளப் அணியின் பயிற்சியில் பங்குபெற காரில் பயணம் செய்துகொண்டிருந்தோம். திடீரென கார் பழுதானது. எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. சரியான நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டும். காரை அந்த இடத்திலேயே என் அப்பா வேறொருவரிடம் விற்றுவிட்டு, என்னை ரயிலில் ஏற்றினார். அவரும் என்னுடன் வந்தார். ஏனென்றால் அதற்கு முன்பாக நான் ரயிலில் தனியாக பயணித்தது இல்லை. எனது பயிற்சியில் அனைத்து நேரங்களிலும் […]
ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி தொடங்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன. ஆசிரியர், “ஏன் ஒளிந்து கொண்டாய்?” என்று பூஜ்யத்தை பார்த்து கேட்டார். “நான் வெறும் பூஜ்யம் தானே…என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,” என்று வருத்தமாக கூறியது. புன்னகைத்த ஆசிரியர், “ஒன்று’ என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் […]
பக்தர்கள் கூட்டத்தால் எப்பொழுதும் திருவிழா கோலமாக காட்சி தரும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயில் குறித்த சிறிய செய்தி தொகுப்பு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். தமிழக மற்றும் கர்நாடக பகுதிகளை இணைக்கும் இடத்தில் உள்ள இந்த கோவிலுக்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த குவிந்த வண்ணம் உள்ளனர். வனப்பகுதியில் உள்ள இந்த கோவில் உருவான விதம் பற்றி ஆள கதை ஒன்று உள்ளது. அதில், வனப்பகுதியில் […]
ஒர் ஊரில் ராமு என்பவர் வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அங்கு ஒரு காகம் ராமு வீட்டிற்கு அடிக்கடி வந்து போய் இருந்தது.இதனால் காகமும் நாய்குட்டியும்நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் மரத்தில் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் என்னானது அமைதியாக காணப்படுகிறீகள்? என்று கேட்டது. அதற்கு காகம், இந்த மனிதர்கள் மறஎல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்கிறார்கள் […]
சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதையை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கன்னடத்தில் சக்ரவியூகா என்ற படத்தை இயக்கினார். இதனிடையே ஒரு விபத்தின் காரணமாக சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் பணிக்கு திரும்பி விட்டார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ஷன் படமாக சரவணன் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரிஷாவுடன் இணைந்து […]