வங்கி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் கேட்டு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டி சமர்ப்பித்த கோரிக்கை சாசனங்கள் மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற கூட்டுறவு வாங்கி ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சம்பத் தலைமை தாங்கியுள்ளார். […]
Tag: Struggle
மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இருதரப்பினர் இடையே தகராறு இருந்ததால் இறந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாகாடு பகுதியில் 250-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இறந்தால் அருகில் இருக்கும் கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோரம் அடக்கம் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். இந்நிலையில் நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாட்களாக தகராறு […]
அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏ.பி. நாடானூரில் 9 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கொடுத்த நிலத்தில் 2 பேர் நிலங்கள் தவிர மற்ற இடங்களை சிலர் போலி பட்டா மற்றும் பத்திரம் தயார் செய்து கிரையம் செய்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி அப்பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி, […]
கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தாந்தோணி மலையில் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி உள்ளார். அதன்பின் முன்னாள் நகர தலைவர் சுப்பன், கட்சி நிர்வாகிகள் சின்னையன் மற்றும் மனோகரன் உள்பட […]
தமிழக கவர்னரை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேருந்து நிலையத்தில் வைத்து தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவை நிராகரித்த தமிழக கவர்னரை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தலைவர் திலீபன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த திலகா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்பட பல அமைப்புகளைச் […]
ஊக்கத் தொகையை வழங்க கோரி நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்திருந்த 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்க கோரி கிராம ஊராட்சிகளில் வேலை பார்க்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாநில இணை செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றி உள்ளனர். […]
சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக சி.ஐ.டி.யூ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தருமபுரி மண்டல பொதுச்செயலாளர் முரளி தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு ஒருங்கிணைப்பாளர் கேசவன் தொடங்கி வைத்து பேசியுள்ளார். அதன்பின் இம்மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனை சி.ஐ.டி.யு கிளை தலைவர் சுதாகர் மற்றும் செயலாளர் முகுந்தன் ஆகியோர் பணிமனை முன்பாக பெயர் பலகையை திறந்து வைத்து வாயிற் […]
வன்னியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் வன்னியர்களுக்கு கல்வியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை திரும்பவும் அமல்படுத்த வேண்டும் என கூறியும், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் காந்தி சிலை அருகாமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகரச் செயலாளரான ஞானசேகரன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் நகரத் தலைவர் […]
இடிந்து விழுந்த வீட்டை சரி செய்து தருமாறு நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகர் பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பில் 100-க்கும் அதிகமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக அரசால் கட்டி தரப்பட்டிருக்கும் இந்த குடியிருப்பில் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அதனால் இதை சீர் அமைத்து தருமாறும் இல்லையென்றால் குடியிருப்புகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய வீடு கட்டித் […]
சர்க்கரை ஆலையின் முன்பாக ஊழியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டபட்டி கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவையை தொடங்கவதற்காக ஆலயம் அலுவலகத்தின் முன்பாக அனைத்து தொழிற்சங்க குழுவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்பின் தொழிலாளர் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில், செயலாளர் கோபி, பொறியாளர்கள் சீனிவாசன் மற்றும் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 4-வது நாளாக […]
சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்ததாக இருக்கும் கேத்தாண்டபட்டி பகுதியில் திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அமைந்திருகிறது. இதில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அன்பழகன் தலைமையில், பொறுப்பாளர்கள் சீனிவாசன், யுவராஜ் மற்றும் செயலாளர் கோபி ஆகியோரின் முன்னிலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அனுமதி வழங்கும் வரை அடுத்த கட்டமாக […]
கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த 100-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு கடன் அளிக்க வில்லை. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தகுதிவுடைய எல்லாருக்கும் கடன் வழங்கி வருவதாக கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பயிர் கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் […]
சேறும், சகதியுமாக இருக்கும் சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் […]
கலெக்டர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவியை எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த வினிதா என்பவர் பொய்யான ஜாதிச் சான்று பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவரின் ஜாதிச் சான்றிதழை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ரிஷிவந்தியம் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அவர்களின் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிடம் […]
மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டை பட்டினத்தில் வசிக்கும் மீனவர் ராஜ்கிரன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் அதை கண்டுகொள்ளாத மாநில மற்றும் மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்கள் மாநில மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பாக கோவில் நகைகளை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவரான நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், பா.ஜ.க தலைவர் நவீன் மற்றும் ஜெகன் […]
கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நகராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக துப்புரவு தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் செயலாளரான எம்.எம். சரவணன் மற்றும் பொருளாளர் எஸ். ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு தாலுகா செயலாளர் ஜாபர் சாதிக் மற்றும் கூட்டமைப்பு செயலாளரான […]
சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு அரவையை தொடங்குமாறு கட்சியினர் மற்றும் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றியச் செயலாளராக குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளரான தேவதாஸ் மற்றும் விவசாய சங்க […]
அடகு கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து காவல் நிலையத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஷாராப் பகுதியில் 50-க்கும் அதிகமான நகை அடகு கடைகள் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகை அடகு வைத்தது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணைக்கு வந்துள்ளனர். அப்போது கடை உரிமையாளரை காவல்துறையினர் அவதூறாக பேசியதாக தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்துவிட்டு காவல்துறையினர் மீது நடவடிக்கை […]
நெடுஞ்சாலையில் கர்ப்பிணி பெண் கையில் குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருத்தணி-அரக்கோணம் நெடுஞ்சாலையில் 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் தனது ஒரு வயது குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் இது குறித்து அனைத்து […]
இரு கால்களும் செயலிழந்த தனது காதலிக்கு துணையாக நின்று அவரை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உண்மையான காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு மாவட்டத்தில் பக்தரஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஸ்வப்னா என்ற பெண்ணும், மனு என்ற ஆணும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். அதன்பின் உயர்நிலை படிப்புகளை தொடர முடியாத காரணத்தால் கல்லூரி படிப்பில் இருந்து […]
பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் தையல் எந்திரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கா நகர் செல்லும் சாலையில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ராகுல் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு 7 மணி அளவில் பனியன் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்தவர்கள் உடனடியாக மத்திய நிறுவன உரிமையாளருக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பனியன் நிறுவனத்தில் திடீரென […]
அப்பர் பவானி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிகளில் இருக்கும் செடிகள் மற்றும் மரங்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீ தடுப்பு குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பர் பவானி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் அங்குள்ள செடி, கொடிகள் மற்றும் […]
தனியார் பஞ்சு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மைல்கல் என்ற பகுதியில் தனியார் பஞ்சு மில் அமைந்துள்ளது. இந்த மில்லில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளின் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். அதன்பிறகு அங்கு இருந்த பஞ்சு மூட்டைகளை வேறு பகுதியில் அடுக்கி […]
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புறனபள்ளி, நரசாபுரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் புதிதாக ஆழ்துளை குழாய் […]
இரண்டரை இலட்சம் மதிப்புள்ள செம்மறி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உடையாபட்டி பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகள் மற்றும் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் தனது முப்பது ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தனது வயலில் நடைபெற்ற அறுவடை பணிகளில் ஈடுபட்ட அருள்ராஜ், பணியை முடித்துவிட்டு ஆடுகளை திறந்து விடுவதற்காக அங்கு சென்றபோது, 7 […]
மலையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டு அந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக ருக்மணி என்ற படகில் சென்று உள்ளனர். இந் நிலையில் இந்த ருக்மணி படகின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் படகில் இருந்த மீனவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் திணறினர். அந்த சமயம் புதுச்சேரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் என்ற விமானத்தில் இருந்த வீரர்கள் நடுக்கடலில் […]
வருவாய்த்துறை ஊழியர்கள் வட்டாட்சியர் பயிற்சி ஆணையைத் திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வந்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மாதவரம், அம்பத்தூர், மதுரவாயில் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 4 வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் புதிதாக வந்த ஆர்.கே பேட்டை சேர்த்து தற்போது 9 வருவாய் வட்டங்கள் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை நகர பட்டியலில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கான 4 பதவிக்கும், துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் […]
டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி […]
அதிகளவு பனிப்பொழிவு காரணமாக ஸ்பெயினில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பனியால் மூடப்பட்டு பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பிளோமினா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் பணியால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலைகளில் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. அதோடு […]
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் நிலையில், மேலும் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி போன்றவை 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு பின் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு புரவி புயல் மற்றும் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழை […]
பயன்பாட்டில் இல்லாத அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான அணுமின் நிலையம் ஒன்று செயல்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் மட்டும் அவ்வபோது நடைபெறுகிறது. இந்நிலையில் அணுமின் நிலையத்தில் உள்ள மின் ஒயர் மற்றும் எண்ணெய் போன்றவற்றில் திடீரென தீ பற்றியதால் பல அடி உயரத்துக்கு தீயானது கொழுந்துவிட்டு எரிந்து, அப்பகுதியே கரும் புகையால் சூழ்ந்தது. […]
வனப்பகுதி சாலையில் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் இருக்கின்றன. இவ் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான் உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளை கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளது.இந்நிலையில் பகல் 11:30 மணி அளவில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக […]
சர்வதேச வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி மோடி முதலிடம் என்று JP.நட்டா தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் JP.நட்டா தெரிவித்துள்ளார். மார்னிங் கல்ஸ்ட் நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் படி உலக அளவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்கள் இடையே அதிக புகழ் பெற்று விளங்குவது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 68% ஆதரவும் […]
தங்கை உணவு, தண்ணீரின்றி கணவன் வீட்டார் துன்புறுத்தி வருவதாக மனைவி புகுந்த வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியை அடுத்த மார்க்கெட் லைன் ஏரியாவை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். இவர் அதே பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் தனி குடுத்தனத்தில் வசித்து வந்தார். கணவன், மனைவி […]
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 20 கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், மாணவர் அமைப்பினர் அரசியல் கட்சிகளின் பின்புலத்தைக் கொண்டு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. ஆகவே போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, கல்லூரிகள் படிப்பதற்கு மட்டும் தானே தவிர போராட்டம் நடத்துவதற்கு கிடையாது எனத் […]
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம், கவுன்சிலிங் கொடுக்க சுற்றறிக்கை.. ஆத்திரமடைந்த மாணவர்கள்..! குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் நலத் துறை அதிகாரி இஷாவின் சுல்தானா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை கண்டனத்திற்கு ஆளாக்கியுள்ளது. சுற்றறிக்கையை கண்டு ஆத்திரமடைந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றறிக்கை […]
தூத்துக்குடி அருகே அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரத்ததான கழக நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ரத்ததான கழக உறுப்பினர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு புத்துயிர் இரத்ததான கழக தலைவர் தலைமை தாங்க மற்றவர்கள் அவருடன் சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், மருத்துவமனை வளாகத்திற்குள் சிமெண்ட் […]
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்தக்கூடிய எந்த அமைப்பினருக்கும் காவல்துறை அனுமதி அளிக்காது என சென்னை காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த எந்த அரசியல் கட்சியினருக்கும், அமைப்பினருக்கும் அடுத்த 15 நாள்களுக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்காது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் […]
பொள்ளாச்சி அருகே அரசு துவக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் என்பவர் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்கள் செய்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, கிராம மக்களுடன் இணைந்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் […]
திருவண்ணாமலை அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி நியாயம் கேட்டு தனது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தோறும் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை முதியோர் உதவித்தொகை வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட […]
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது மிகவும் தவறான விஷயம் என எச் ராஜா தெரிவித்துள்ளார் இளையதளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்திற்கு மிகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எச் ராஜா நிருபர்களிடம் தெரிவித்ததாவது, நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கம் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி. அவ்விடத்தில் […]
பாஜகவினர் நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறி விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனைகள் தொடர்ந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா கூறியிருப்பதாவது “நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே சரத்குமாரின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஒன்று ஏற்பட்டது அதன் பின்னர் அவ்விடம் சூட்டிங் எதுவும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடந்ததால் பாரதிய […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவிகளை ஈடுபடுத்திய தனியார் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, சி.பி.எம், காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட்ஸ் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை […]
ஷஹீன்பாக் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில், சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்த ஜேஎன்யுவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும், குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான ஷஹீன்பாக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஷர்ஜீல் இமாம் டெல்லி காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியத் தலைநகர் டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் […]
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் மண்சட்டி, கடப்பாறையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் அதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டமானது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல கட்சிகள் […]
சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் பணம் பெறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். சமீபத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததை மேற்கோள் காட்டிய அவர், அதேபோல் நிர்பயா தாயார் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆஷா […]
தி.மு.க சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் மற்றும் தஞ்சையில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதியளித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாகும். எனவே இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி […]
ஆந்திராவில், தனி தெலுங்கானா போராட்டங்களுக்கு பிறகு, மிக பெரிய போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் பார்த்து வருகிறது, ஆந்திர மாநிலம். மாநிலமாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி, தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தும் போராட்டங்களை, பொதுமக்கள் தலைநகரம் நடத்துவதுதான் வாடிக்கை. ஆனால் ஆந்திராவில் எது தலைநகர் என்பதை நிர்ணயப்பதற்காக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி விவசாயிகளும், பெண்களும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் பேரணிகளை நடத்தி வருவதால், மாநிலமே பரபரத்து கொண்டிருக்கிறது. கடந்த 2014 ம் ஆண்டு […]